நாட்டை உருக்குலைக்கும் அதிபுத்திசாலி கிரிமினல் மாஸ்டர்! - மாஸ்டர்

 

 

 

 https://i.pinimg.com/originals/39/fa/8d/39fa8d31d461f65fd0393c85ee8db75f.jpg

 

மாஸ்டர்

இயக்கம் Cho Ui-seok
ஒளிப்பதிவு Yoo Eok
Kim Jung-woo
இசை Dalpalan
Jang Yeong-gyu

கொரியாவில் நூதனமாக நிதிமோசடி செய்யும் அதி புத்திசாலியை காவல்துறை ஒருவர் எப்படி ஸ்கெட்ச் போட்டு பிடிக்கிறார் என்பதுதான் கதை.

கொரிய படங்களைப் பொருத்தவரை பெண்களை விட ஆண்கள் அட்டகாச அழகுடன் இருக்கிறார்கள். படத்தில் காவல்துறை அதிகாரி கேப்டன் கிம் அப்படிப்பட்டவர்தான். நாம் இ்ங்கு கூறுவதை அங்கு வசனமாகவே எழுதிவிட்டார்கள்(தமிழ் டப்பில்).

படத்தின் உயிர் நாடியே ஒன் நெட்வொர்க் என்ற நிறுவனத்தை நடத்தி மக்களிடம் பேராசையைத் தூண்டிவிட்டு பணத்தை முதலீடு செய்ய வற்பறுத்தும் நிதி நிறுவனர் கதாபாத்திரம்தான். ஜி.ஐ. ஜோவில் வெள்ளுடை அணிந்த ஸ்டோர்ம் ஷாடோதான், இந்த பாத்திரத்தில் பின்னி எடுத்திருக்கிறார். வணிகம் செய்து ஏமாற்றுபவரின் வசன உச்சரிப்பு, உடல் மொழி என அத்தனையிலும் அட்டகாசப்படுத்துகிறார்  மனிதர். படத்தில் காதல் கிடையாது. சேசிங், அனல் பறக்கும் ஆக்சன்கள் கிடையாது. ஆனால் படம் பார்க்க நன்றாக இருக்கிறது. நிதி மோசடி, பங்குச்சந்தை என்ற விஷயம் பலருக்கும் புரியாது என்றாலும் நிதானமாக படத்தின் போக்கிலேயே என்ற நடக்கிறது என்று புரிந்துகொள்ள வைத்திருக்கிறார் இயக்குநர்.

படத்தில் ஒரு நாட்டுக்குள் வந்து செல்லும் முதலீடு எப்படி பிற நாட்டுக்குள் அதிகாரப்பூர்வ நிதியாக மாறுகிறது என எளிமையாக புரிய வைத்திருக்கிறார்கள். திடுக் என திருப்பங்கள் இல்லாவிட்டாலும் படத்தை சுவாரசியப்படுத்துவதற்கான பல்வேறு விஷயங்களை படத்தின் ஆரம்பம் தொட்டு காட்சி ரீதியாக வைத்துக்கொண்டு இருக்கிறார் இயக்குநர். இதனால் படம் சலிப்பூட்டவில்லை. பங்குச்சந்தை, நிதிசார்ந்த முதலீடு, பங்குகள், வளர்ச்சி திட்டங்கள், அரசுடன் இணைந்து பணிபுரிவது பல்வேறு விஷயங்களை வேகமாக சொல்லி புரிய வைக்கமுடியாது என்பதால், நிதானமான கதை சொல்லும் முறை இப்படத்திற்கு ஏற்றதாக உள்ளது.

கிரிமினல் மாஸ்டர்

கோமாளிமேடை டீம் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்