இசை மூலம் ஏழை மாணவர்களுக்கு இசைக்கல்வி அளிக்கும் தொண்டு நிறுவனம்! - தி சவுண்ட் ஸ்பேஸ், மும்பை

 

 

 

Lumia Music
cc

 

 

 

 

 


 

மும்பையைச் சேர்ந்த தி சவுண்ட் ஸ்பேஸ் என்ற அமைப்பு, ஏழை மாணவர்களுக்கு இசை பாடங்களை நிதி சேகரித்து நடத்தி வருகிறது. இசையைப் பொறுத்தவரை என்ன சொல்லுவார்கள்? இசை பயில்வது, கேட்பது ஒருவரின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும். அவர்களின் மோசமான இயல்புகளை மாற்றும் என்றுதானே? நாம் பல ரும் கேட்ட விஷயம்தான். ஆனால் அதனை அனுபவத்தில் உணர்ந்த உண்மையாக பரவசத்துடன் சொல்லுகிறார் தி சவுண்ட் ஸ்பேஸ் அமைப்பின் நிறுவனர் விஷாலா குரானா.


சுதந்திர தினத்தன்று இவர்கள் இசைக்கச்சேரி ஒன்றை நிதிதிரட்டவென நடத்துகிறார்கள். இணையம் மூலம் இதனை பலரும் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சி மூலம் பெறப்படும் நிதியை வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மாணவர்கள் இசைப்பாடங்களை பயில பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் ஆகான்சா பௌண்டேஷன், ஜெய் வகீல் பௌண்டேஷன், சேவா சதன் சொசைட்டி ஆகிய அமைப்புகள் பயன்பெறுகினனன. ஏறத்தாழ ஆயிரம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இம்முறையில் பயன்பெறுகின்றன என்று விஷாலா கூறுகிறார்.


நாங்கள் இனக்குழு ரீதியாக இசை முக்கியமான சக்தி என நம்புகிறோம். இதன்மூலம் நாங்கள் மாணவர்களுக்கு சிறந்த அனுபவங்களை வழங்க முடியும் என்ற நம்புகிறோம் என்கிறார் தி சவுண்ட் ஸ்பேஸ் அமைப்பின் துணை நிறுவனரான காமாட்சி. இவர்கள் இருவரும் இசையை கல்வித்திட்டத்தில் இணைக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இவர்கள் உருவாக்கியுள்ள இசைத் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.500 என கட்டணம் நிர்ணயித்திருக்கிறார்கள். இதன்மூலம் மாணவர் ஒருவருக்கு ரூ.25 என கட்டணம் வருகிறது. இசை, மாணவர்களின் வாழ்க்கையை மாற்றவேண்டும் என்பதுதான் நமது ஆசையும்தான்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்


நேஹா கிர்பால்



கருத்துகள்