நீங்கள் வாளை விரும்பினால் அதனால் தாக்கப்பட்டு இறக்கவும் தயாராக இருக்கவேண்டும்! - இந்தி நடிகர் சங்கி பாண்டே

 

 

 

http://media.santabanta.com/newsite/cinemascope/feed/chunky48796.jpg
சங்கி பாண்டே


 

 

 

சங்கி பாண்டே, இந்தி நடிகர்


காமெடி நடிகராக இருந்தீர்கள். திடீரென வில்லன் பாத்திரங்களை எடுத்து நடிக்க ஆரம்பித்து வீட்டீர்களே?


நான் பிரேம் சோப்ரா, அம்ஜத் கான், அம்ரிஷ் பூரி ஆகியோரின் ரசிகன். இவர்களைப் பின்பற்றி வில்லனாக முயன்றேன். ஆனால் எனக்கு இந்த பாத்திரங்கள் எளிதாக கிடைக்கவில்லை. பேகம் கான், சாஹோ ஆகிய படங்களில் வில்லன் பாத்திரம் கிடைத்தது. இப்போது ஜீ 5 தொடரில் நடித்து வருகிறேன். இது மாணவர்களால் கிண்டல் செய்யப்படும். தெருவில் நாய்களால் விரட்டப்படும் ஆசிரியராக நடிக்கிறேன்.


ஓடிடி தளத்தை எப்படி பார்க்கிறீர்கள்?


இந்தவகை திரையிடலுக்கு இதுவரை சென்சார் முறை கிடையாது. எனவே கிரியேட்டிவிட்டிக்கு எல்லையே இல்லை. இதன் காரணமாக பலரின் வீட்டுக்கு, ஹாலுக்கு ஏன் பாத்ரூம் கூட சென்றுவர முடிகிறது.


சமூக வலைத்தளங்கள் எங்கும் சுஷாந்தின் மரணம் ஒட்டிய ஏராளமான எதிர்மறை கருத்துகள் நிறைந்துள்ளன. நீங்கள் உங்கள் மகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?


நீங்கள் வாளை விரும்பினால், அதனால் தாக்கப்பட்டு இறக்கவும் தயாராக இருக்கவேண்டும். நான் என் மகளுக்கு சொல்லுவது, இன்னொருமுறை முயற்சி செய் என்பதைத்தான். மற்றபடி சமூக வலைத்தள கருத்துகளை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கவேண்டியதில்லை.

இந்தியா டுடே



கருத்துகள்