திரையுலகை மிரட்டும் புதிய தலைமுறை நடிகர்கள்! - முக்கியமான மூன்று தென்னிந்திய நடிகர்கள்!
டோவினோ தாமஸ் |
அதிவி சேஷ் |
டேனிஷ் சைத் |
புதிய தலைமுறை நடிகர்கள் இன்று அனைத்து விஷயங்களையும் மாற்றி அமைத்து வருகிறார்கள். தென்னிந்தியாவில் இப்படி பல்வேறு நடிகர்கள் உண்டு. இவர்கள் நடிக்கும் படங்களில் மசாலாத்தனங்களைவிட கதைக்கான முக்கியத்துவமே அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட சிலரைப் பார்ப்போம்..
டோவினோ தாமஸ் 31, கொச்சி
மல்லுவுட் நடிகரான டோவினா, 2012ஆம் ஆண்டு பிரபுவின்டே மக்கள் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு ஏறுமுகம்தான். லூகா, வைரஸ் கோதா என ந டித்த அத்தனை படங்களிலும் முத்திரை பதித்த இளம் நடிகர் இவர். அகில் பால், பாரன்சிக் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நான் நடித்த படங்களில் அதிக வசூல் பார ன்சிக் படத்தில்தான் கிடைத்தது. இத்தனைக்கும் படம் வெளியான கொஞ்ச நாட்களிலேயே லாக்டௌன் வந்துவிட்டது. நெட்பிளிக்ஸில் படத்திற்கு நல்ல ரேட்டிங் கிடைத்துள்ளது.
டோவினோ தனது ஆதர்சமாக கமல்ஹாசனை நினைக்கிறார். இவர் மும்பையில் உள்ள கஃபே ஒன்றில் ந ண்பர்களுடன் இருந்த போது கமல்ஹாசனை சந்தித்திருக்கிறார். உடனே டோவினோ கமலிடம் சென்று பேசியிருக்கிறார். இவரிடம் மலையாளத்திலும், பிற நண்பர்களிடம் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று உரையாடியிருக்கிறார். அந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது என்று நினைவுகூர்கிறார் டோவினோ.
இன்று கலைப்படங்களையும் மக்கள் ரசிக்கிறார்கள். அதே படங்களை தியேட்டரிலும் ரசிக்க தயாராகவே இருக்கிறார்கள். நாம் கதையை உருவாக்கி அதை எப்படி ம க்களுக்கு சொல்லவேண்டும் என்பதை சரியாக கற்பதே முக்கியம். அந்த வகையில் கலைப்படங்கள், வணிகப்படங்கள் என்பதற்கான எல்லைகள் இன்று மெலிந்து வருகின்றன. இரண்டையும் கலந்து கலப்பு மாடலில் படங்களை இப்போது மலையாளத்தில் உருவாக்கி வருகிறார்கள். இந்த வகையில் இதனை புதிய அலை என்று கூறலாம் என்கிறார் டோவினோ.
பொதுமுடக்க காலத்தில் இருக்கிறார் குடும்பத்தோடு இருக்கிறார் டோவினோ. இந்த நேரத்தில் மின்னல் முரளி என்ற சூப்பர் ஹீரோ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இன்னும் படத்தில் 20 சதவீத காட்சிகள் இருக்கின்றன. இந்த பொதுமுடக்க நேரத்தில் குடும்பத்துடனும், வளர்ப்பு பிராணிகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். மற்றொரு மகிழ்ச்சியான செய்தி, இவருக்கு தகாப் என்ற மகன் வேறு பிறந்திருக்கிறான். எனவே மகிழ்ச்சி குறைவேது?
நான் அண்மையில் ரெசிர் இன்செலி என்ற துருக்கிப் படம் பார்த்தேன். இஸ்தான்புல்லில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் மொழி புரியவில்லை. அவர்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடு புதுமையாக இருந்தது. நிபந்தனையற்ற அன்பைப் பேசும் படம் அது. ஆனால் இதுபோன்ற சினிமாக்கள் மனதை ஆழமாக பாதிக்கின்றன. பல்வேறு இடர்ப்பாடுகள் இருந்தாலும் இந்த படம் என்னை காட்சிரீதியாக பெரிதும் பாதித்தது.
அதிவி சேஷ்
34, ஹைதராபாத்
தெலுங்கில் ஷணம், எவரு, குடாச்சாரி என்ற படங்களில் நடித்து ஆச்சரியப்படுத்தியவர். இவர் பாகுபலி படத்தில் பல்வாளத்தேவனின் மகன் பத்ராவாக நடித்திருப்பார். ஆனால் அதற்கு முன்பே, கர்மா - டூ யூ பிலீவ் என்ற பட த்தை எழுதி இயக்கியிருந்தார். அதிவி சேஷூக்கு புதுமையான கதைகளை சொல்லுவது என்றால் அவ்வளவு இஷ்டம்.
