எதிர்காலத்தில் உணவு எப்படியிருக்கும்? டேட்டா கார்னர்
cc |
உணவு
இனி எதிர்காலத்தில் நமக்கு பிடித்த உணவு என்று ஒன்றை சாப்பிட முடியாது என்றே கிடைக்கும் செய்திகள் நினைக்க வைக்கின்றன. பொதுவாக நமக்கு பிடித்த காய்கறிகளை சாப்பிடுகிறோம். இறைச்சி பிடித்திருக்கிறவர்கள் அதனை சாப்பிடுகிறார்கள். ஆனால் இனி கார்பன் வெளியீடு குறைவாக உள்ள பொருட்களை சாப்பிடச்சொல்லி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தலாம். அதனை அரசு விதிகளாக கூட மாற்றலாம். குறிப்பிட்ட விளைபொருட்களை விளைவிக்க கார்பன் வெளியீடு அதிகரிக்கிறதா என்று பார்த்து அதனை ஸ்டிக்கராக ஒட்டிக்கூட பொருட்களை விற்பார்கள். உணவகங்களில் கார்பன் வெளியீடு அதிகம் கொண்ட இறைச்சி உள்ளிட்ட உணவுகளுக்கு அதிக வரி விதிக்கப்படலாம்.
பிரான்சில் நடந்த யெல்லோ வெஸ்ட் போராட்டம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? எரிபொருட்களால் இயங்கும் வாகனங்களுக்கு கார்பன் வரியை இம்மானுவேல் மாக்ரான் விதித்தார். நாடே போராட்டங்களால் தடுமாறிவிட்டது. அதுபோன்ற சமாச்சாரங்கள் உணவு விஷயங்களில் நடைபெறலாம். குறிப்பிட்ட பெருநிறுவனங்களின் கைகளில் விவசாய நிலங்கள் செல்லும்போது, அவர்கள் இதனை சாத்தியப்படுத்துவார்கள். அதாவது, மக்கள் என்ன சாப்பிடவேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம். இப்போது இதைப்படிக்க இப்படியெல்லாம் நடக்குமா என்று தோன்றும். ஆனால் உலகம் முழுக்க ஒரே வகை உணவு , ஒரே வகை குளிர்பானம் என்றால் நிறுவனத்தி்ற்கு எவ்வளவு லாபம் என்று நினைத்து பாருங்கள். ஒகே இப்போது உணவு பற்றிய சிம்பிளான டேட்டா ஒன்றைப் பார்ப்போம்.
2050ஆம் ஆண்டில் இறைச்சியை சாப்பிடும் போக்கும் உலக நாடுகளில் 73 சதவீதம் அதிகரிக்கும். வருமானம், நகரமயமாதல் ஆகியவை இதனை வேகப்படுத்தும்.
2050ஆம் ஆண்டில் மக்கள்தொகை 9.7 பில்லியன்களாக அதிகரிக்கும். அதுமட்டுமா, அவர்களுக்கான உணவுத்தேவையும் கூடும். ஒரு கிலோ மாட்டு இறைச்சியை உற்பத்தி செய்ய 15 ஆயிரம் லிட்டர் நீர் தேவை. இதனை அரிசியோடு ஒப்பிட்டால் 2500 லிட்டர் நீரே போதுமானது.
உலகம் முழுக்க வாழும் கால்நடைகள், பண்ணை விலங்குகளால் அதிகரிக்கும் கார்பன் வாயுவின் அளவு ஆண்டுக்கு 7.1 டிரில்லியன் கிலோ.
உலகில் வாழும் 68 சதவீத மக்கள் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் மாட்டு இறைச்சியை உணவாக உண்ண விருப்பம் தெரிவித்துள்ளனர்.
விவசாயத்தைப் பொறுத்தவரை இன்று அக்ரோஈகோலஜி என்ற பதம் டிரெண்டிங்கில் உள்ளது. இயற்கைக்கு எதிராக பொருட்களை பயன்படுத்தி பயிர்களை விளைவிக்காமல், குறைந்தளவு வளங்களில் பயிர்களை வளர்க்கும் முறை. இந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமந்த்குமார் என்பவர் மூன்றரை டன்கள் அரிசியை விளைவித்து சாதனை புரிந்திருக்கிறார்.
ஜோஸ் காப்படிஸ், டாம் அயர்லாந்த், ஜேவி சமாரி
பிபிசி
கருத்துகள்
கருத்துரையிடுக