கவனம் குவித்து பத்து மணிநேரம் தினசரி படித்து வந்தேன்!-பிரதீபா வர்மா

 

 

Always Wanted to Be an IAS Officer, Says Civil Services ...
பிரதீபா வர்மா

உ.பியைச் சேர்ந்த பிரதீபா வர்மா குடிமைப்பணித் தேர்வில் 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். அவரின் வெற்றிப்பயணம் பற்றி பேசினோம்.

ஒரு பெண்ணாக உங்களுக்கு இந்த பயணம் எப்படி இருந்தது?

நான் ஒன்பதாவது படிக்கும்போது எனக்கு ரத்தசோகை பிரச்னை இருந்தது. நான் தனியாக எங்கேயும் போகவே மாட்டேன். பிறகு பதினொன்றாவது படிக்கும்போது ஈவ்டீசிங் பிரச்னை ஏற்பட்டது. இதனால் நான் பள்ளிக்குப் போகும்போது எனது அப்பா, எனது பின்னாலேயே வந்து பாதுகாப்பாக பள்ளிக்கு கொண்டு வந்துவிட்டுவிட்டு திரும்புவார். கிண்டல் செய்வது தொடர்பாக கா்வல் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி நிலைமை சென்றது. எனது அப்பா, இதற்கு பயந்துகொண்டு படிப்பை கைவிடுவது தவறு என்று சொன்னார். அவர் வார்த்தைகள்தான் எனக்கு தைரியத்தைக் கொடுத்தன.

குடிமைப் பணித்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு என்ன சொல்லவிரும்புகிறீர்கள்?

தனி அகாடமிகளில் சென்று படிப்பது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை வழங்காது. பாடநூல்களை நன்றாக படியுங்கள். தினசரி நாளிதழ்களை தீர்க்கமாக வாசியுங்கள். அதுவே போதுமானது.

தேர்வுக்கு படிக்கு்ம்போது எந்த இடத்திலாவது நம்பிக்கையை இழந்திருக்கிறீர்களா?

2017ஆம் ஆண்டு தொடக்க தேர்வில் தோல்வி அடைந்தேன். அப்போது நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். முதல் தேர்வில் தோல்வி என்றால் அடுத்தடுத்த தேர்வுகள் இன்னும் கடினமாக இருக்கும் என்பதால் நம்பிக்கையே இல்லாமல் போய் துயரத்தில் ஆழ்ந்தேன். எனது குடும்பம் எனக்கு ஊக்கம் கொடுத்து தேர்வுகளை எழுத வைத்தது. இதனால் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் பதற்றத்தோடு தேர்வு எழுதியும் வெல்ல முடிந்தது

சுல்தான் பூரிலிருந்து நாட்டிலேயே டாப் நபராக வென்றிருக்கிறீர்கள்?

நான் சிறுவயதில் ஐ.ஏ.எஸ் ஆவது என முடிவு செய்துவிட்டேன். கடந்த ஆண்டு எழுதிய தேர்வு மூலம் வருமான வரித்துறையில் வேலை கிடைத்துவிட்டது. ஆனால் எனது இலக்கு ஐ.ஏ.எஸ்தான். எனவே கவனம் குவித்து பத்து மணிநேரம் தினசரி படித்து வந்தேன். இதனால்தான் நான் தேர்வில் வெல்ல முடிந்தது.

அவுட்லுக்

நீரஜ் ஜா

குடிமைப்பணித் தேர்வு, பிரதீபா வர்மா, யுபிஎஸ்சி, ஐ.ஏ.எஸ்



 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்