செக்ஸ் பற்றி விலாவரியாக பேசுவோம் - யூடியூப், இன்ஸ்டாகிராம் பெண்களின் சாதனை

 

 

 

First Time Sex | Leeza Mangaldas - YouTube
லிசா மங்கல்தாஸ்

 

 

 


செக்ஸ் பற்றி விலாவரியாக பேசுவோம் - யூடியூப், இன்ஸ்டாகிராம் பெண்களின் சாதனை

பொதுவாக செக்ஸ் பற்றி யார்தான் பேசுவதில்லை. பெரும்பாலான நேரம் செக்ஸ் எண்ணங்கள் வலம் வராத ஆண்களும், பெண்களும் கிடையாது. இதை மையமாக வைத்தே பல்வேறு பொருட்களையும் கூட தயாரிக்கிறார்கள். அவையும் சந்தையில் நன்றாக விற்கின்றன. இன்றுவரையில் எக்ஸ்வீடியோஸ், பார்ன்ஹப் ஆகிய தளங்கள் பார்வையாளர்கள் பார்வையில் முன்னணியில் உள்ளன. காரணம், மனிதர்கள் பிறப்பதற்கு காரணமான இயற்கையான உணர்வு மீதான பற்றுதல்தான் காரணம். இதனை யாரும் உருவாக்குவதில்லை. இயற்கையிலேயே உருவாகும் உணர்வு இது. கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் என தியரியாக நிறைய படித்தாலும் பிராக்டிகல் என்று வரும்போது பக்கத்து சீட்டு பையனின் பேப்பரை பார்ப்பது போலத்தான் நிலைமை இருக்கிறது. பாலியல் கல்வி சார்ந்தும் அப்படிப்பட்ட நிறைய கேள்விகள், சந்தேகங்கள் உண்டு. இதனை பேசும்போது பலர் வித்தகர்கள் போல பேசுவார்கள். காமெடியாக சிரிப்பார்கள். உண்மையில் அனைவரும் இதுபற்றி தெரிந்திருப்பது மிகவும் முக்கியம். அதனை யூடியூப் வழியாக பெண் ஒருவர் செய்கிறார் என்றால் சும்மாவா?


 

https://i.ytimg.com/vi/yiRavG6FqKs/maxresdefault.jpg


அவரது வீடியோக்களை பார்த்தால், செக்சுக்காக பயன்படுத்தும் வைப்ரேட்டர்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். பின்னர் அப்படியே பேசி பாலியல் கல்வி சார்ந்த விஷயத்தில் வந்து நிற்கிறார்கள். லிசா மங்கல்தாஸ் உருவாக்கியதுதான் இது. தனது 25 வயதில் பாலியல் சார்ந்த பல்வேறு சந்தேகங்கள் எழுந்தாலும் அதனை யாரிடம் கேட்பது என தவித்திருக்கிறார். உடலில் சுக தூண்டல்களை கொண்ட பகுதிகள் என்பதை அறியவும் அவருக்கு ஆசை இருந்திருக்கிறது. அந்த சமயத்தில் எனக்கு பல்வேறு கேள்விகள் எழுந்தன. பெண்களின் சந்தோஷம், உச்சநிலை, அந்தரங்கமான சுக தூண்டல் பகுதிகள் என .. ஆனால் இவற்றை யாரிடம் சென்று கேட்பது என்று எனக்கு தெரியவில்லை. சந்தோஷம் என்பது இயல்பாக கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் கூட போகலாம் என்ற நிலை இருந்தது என்கிறார் லிசா. இந்த பிரச்னைகள் பிறருக்கும் இருக்கும் என்றுதான் யூடியூபில் அதனைப் பற்றி பேசத்தொடங்கினார். பலருக்கும் பிறரது விஷயங்களைப் பற்றி பேசும்போது காமெடியாகத்தான் இருக்கும். ஆனால் தனக்கு நடக்கும்போது அது கடினமாகவே இருக்கும் என்பவர், பெண்களுக்கான கருத்தடை சமாச்சாரங்கள், உச்சநிலை என ஆல் இன் ஆல் அனைத்து விஷயங்களையும் பேசுகிறார். இதனால் அவரது வீடியோக்கள் 70 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.

