அனைத்து சாதியினரும் அர்ச்சகரான தடையாக இருக்கும் பார்ப்பனர்கள்! - 13 ஆண்டுகளாக காத்திருக்கும் மாணவர்கள்
காத்திருக்கும் முப்புரிநூல் உரிமை!
தமிழ்நாட்டில் சுவரில் என்னென்ன வரையலாம் என்று சிலர் யோசித்துக்கொண்டிருக்கின்றனர். சிலர் நாளைக்கு யாருக்கு பூஜை என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றனர். ஒருவகையில் தேசிய கட்சியான பாஜக தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கான பல்வேறு வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறது. ஆனால் பதிமூன்று ஆண்டுகளாக பூணூல் தரித்து தமிழக கோவில்களில் அர்ச்சராவதற்கு காத்திருக்கும் 207 பேர்களை யாருமே கண்டுகொள்வதாக தெரியவில்லை. இதில் இரண்டே இரண்டு பேருக்கு மட்டும் அர்ச்சகர் வேலை தரப்பட்டுள்ளது. இப்பட்டியலிலுள்ள இரண்டு பேர் இறந்துவிட்டனர். எனவே, தற்போது 203 பேர் காத்துக்கிடக்கின்றனர்.
தேர்வான மாரிச்சாமி, தியாகராஜன் இருவரும் மதுரையில் பணிபுரிந்துவருகின்றனர். இவர்கள் விநாயகர், அய்யப்பன் என இரு தெய்வங்களுக்கு பணிவிடைகள் செய்து வருகின்றனர். இவர்களுக்கு பதினொருமணி நேர வேலை. மாதம் 9500 சம்பளம் வழங்கப்படுகிறது. பிற வேலைகளைப் போலவே இதில் சாதியைவிட அர்ச்சகரின் தகுதிதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது என அரசு பயிற்சி அர்ச்சகர் சங்க தலைவர் ரங்கநாதன் கூறுகிறார்.
தமிழக அரசின் வசம் 38 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அவற்றில் வேலை காலிப்பணியிடங்கள் இல்லை என்று பச்சை பொய் கூற முடியாது. அதில் பிற சாதி அர்ச்சகர்களை நியமிக்க தடையாக இருப்பது பார்ப்பனர்கள்தான். 2007இல் தமிழக முதல்வர் தனது சமூக நீதித் திட்டப்படி 207 மாணவர்களுக்கு அர்ச்சகராகும் உரிமையை பெற்றுத் தர முனைந்தார். இவர்களும் 18 மாத படிப்பைப் முடித்துவிட்டனர். ஆனால் பார்ப்பனர்கள் இவர்கள் வேலைவாய்ப்புக்கு தடை செய்ய ஆகமங்களைக் காரணம் காட்டினர். பெரிய கோவில்களில் வேலைவாய்ப்புகள் இருந்தால், அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமல் தங்கள் உறவினர்களைக் கொண்டே நிரப்பிக்கொண்டார்கள். இதனால் பிற சாதியினர் கோவில்களுக்கு உள்ளேயே செல்ல முடியாத நிலை. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிட்டதில் அது பார்ப்பனர்களுக்கு ஆதரவாக சென்றுவிட்டது.
படிப்பை முடித்த மாணவர்கள், தங்களது குரு மூலம் தீட்சை பெறவேண்டும். அதாவது முப்புரி நூலை மார்பில் அணிவதுதான் இந்த சடங்கு. இவையன்றி பல்வேறு கோவில்களிலும் அர்ச்சகராக சில தனித்துவமான சடங்குகள் உண்டு.
2015ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அர்ச்சகர்களுக்கு ஆதரவாக கோவில்களில் அவர்களை பணியமர்த்த உத்தரவிட்டது. ஆனால் அதிமுக அரசு இதைப்பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை. தனது கட்டுப்பாடுகளிலுள்ள பெரிய கோ்வில்களை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தவில்லை. அர்ச்சகராவதற்கு படித்துவிட்டு காத்திருந்து பொறுக்கமுடியாமல் அமைதி முறையில் போராடியவர்களை 2010ஆம் ஆண்டு இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கினர். இதுபற்றிய எப்ஐஆர் கூட காவல்துறையில் பதிவாகியுள்ளது. இப்போது திடீரென இந்து முன்னணி தலைவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம். அவர்களுக்கு துணை நிற்போம் என்று பேசியிருக்கிறார். என்ன காரணமோ, கடவுளுக்கே அது தெரியும்.
அவுட்லுக்
ஜி.சி. சேகர்
கருத்துகள்
கருத்துரையிடுக