உலகம் மொத்தமும் விரும்பும் குரல்! லேடி காகா





How Lady Gaga, 'A Star Is Born' lead, stays well | Well+Good
பாடகி லேடி காகா





லேடி காகா


நான் லேடி காகாவை விரும்புகிறேன். அவரின் குரல் இந்த உலகம் மொத்தமும் விரும்பும் கவர்ச்சி, வசீகரம், உற்சாகம், ஊக்கத்தூண்டல் கொண்டது என நம்புகிறேன். லேடி காகா, தனது பாடல்களை வரம்புகள் இன்றி கட்டற்றதாக உருவாக்கி வருகிறார். தனது உள்ளத்தின் வலிமையை பாடல்களில் பிறர் ரசிக்கும்படி செய்கிறார். இதனால் அவரது பாடல்களைக் கேட்கும் யாருக்கும் அதிலுள்ள தனித்துவத்தை புரிந்துகொள்ள முடியும். லேடி காகா மட்டுமல்ல அவரது ரசிகர்களும் தாங்கள் நம்பும் நம்பிக்கை, மதிப்புகளுக்கு எழுந்து நின்று போராடும் தன்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.


அவர் இணையத்தில் ட்ரோல்களுக்கு உள்ளாகும் நபர்களுக்கு ஆதரவாகவும், எல்ஜிடிபிடியினருக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார். அதனை எப்போதும் அவர் பிறருக்காக மாற்றிக்கொள்ளவில்லை. சிறந்த பாடகர், இசையமைப்பாளர், நடனக் கலைஞர் என அத்தனை அம்சங்களையும் கொண்டவர். எ ஸ்டார் இஸ் பார்ன் படத்தில் தன்னை சிறந்த நடிகையாகவும ்நிரூபித்தார். அவர் திரைக்கு முன்னால் செய்வதை விட திரைக்கும் பின்னால் செய்யும் பல்வேறு செயல்பாடுகளை அவரை தனித்துவமிக்க கலைஞராக அடையாளம் காட்டுகின்றன. அவரது பாடல்களை நாம் கேட்கும் வரை அன்பும், கருணையும் உலகில் பல தலைமுறைகளுக்கும் தொடரும்.


செலைன் டையன்




கருத்துகள்