பெரும்பாலும் இங்கு சிக்கலாக பார்ப்பது என்பது பெண்கள் இதனை பேசுகிறார்கள் என்ற தன்மையைத்தான். ஆனால் லிசா மட்டுமல்ல இன்னும் நிறைய பெண்கள் இதனைப் பற்றி தங்களால் முடிந்தளவுக்கு பேச முன்வந்திருக்கிறார்கள். அவர்களிடம் பேச சென்றபோது, அப்படியா? இப்போதாவது பேச முன்வந்தீர்களே என பெருமூச்சு விட்டார்கள். அதில் ஒருவர்தான் இந்திரஜா தேவ்பிரியம். இவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கிறார். அதில் 4500 பேர் இவரது கணக்கை பின்தொடர்கிறார்கள்.

35 வயதான பெண் ஒருவரிடம் பேசியபோதுதான் அவருக்கு பாலியல் சமாச்சாரங்களைப் பற்றி பேசலாம் என்று எண்ணம் வந்திருக்கிறது. அந்த பெண்மணி நன்றாக படித்தவர். உலகம் சுற்றியவர். இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு பெண்களுக்கு உடலுறவால் சந்தோஷம் கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்திரஜா, தனது கணக்கின் வழியாக பெண்களுக்கான சுய இன்பம் முதல் உடலுறவு வழியாக பரவும் நோய்கள் வரை விலாவரியாக பேசுகிறார். உளவியல் மருத்துவர் தன்வி மாலிக், தன் இன்ஸ்டாகிராம் கணக்கு வழியாக பெண்களுக்கு உடலுறவில் கிடைக்கும் மகிழ்ச்சி, பாலியல் துணை இல்லாதபோது ஏற்படும் தனிமைத்துயர், மனச்சோர்வு ஆகியவற்றை பற்றியும் எழுதி வருகிறார். இதில் பல நண்பர்களின் பங்களிப்பும் உண்டு. பெரும்பாலும் விவகாரத்து வாங்கியவர்கள் தனியாக இருக்கும்போது அவர்களுக்கு ஏற்படும் துயர்கள், வேதனை , வலி ஆகியவற்றை முக்கியமான கருப்பொருளாக தன்வி கொண்டிருக்கிறார். கூடவே இன்னொரு முக்கியமான கருத்தையும் சொல்லுகிறார். அமெரிக்காவில் இதுபோல பல்வேறு கருத்துகளை பகிரும் சமூக வலைத்தள கணக்குகள் உண்டு. அவற்றை பலரும் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் இந்தியாவில் இதனை பலர் சரியான முறை என்று கருதுவதில்லை. ஆனால் ரகசியமாக இதனை படிக்கிறார்கள். பகிர்கிறார்கள் என்று கூறுகிறார்.

நடாஷா பி போன்றோர் இ - வணிக நிறுவனங்களோடு இணைந்து செக்ஸ் பொம்மைகளை எப்படி பயன்படுத்துவது என விளக்கி இன்ஸ்டாகிராமில் பதிவுகளை இட்டு வருகிறார். இவர் கல்லூரி மாணவர்களுக்கு மாற்றுப்பாலினத்தவர்கள் வாழ்க்கை, பாலுறவு பற்றியும் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். செக்ஸ் சார்ந்து பிடிஎஸ்எம் என்ற உடலுறவு முறையை பாலியல் வீடியோ தளங்களில் பலரும் பார்த்திருக்கலாம். அதுபற்றிய மூட நம்பிக்கைகளை விரைவில் விளக்கி வீடியோ ரெடி செய்யவிருக்கிறார். 234 வயது நடாஷாவுக்கு இன்புளூயன்சர் என்ற இந்த வேலையில் திருப்தி கிடைக்கிறதாம்.

பொதுவாக செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசும் பெண்களுக்கு ஆண்கள் என்ன செய்தியை கமெண்டில் எழுதுவார்கள். ஆம். அதுபோன்ற செய்திகள் மேற்சொன்ன அனைத்து பெண்களுக்கும் வந்துள்ளது என அவர்கள் ஒப்பு்க்கொள்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும். மகள், மகன் ஆகியோர் வெட்கமின்றி வீடியோக்களை, செய்திகளை இன்ஸ்டாகிராம் பதிவுகளை பெற்றோருடன் பார்க்க, படிக்கவேண்டும் என்பதுதான் தங்களின் ஆசை என்கிறார்கள் விழிப்புண்ர்வு பெண்கள்.

டைம்ஸ்
கேடகி தேசாய்
  

 https://www.youtube.com/watch?v=X25u7p1uQyk





 

கருத்துகள்