இம்பேக்ட் 50! விளம்பரத்துறையில் சாதனை செய்த பெண்மணி ஸ்வாதி பட்டாச்சார்யா!

 

 

 

 

ஸ்வாதி பட்டாச்சார்யா

 

 

 

ஸ்வாதி பட்டாச்சார்யா

மூத்த புதுமைத்திறன் அதிகாரி, எஃப்சிபி உல்கா

விளம்பரத்துறைக்கு ஸ்வாதி வந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன. விளம்பரத்துறை மட்டுமன்றி கிடைக்கும் நேரங்களில் குறும்படங்களை உருவாக்குவது இவருக்கு பிடித்தமான ஒன்று. இந்த வகையில் இவரின் டபுள் ஷிப்ட் என்ற குறும்படத்திற்கு தாதாசாகிப் பால்கே விருது வழங்கப்பட்டது. படத்தின் திரைக்கதையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. இதுமட்டுமன்றி, ஏராளமான திரைப்பட விழாக்களில் ஸ்வாதியின் குறும்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இவரது விளம்பர ஐடியாக்கள், படங்கள் என அனைத்துமே மக்களின் நல்வாழ்க்கை, நல்ல குணங்களை மட்டுமல்லாமல் அவர்களின் துணிச்சல், திறமை சார்ந்தும் பேசியவை. இவரின் ஐடியாக்களில் உருவான பிராண்டுகளில் பொதுத்தன்மை என்ன தெரியுமா? அனைத்துமே மக்களின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை கருப்பொருளாக கொண்ட விளம்பரங்கள் என்பதுதான். 2016ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் சீஃப் கிரியேட்டிவ் ஆபீசராக பதவி உயர்வு பெற்றார். ஸ்வாதியின் தலைமைத்துவத்தால் அவரது நிறுவனம் ஏராளமான அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது. கேன்ஸ் லயன்ஸ் விழாவில் முதல் இந்திய தூதராக நியமிக்கப்பட்ட பெருமை இவரையே சாரும். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்காக இவர் உருவாக்கிய சிந்தூர் கேலா என்ற திட்டம் முக்கியமானது.

 

கருத்துகள்