முட்டையின் சுவை மாறுபட்டுக்கொண்டே இருப்பதற்கு காரணம்! - மிஸ்டர் ரோனி பதில்கள்

 

 

 

 

Egg, Smiling, Smile, Happy, Yellow, Cooked, Meal
cc

 

 

 

 

 

மிஸ்டர் ரோனி


கால்பந்து போட்டிகளை நாம் பார்வையாளர்களின் கூச்சல் இன்றி பார்ப்பது ஏன் வினோதமாக தோன்றுகிறது?


விளையாட்டு மைதானத்தில் நேரடியாக பார்க்க எதற்கு செல்கிறார்கள். அந்த நேரத்தில் குழுவாக மக்கள் எழுப்பும் பரவசமான கூச்சல், சந்தோஷம், கோபம் என உணர்ச்சிகளின் பீறிடலுக்காகத்தான். அந்த தன்மை டிவியில் பார்க்கும்போது கிடைக்காது. அதேசமயம் பார்வையாளர்களே இல்லாத மைதானத்தில் விளையாடும்போது வீரர்களுக்கு அந்த சூழ்நிலையை எதிர்கொள்வது கடினமாகவே இருக்கும். இனிமேல் நேரடி போட்டியை ஒளிபரப்பினாலும் கூட அதில் செயற்கையான ஒலியை உருவாக்கி பார்வையாளர்களை டிவி சேனல்கள் பார்க்க வைப்பார்கள். ஆனால் அது நிச்சயம் பொருந்தாத ஒன்று. ஆனால் இன்றைய பெருந்தொற்று சூழலில் நமக்கு வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது? உயிரைக் காத்துக்கொள்வதே முக்கியம். அதற்குப்பிறகுதான் மற்றவை.


பொதுமுடக்க காலத்தில் பலரும் தினசரி நடக்கும் பத்தாயிரம் அடிகள் என்பது ஏழாயிரமாக மாறியுள்ளது. இது ஆரோக்கியத்திற்கு கெடுதலா?


தினசரி பத்தாயிரம் அடிகள் நடக்கவேண்டும் என்பது ஒன்றும் மந்திரச்சொல் அல்ல. எனவே அதனை அப்படியே வேதவாக்காக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. 1964ஆம் ஆண்டு மன்போ கெய் என்ற ஆரோக்கிய சாதனம் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது.அதில்தான் முதன்முதலில் பத்தாயிரம் அடி தூரம் ஆரோக்கியம் என்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் 72 வயதான வயதான பெண்களிடம் இதுபற்றி ஆராய்ச்சி செய்தது. பெரும்பாலானோர் 4 ஆயிரம் அடி தூரம் கூட நடந்தார் கள். ஆனால் பலரும் நான்கு ஆண்டுகளுக்கு உள்ளாகவே இறந்துபோய்விட்டனர். எனவே, 150 நிமிடங்கள் உடற்பயிற்சியில் வேகமாக நடப்பதையும் இணைத்துக்கொள்ளுங்கள். எனவே பத்தாயிரம் அடி தூரம் என்பதை மறந்துவிடுங்கள். காலத்திற்கு ஏற்ப மாறுங்கள். அதுவே ஆரோக்கியத்திற்கு நல்லது.


பாடல்களை செயலியில் கேட்கும்போது, அதில் சஃபில் என்ற வசதி எப்படி செயல்படுகிறது?


குறிப்பிட்ட இசையமைப்பாளரின் பாடல்களை நீங்கள் கேட்கிறீர்கள் என்றால், அதில் பல்வேறு பாடகர்கள் பாடிய பாடல்களை சஃபில் அல்காரிதம் தேர்ந்தெடுத்து நமக்கு வழங்குகிறது. உண்மையில் உண்மையான சஃபில் ஆப்ஷன்படி இயங்கினால், பல்வேறு ஆல்பங்களிலிருந்து ஒரே பாடகர் (.கா சாஷா திரிபாதி) பாடிய பாடல்களை தேர்ந்தெடுப்பதுதான் சரி. ஆனால் இப்படி தேர்ந்தெடுத்து பாடல்களை அடுக்கினால் ஒரே பாடகரின் பாடல்கள் போல மாறிவிடும். என்பதால் ஆல்பமும், பாடகரும் மாறி மாறி வரும்படி இந்த அல்காரிதம் அடுக்கப்படுகிறது.


முட்டையின் சுவை ஏன் மாறுபட்டுக்கொண்டே இருக்கிறது?


காரணம் அதனை நீங்கள் எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தேதான் இதைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. முட்டையை பச்சையாக உடைத்துக் குடிக்கும்போது அது தனி ருசியாக இருக்கும். ஆனால் அவை வேகவைத்து சாப்பிடும்போது, ருசி மாறுபடும். ஆம்லெட், ஆப்பாயில், பொரித்து, வறுத்து என சாப்பிடும்போது கூட சேரும் பல்வேறு பொருட்கள் மூலம் அதன் சுவை மாறும். நானும் கூட ஒருமுறை எண்ணெய் ம ணக்க முட்டையை ஆம்லெட் போட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அருகில் வந்த அறை நண்பர், என்னப்பா, தீப எண்ணெய் வாசம் தூக்கலாக வருதே என்றார். அப்போதுதான் எனக்கு தெரிந்தது முட்டை சாப்பிடும் வெறியில் தீப எண்ணெய்யை ஊற்றி ஆம்லெட் போட்டிருந்தேன். என்பது. அப்போது இரண்டு ஆம்லெட்டை சாப்பிட்டிருந்தேன். பொதுவாக, முட்டை புரதம், குளுக்கோஸ் புரியும் வினையை மலியார்ட் என்று குறிப்பிடுகிறார்கள்.


கோடைக்காலத்தில் பசி ஏன் உருவாகுவதில்லை?


பசி உருவாகும். ஆனால் அதில் தீவிரத்தன்மை இருக்காது. காரணம், வெயில்காலத்தில் உடலை அதிக வெப்பத்திலிருந்து காப்பாற்ற வேண்டியுள்ள து. இந்த நேரத்தில் வான்கோழி பிரியாணி, கேஎப்சி பக்கெட் சிக்கன் என வெளுத்துக்கட்டி பீடா போட்டால் உடல் கிரில்டு அடுப்பு போல மாறிவிடும். பொதுவாகவே, உணவு செரிக்கும் நிலையின்போது உடல் வெப்பநிலை கூடும். இதனை தவிர்க்கவே உடல் பசியை வெப்பகாலத்தில் தூண்டுவதில்லை. உடலில் சேமித்து வைத்துள்ள கொழுப்பை எடுத்து சக்தியாக்கிக்கொள்ளும். பொதுவாக, உடலில் உருவாகும் ஆயிரம் கலோரியில் 250 கலோரிகள் மட்டும்தான் உடலுக்கு சக்தியாகிறது. மீதி வெப்பத்தை உருவாக்க செலவிடப்படுகிறது.

நன்றி - பிபிசி சயின்ஸ் போகஸ்



 

 

 

 

 

 

 

 

கருத்துகள்