மக்களின் உரிமை காத்த சட்ட வல்லுநர், வல்லுறவு தகவல்களை வெளிப்படுத்தி உளவியல் பேராசிரியர்!- டெஸ்மாண்ட், கிறிஸ்டைன்
டைம் செல்வாக்கு பெற்ற தலைவர்கள்
டெஸ்மாண்ட் மீடே
டெஸ்மாண்ட் மீடெ, அமெரிக்காவில் 1967ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று பிறந்தார். சட்டத்தில் பட்டப்படிப்பு படித்துள்ளார். அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு வேலை அவசியமானது. அப்போதுதான் கல்விக்காக வாங்கிய கடனை முழுமையாக அடைக்க முடியும். தங்கும் இடத்திற்கான வாடகையை தர முடியும். இப்படி தர முடியாமல் பலர் தெருவில் வசிப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இவர்களுக்காகத்தான் டெஸ்மாண்ட் போராடி வருகிறார். புளோரிடாவில் வாழும் மக்களின் வாழ்வுக்காக போராடி அரசுடன் வாதிட்டு வருகிறார். இங்கு வாழும் பலரும் மேற்சொன்னபடி கடன் வாங்கி அதனை கட்டமுடியாமல் திணறுபவர்கள், தற்கொலை செய்துகொள்ள முயல்பவர்கள் ஆகியவர்களுக்காக உழைத்து வருகிறார். கடனை கட்ட முடியாதவர்கள் மீது அரசியலமைப்புச் சட்டப்படி மோசடி வழக்கு பதியப்படும். இதனை சட்டப்படி மாற்றுவதற்கு 60 சதவீத மக்களின் வாக்க்குகள் தேவை. 2018ஆம் ஆண்டுப்படி 65 சதவீத வாக்குகள் டெஸ்மாண்டின் உழைப்புக்கு கிடைத்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் எந்த குற்றமற்றவர்களாக மாறுவார்கள் என நம்பலாம். அதற்கு ஒரே காரணம், டெஸ்மாண்டின் கடின உழைப்புதான்.
ஸ்டேசி ஆப்ராம்ஸ்
கிறிஸ்டைன் பிளாசி போர்டு்்
அமெரிக்காவில் 1966ஆம் ஆண்டு பிறந்தவர், கிறிஸ்டைன் பிளாசி போர்டு. ஸ்டான்ஃபோர்டு, பெப்பர்டைன் பல்கலைக்கழகத்திலும் படித்த உளவியல் பேராசிரியர். இவர் சாதாரணமாக பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தால் நாம் அவரைப் பற்றி பேசியிருக்க மாட்டோம். பாலியல் வல்லுறவுகளால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி அளவிடுவதற்கான புள்ளியல் முறையை உருவாக்கியவர். அதனால் விஷயம் கண்ணீர் சொரியக்கூடிய இருந்தாலும் இவரின் அறிவியல் முறையால் பல பெண்களின் பிரச்னை அரசுக்கு தெரியவந்திருக்கிறது.
தன்னுடைய ஆசிரியர் பணி வெற்றிகரமாக சென்றாலும் கூட நாட்டின் முன்னேற்றத்திற்காக இப்படி ஒரு செயல்பாட்டை மேற்கொண்டு அனைவரையும் கவர்ந்துள்ளார். பலரும் கண்டுகொள்ளாத விவகாரத்தின் மீது ஆர்வம் கொண்டு அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு உழைத்து வருகிறார். இதில் அவருக்கு தனிப்பட்ட ரீதியில் பெரிய பயன்கள் ஏதுமில்லை என்ற நிலையில் இதனை அவர் செய்து வருகிறார் என்பதுதான் முக்கியமானது.
கமலா ஹாரிஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக