5 கோடிக்கு மேல் சொத்துமதிப்பு இருந்தால் அதுதான் எலைட் கல்யாணம்! - இந்தியாவில் பரபரக்கும் கல்யாண பிசினஸ்
yaastudio/vinodh |
கல்யாணம் செய்வது என்பதைச் செய்ய சிலர் கொரானோ சரியான காலம் என்று தேர்ந்தெடுத்து வருகிறார்கள். ஆனால் பலரும் கல்யாணம் கிராண்டாக நிறைய செலவு செய்து நடைபெறவேண்டும். கல்யாணத்திற்கு வருபவர்கள் பலரும் ஆச்சரியப்படவேண்டும் என்றே நினைக்கிறார்கள். அதற்கு நிறைய நிறுவனங்கள் ஏற்றாற்போல செயல்பட்டு வருகின்றன. அப்படி ஒரு நிறுவனத்தைப் பார்க்கப் போகிறோம்.
குஜராத்திலுள்ள அகமதாபாத் நகரைச் சேர்ந்த அல்ட்ரா ரிச், என்ற நிறுவனம் குறைந்த பட்சம் ஒருவரின் சொத்து மதிப்பு 15 கோடி உள்ளவர்களை மட்டுமே தேர்வு செய்து கல்யாணம் செய்து வைத்து வருகிறார். இப்படி கல்யாணம் செய்பவர்களை இவர் கண்டறியவது, வாய்மொ்ழி விளம்பரம் வழியாகத்தான். ஆனால் யாருடைய பெயரையும் சொல்லவேமாட்டேன் என்று சொல்லிவிட்டார் கோஸ்வாமி. இவர்களுடைய திருமணம் நிறைய கடினமான சூழல்களை தாண்டி வரும். சாதாரண திருமணங்களைப் போன்ற விஷயங்களில் இதில் நடைபெறாது என்கிறார் கோஸ்வாமி. ஒரு திருமணத்திற்கான வரன்களைப் பார்த்து தருவது அதற்கான ஏற்பாடுகளை் ச் செய்வது ஆகியவற்றுக்கு கோஸ்வாமி 5 லட்சம் ரூபாய் வாங்குகிறார்.இங்கு நாம் குறிப்பிட்டுள்ள தொகை கல்யாண தரப்பினரின் தேவைகளைப் பொறுத்து மாறுபடும்.
காதல் திருமணங்களை விட பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணங்கள் பெரும்பாலும் இவ்வகையில் பணத்தை தண்ணீராய் கொட்டி செலவு செய்து நடத்தப்படுகிறது. ஏன்? என்று கேட்கிறீர்களா? அது அவர்களுக்கான சந்தோஷம். இதற்காகத்தான் அல்ட்ரா ரிச் மேட்ச், ராயல் மேட்ரிமோனியல் சர்வீஸ், எலைட் மேட்ரிமோனி ஆகிய நிறுவனங்கள் செயல்படுகின்றன. ''நிறைய பேருக்கு குறைந்த வாய்ப்புகளே திருமணத்தில் உள்ளன. எனவே, அவர்கள் தங்களுடைய பொருளாதார நிலை கொண்ட கலாசார பழக்க வழக்கங்கள் கொண்ட வரன்களை தேடுகிறார்கள். அதற்கு நாங்கள் உதவுகிறோம்'' என்கிறார் எலைட் மேட்ரிமோனியைச் சேர்ந்த தங்கவேல் ஜானகிராமன்.
எலைட் ஆட்களுக்கான வரன் பார்க்க பெயர்களை பதிவு செய்யவே நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் கட்டவேண்டும்.
அனைத்து பணிகளையும் செய்துமுடித்தபிறகு நிறுவனங்கள் 12 லட்சம் வரை பில் தருகிறார்கள்.
குறைந்தபட்சம் சொத்து மதிப்பு 5 கோடிக்கும் அதிகமாக இருந்தால்தான் வரன் பார்ப்பதா, வேண்டாமா என வரன் நிறுவனங்கள் யோசித்து முடிவுக்கு வருவார்கள்.
மேற்சொன்ன சொத்து மதிப்பில் இந்தியாவில் 6 ஆயிரம் குடும்பங்கள் உள்ளதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
வரன்கள் இறுதியாகும்வரை இரு குடும்பங்களின் தகவல்கள் பிறருக்கு கூறப்படாது ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.
எகனாமிக் டைம்ஸ்
வருணி கோஸ்லா
கல்யாணம், மேட்ரிமோனி, சொத்து, ஆடம்பரம்
கருத்துகள்
கருத்துரையிடுக