பாகுபலி படத்திற்கு பிறகு இவரது வாழ்க்கை மாறியிருக்கிறது. அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறியிருக்கிறார். தெலுங்கில் கிரியேட்டிவிட்டிக்கான இடம் உள்ளது. ஆனால் அதைக்கொண்டு அதிக நாட்கள் இங்கு தாக்குபிடிக்க முடியுமா என்பதில்தான் சவால் உள்ளது. பொதுமுடக்கம் காரணமாக நான் நடித்த மேஜர் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்தி, தெலுங்கில் தயாராகியுள்ள இந்த படம் பான் இந்தியப்படமாக வெளியாகும் என்கிறார் அதிவி.
தெலுங்கில் எப்போதும் சண்டைகளும் குண்டர்களுமாக மசாலா படங்கள்தானே அதிகம் எடுக்கிறார்கள் என்று சொன்னதும் உடனே இடைமறிக்கிறார். முழுக்க அப்படி சொல்லிவிட முடியாது. அர்ஜூன் ரெட்டி இல்லையென்றால் எப்படி கபீர்சிங் வந்திருக்க முடியும்? ராமுடு பீமுடு இல்லையென்றால் ராம் ஆர் ஷ்யாம் வந்திருக்குமா? மரோசரித்திரா இல்லையென்றால் ஏக் துஜே கேலியோ வந்திருக்குமா என்கிறார் அதிவி.
அமீர்கானின் தீவிரமான விசிறி அதிவி சேஷ். ரங்கீலா படத்தில் தெருவியாபாரியிடம் வாழைப்பழம் திருடும் காட்சியை அப்படி சிலாகிக்கிறார். தற்போது குடாச்சாரி, மேஜர் படத்திற்கான அடுத்த பாகங்களை எழுதி வருகிறார்.
எவரு படத்தை ஓரியல் பாலோவின் காண்ட்ரா டியம்போ என்ற படத்தை தழுவி உருவாக்கியிருந்தார். பல்வேறு வெளிநாட்டு படங்களை விரும்பி பார்க்கும் வழக்கம் கொண்டவர் அதிவி சேஷ். அண்மையில் பான்ஸ் லேபிரின்த் என்ற கிரைம் படத்தை பார்த்து வியந்திருக்கிறார். இதுபோன்ற படத்தில் நடிக்ககவேண்டும் என்ற ஆசையிருக்கிறது என்கிறார் அதிவி சேஷ்.
டேனிஷ் சைத்
32, பெங்களூரு
நகைச்சுவை நடிகர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் என பன்முகங்களை தனக்குள் கொண்டவர். சைத் பிரபலமானது, இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் குவாரன்டைன் பற்றி இவர் வெளியிட்ட குறு வீடியோக்களின் வழியாகத்தான். இதற்கு முன்னர் ரேடியோவில் போன் வழியாக திடீரென ஒருவ ருக்கு போன் செய்தி கலாய்க்கும் நிகழ்ச்சி வழியாக பெயர் சொல்லும் பிள்ளையானார்.
இப்போது அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள பிரெஞ்சு பிரியாணி படத்தில் ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். முதன்முதலில் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார் என்றால் அது, ஹம்பிள் பொலிட்டிசியன் நோக்ராஜ் படத்தில்தான். நான் நடித்துள்ள பிரெஞ்சு பிரயாணி படத்தை பாருங்கள். அது உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்று சொல்லமாட்டேன். ஆனால் கொஞ்சம் மனச்சோர்வை போக்கும் என்று சொல்ல லாம் என்கிறார்.
பகத் பாசிலின் தீவிர ரசிகராக உள்ளார் சைத். தனக்கு பிடித்த படங்களாக கும்பளாங்கி நைட்ஸ், டிரான்ஸ் ஆகிய படங்களைக் காட்டுகிறார். அதோடு வெளிநாட்டு படமாக ஸ்பானிஷ் படமாக பிளாட்பார்மை சுட்டிக்காட்டுகிறார். அப்படத்தின் கதை போலத்தான் சமூகத்தில் நாம் வாழுகிறோம். மனிதர்கள் நிலப்பரப்பு ரீதியாக வேறுபட்டாலும் நமது அடிப்படை உணர்ச்சிகள் ஒன்றுதான் என்று புன்னகைக்கிறார் சைத்
சிக்யூ
கருத்துகள்
கருத்துரையிடுக