உலக மக்களை அன்பால் இணைத்த பாடகி டெய்லர் ஷிப்ட், டிஸ்னியை உயர்த்திய இயக்குநர், சௌதி புரட்சித்தலைவி! - டைம் 2019
taylor swift |
டைம் செல்வாக்கு பெற்ற தலைவர்கள்!
2019
பாக் ஐகர்
வால்ட் டிஸ்னி இன்றும் மிகப்பெரிய திரைப்பட, பொழுதுபோக்கு நிறுவனமாக இருக்க காரணம் நான்கு விஷயங்கள்தான். புதிய விஷயங்கள் மீதான ஆர்வம், நிலையான தன்மை, நம்பிக்கை, துணிச்சல். இந்த நான்கையும் பிறர் கடைபிடிக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் பாப் ஐகர் அதனை உறுதியாக கடைபிடிக்கிறார் என்பது டிஸ்னி நிறுவனம் பெறும் அடுக்கடுக்கான வெற்றி வழியாகவே தெரிகிறது.
தொழில்நுட்பங்களின் மீதான பாப்பின் ஆர்வம் பாராட்டுக்குரிய ஒன்று. அதனால்தான் இன்று டிஸ்னி ஓடிடி தளங்களில் வெற்றிமேல் வெற்றி பெற்று வருகிறது. நீண்டகால நோக்கில் இது பயன்தரும் திட்டம். அடுத்து செஞ்சுரி பாக்ஸ், பிக்சார் ஆகிய நிறுவனங்களை கையகப்படுத்திய செயல்பாடுகளைச் சொல்லலாம். இதுவரை வெளியான டிஸ்னியின் இருபது படங்களில் 11 படங்கள் டிஸ்னியின் பெயரைச் சொல்லும் படங்களாக உருவாகியுள்ளன. இதற்கு காரணம் பாப் ஐகரின் தொலைநோக்கான முயற்சிகள்தான்.
வால்ட் டிஸ்னியைப் போலவே சிந்தித்து நிறுவனத்தை லாபகரமாகவும், வெற்றிகரமாகவும் நடத்திச்செல்கிறார் பாப் ஐகர்.
மைக்கேல் ஆர். ப்ளூம்பெர்க்.
2
டெய்லர் ஷிப்ட்
நான் பல்லாண்டுகளாக டெய்லர் ஷிப்டின் பாடல்களைக் கேட்டு வருகிறேன். அப்போது நான் அவரைச் சந்தித்தது இல்லை. அவரை சந்தித்தபோது அவர் மனிதநேயமிக்க மனிதராக இருப்பது பற்றி அறிந்தேன். டெய்லர் ஷிப்ட் தனது அன்பு நிறைந்த இதயத்தால் பல லட்சம் மக்களை இணைத்துள்ளார். அவரது பாடல்களை இன்று உலகம் முழுக்க கொண்டாடி வருகின்ற னர். அவரது இசையும் உற்சாகமான அவரது தோற்றமும் மக்களை கவர்ந்தன. 1989ஆம் ஆண்டு வேர்ல்டு டூரின்போது இதனை நான் அறிந்தேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் டெய்லர் ஷிப்டைக் காண அங்கு குவிந்திருந்தனர். வயதானவர்களை இளமையானவர்களாக டெய்லர் நினைக்க வைத்த ஆச்சரியம் அங்கு நடந்தது. இளமையானவர்கள் மேலும் உற்சாகம் கொண்டவர்களாக மாறியிருந்தனர். நான் எனது இசை மூலம் செய்யவேண்டிய பணியாக நினைத்த தும்கூட இதுதான்.
ஷான் மென்டிஸ்
3
லூஜெய்ன் அல் ஹாதுல்
2018ஆம்ஆண்டு சௌதி அரசு செய்த முக்கியமான சீர்திருத்தம் பெண்கள் அங்கு வாகனம் ஓட்டலாம் என்று கொண்டு வந்தது. இதற்கு முக்கியமான காரணம், லூஜெய்ன் என்ற பெண்மணி. இவர் சட்டங்களோடு பல்லாண்டுகளாக போராடி வந்தார். 2015ஆம் ஆண்டு பெண்கள் முனிசிபல் தேர்தலில் போட்டியிடும் அனுமதிக்காகவும், நாட்டை விட்டு வெளியே செல்லவும், வேறு நாட்டவரை திருமணம் செய்யவும் அனுமதி வேண்டி அரசின் சட்டதிட்டங்களோடு போராடினார். 14 ஆயிரம் பேரின் கையெழுத்துகளைப் பெற்று அரசுக்கு லூஜெய்ன் அனுப்பினார். இதற்காக அவருக்கு சிறை தண்டனை கிடைத்தது. அவருக்கு மட்டுமல்ல அவரைப் போல போராடிய அனைவருக்குமே தண்டனை கிடைத்தது. இன்று சௌதி அரசு செய்துள்ள நவீன சீர்திருத்தங்கள் அனைத்துமே லூஜெய்ன் போராடி, அரசுக்கு அறிவுறுத்தியதால் நிகழ்ந்தது. இன்னும் கூட அவர் சிறையில்தான் இருக்கிறார். காரணம், சௌதி அரசின் சகிப்பின்மை, எதேச்சதிகாரத் தன்மையால்தான். தான் சாதித்து உருவாக்க நினைத்தது
எப்படியும் நிறைவேறிவிட்டது என்ற செய்தியை அவர் சிறையில் இருந்தாலும் அறிந்துகொண்டு மகிழ்ந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
சாரா லெ வொய்ட்சன்
கருத்துகள்
கருத்துரையிடுக