தனித்துவம் வாய்ந்த சாகச செயல்களை விரும்பும் பெண் காணாமல் போனால்... பேப்பர் டவுன்ஸ் 2015
பேப்பர்டவுன்ஸ்
பேப்பர்டவுன்ஸ்
Directed byJake Schreier, Based onPaper Towns
by John Green,
Music by | Son Lux[a] |
---|---|
Cinematography | David Lanzenberg |
க்வென்டினுக்கு மார்கோ என்றால் ரொம்ப பிடிக்கும். மார்கோவுக்கு மனிதர்களை விட அட்வென்ச்சர் என்றால் அவ்வளவு பிரியம். ஒருநாள் க்வென்டினை அழைத்துக்கொண்டு தன்னை ஏமாற்றிய ஆண்தோழனை அவமானப்படுத்தி, அவனது நண்பர்களுக்கும் பதிலடி கொடுக்கிறாள். அடுத்தநாள் பார்த்தால் மார்கோ அவள் வீட்டில் காணவில்லை. எங்கே போனாள் என்றே தெரியவில்லை. ஆனால் க்வென்டினுக்கு மட்டும் தெரியும் பல்வேறு க்ளூக்களை விட்டுச்செல்கிறாள். க்வென்டின் அதைத்தேடிக்கொண்டு நியூயார்க் வரை செல்கிறான். அங்கு அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்துக்கிடக்கிறது., என்ன அது என்பதுதான் கதையின் முக்கியமான பகுதி.
படத்தில் மார்கோ என்ற டீனேஜ் பெண்ணின் கதாபாத்திரம்தான் மிகவும் முக்கியமானது. சுதந்திரம், காதல், நட்பு என அனைத்திலும் தெளிவாக இருக்கிறாள். பெற்றோரின் அடையாளத்தில் வாழாமல் சுயமாக வாழ விரும்பும் பாத்திரம். உண்மையில் இந்த பாத்திரம் யாருக்குமே அடிப்படையில் புரியாதது போல இருக்கும். ஆனால் யோசித்தால், சாகசம் விரும்பும மனங்களுக்கு ஒரு நகரில் வீட்டில் கல்லூரியில் அடங்கி படித்து என்ன செய்வது என்ற கேள்வி இயல்பானது.
மார்கோவின் மனதை க்வென்டின் உணர்வதுதான் இறுதிப்பகுதி. அவன் காதலித்த ஒரே பெண் அவள்தான். அந்த நினைவுடன் அவன் பள்ளியில் பட்டம் பெற்று நண்பர்களுக்கு வாழ்த்துகள் சொல்லி பிரிவதுடன் படம் நிறைவு பெறுகிறது. அதன் பிறகு படம், மார்கோ பற்றிய தகவல்கள் மூலம் மனதிற்குள் ஒட தொடங்குவதுதான் படத்தின் முக்கியமான வெற்றி.
மார்கோ போன்ற தனித்தன்மை கொண்ட பெண் கதாபாத்திரங்கள் ஆங்கிலப்படங்களில் குறைவு. அதை படம் பார்க்கும்போது நீங்களும் உணரமுடியும்.
தனித்துவமான பெண்!
கோமாளிமேடை டீம்
சினிமா விமர்சனம், ஆங்கிலம், காதல், சாகசம், தனித்துவம், பெண்
கருத்துகள்
கருத்துரையிடுக