காதலுக்கு உதவி செய்து வங்கிக்கொள்ளையில் மாட்டிக்கொள்ளும் ஜாலி திருடர்கள்! - கிரேசி கோபாலன்

 

 

Crazy Gopalan Full Movie, Watch Crazy Gopalan Film on Hotstar

 

 

 

கிரேசி கோபாலன் மலையாளம்

இயக்கம் தீபு கருணாகரன்
 இசை ராகுல் ராஜ்
 ஒளிப்பதிவு

குறிப்பிட்ட ஊரில் மட்டும் திருடன், யார் வீட்டில் எந்த பொருட்களை வாங்கி வைத்தாலும் திருடிக்கொண்டு போய் விற்றுவிடுகிறான். அதனை திருடிக்கொண்டு போகும்போது ஒரு செய்தியையும் எழுதி வைத்துவிட்டு செல்கிறான். எனக்கு உங்களுடைய பொருள் பிடித்திருக்கிறது. எடுத்து்க்கொள்கிறேன் என்று. மற்றபடி திருடன் யார், எப்படி இருப்பான் என்பது திருட்டு கொடுத்தவர்களுக்கோ அந்த ஊர் மக்களுக்கோ கூட தெரியாது. அப்படி ஒரு நூதனமான நுட்பமான திருடன்தான் கோபாலன். அவன் குறிப்பிட்ட கிராமத்தை குறிவைத்து திருடுகிறான், அதற்கு என்ன காரணம் என்பதை காமெடியுடன், நெகிழ்ச்சியான சம்பவங்களை இணைத்து சொல்லியிருக்கிறார்கள்.

பக்கா

ஜனப்பிரியன் திலீப்புடைய படம், படம் தொடங்கி இருபது நிமிடங்களுக்குப் பிறகுதான் அறிமுகம் ஆகிறார். அப்புறம் படமே டாப் கியருக்கு மாறி காமெடியில் வெற்றிக்கொடி நாட்டுகிறது. திலீப், சலீம் சந்திக்கும் காட்சி, அவர்கள் ஒன்றாக திருட திட்டம்போடும் காட்சிகள் என அனைத்தும் சிறப்பாக காட்சி படுத்தப்பட்டு இருக்கிறது. கார்பென்டராக சிக்கி போலீசில் திலீப் அண்ட் கோவால் மாட்டி உதைபடும் பாத்திரத்தில் ஹரி ஶ்ரீ  அசோகன் ஆச்சரியப்படுத்துகிறார். முதல் பாதியில் திலீப்புக்கு உதவுகிறார் சலீம் என்றால் இரண்டாவது பாதியில் ஜகதி ஶ்ரீகுமார் கதையை காமெடியாக நடத்திச் செல்ல கைகொடுக்கிறார். இதில் டயானாவாக வரும் சுனிதாவுக்கு நடிக்க ஏதும் வாய்ப்பு இல்லை. அழகான உடையில் சில காட்சிகளில் வந்து போகிறார். மனோஜ் கே ஜெயன், பாசமுள்ள அண்ணன் போல வந்து இறுதியில் நினைத்து பார்க்க முடியாத வில்லன் ஆவதுதான் முக்கியமான ட்விஸ்ட்.

டொக்கு

வங்கியை இவ்வளவு அலட்சியமாக பாதுகாப்பார்கள் என்று நம்பவே முடியவில்லை. கோர்ட்டிலிருந்து குற்றம்சாட்டப்பட்டவர் இவ்வளவு எளிதாக தப்பிக்க முடியும் என்று நம்ப முடியவில்லை.

லாஜிக் பார்க்காமல் ஜாலியாக பார்க்கவேண்டிய படம்.

கோமாளிமேடை டீம்


 

கருத்துகள்