ஐபிஎம் கணினியை மிஞ்சும் புதிய ரக குவாண்டம் கணினி!

 

 

 

 

 

Monitor, Binary, Binary System, Computer, Binary Code
cc

 

 

புதிய குவாண்டம் கணினி!

 

அமெரிக்காவைச் சேர்ந்த ஹனிவெல் கணினி நிறுவனம், உலகிலேயே சக்தி வாய்ந்த குவாண்டம் கணினியைக் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது.

ஹனிவெல் நிறுவனம் கூறியபடி, குவாண்டம் கணினி அமைந்தால் அது ஐபிஎம் நிறுவனத்தின் குவாண்டம் கணினிக்கு அடுத்தபடியாக அமையும். பொதுவாக இக்கணினிகளின் கணக்கிடும் திறன், தவறுகளின் எண்ணிக்கை ஆகியவை அதன் குவாண்டம் வால்யூம் அளவைப் பொறுத்து அமையும். ஹனிவெல் குவாண்டம் கணினியின் அளவு 64 குவாண்டம் பிட்ஸாக உள்ளது. இது ஐபிஎம் கணினியின் திறனுக்கு அடுத்தபடியான திறன் கொண்ட கணினி ஆகும். ”குவாண்டம் கணினியின் திறனை அளவிட 120 அல்காரிதம்கள் பயன்படுத்தப்படுகின்றன. எங்களது கணினி, அதிக தகவல்களைக் கொண்ட கணிதத்தை செய்யும் திறன் பெற்றது” என்கிறார் ஹனிவெல் நிறுவனத்தின் இயக்குநரான டோனி உட்லே.

இக்கணினி, எந்திரவழி கற்றல், வேதியியல், பொருள் பற்றிய அறிவியல் ஆகிய துறைசார்ந்த அறிவைக் கொண்டது. மேலும் இக்கணினியின் திறன் காலத்திற்கேற்ப அதிகரிக்கும்போது, பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரச்னைகளை சமாளிக்கும் திறன் பெற்று விளங்க வாய்ப்புள்ளது. அதிக திறன் கொண்ட பிரச்னைகளை கையாளும் குவாண்டம் கணினிகளை குவாண்டம் சூப்பர்மேசி என்று அழைக்கின்றனர். இவ்வகையில் குவாண்டம் கணினியை கூகுள் நிறுவனம் முன்னதாகவே உருவாக்கிவிட்டது. இக்கணினி 53 குவாண்டம் பிட்ஸ் திறனில் இயங்குகிறது.

ஹனிவெல் நிறுவனம், தங்களது தயாரிப்பான குவாண்டம் கணினி பற்றிய பெருமையோடு நின்றுவிடவில்லை. அதனை தங்களுடைய தினசரி பணிகளில் பயன்படுத்திக்கொள்ள ஆயத்தம் செய்து வருகின்றனர். நாங்கள் பங்களித்துள்ள பல்வேறு துறைகளிலும் குவாண்டம் தொழில்நுட்பம் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையோடு உழைத்து வருகிறோம் என்கிறார் ஹனிவெல் நிறுவன இயக்குநர் டோனி உட்லே.

தகவல்: நியூ சயின்டிஸ்ட்


கருத்துகள்