குறைந்த நீரைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஸ்டேஷனரி பொருட்கள்! - சாந்தனு பிரதாப் சிங்

 

 

 

சாந்தனு பிரதாப் சிங்

 

 

குறைந்த நீரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஸ்டேசனரி பொருட்கள்

பொதுவாக அனைவருமே சூழல், சுத்தம், சுகாதாரம் என பேசுவார்கள். ஆனால் நடைமுறையில் அதெல்லாம் சாத்தியமில்லை என்று ஒற்றைச்சொல்லில் சொல்லிவிட்டு அவர்கள் பாட்டிற்கு நடந்து போய்க்கொண்டே இருப்பார்கள். இந்த வகையில் சாந்தனு பிரதாப் சிங் கொஞ்சம் மாறுபட்டவர். சமூகத்திற்கு என்னுடைய பங்கை செய்கிறேன் என்று சூழலுக்கு பாதிப்பில்லாத காகிதம், பென்சில் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்று வருகிறார்.

உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தைச் சேர்ந்த இளைஞர் சாந்தனு. இவர் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பிடெக் படித்து முடித்தவர். அரசியல்வாதிகள், ஊடகங்கள் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பேசிக்கொண்டே இருப்பார்கள். அதனால் எந்த பிரச்னையும் தீராது. இதனை உணர்ந்து நானே களமிறங்கு என்னால் செய்ய முடியும் விஷயங்களைச் செய்து வருகிறன். என்கிறார். காகிதம், பேனா, பென்சில், ஸ்ட்ரா, மூங்கில் பிரஷ் ஆகியவற்றை சாகேஸ் என்ற பிராண்டில் விற்கிறார். காகிதங்களில் விதைகளை பதித்து சீட் பேப்பர் விற்பனையும் செய்கிறார். இதனால் காகிதங்கள் மண்ணில் மட்கும்போது அதிலுள்ள விதைகள் முளைக்க வாய்ப்பு உள்ளது.
''நான் இப்போது எனது சொந்த ஊரான பிரக்யாராஜில் இருக்கிறேன். பொதுமுடக்கம் காரணமாக சில பொருட்களை தற்காலிகமாக விற்பனையில் இருந்து எடுத்துவிட்டேன். எழுதுபொருட்களை விற்று வருகிறேன். மக்கள் கேட்கும் அளவுக்கு என்னால் பொருட்களை உற்பத்தி செய்யமுடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்'' என்கிறார் சாந்தனு.

TNIE 



கருத்துகள்