குஜராத் மாடலை ராஜஸ்தான் அரசியலுக்கும் மடைமாற்றுகிறார்கள் மோடியும், அமித்ஷாவும்! - திக்விஜய் சிங்!

 

 

 

Assembly elections in 2013: Digvijay Singh trashes exit ...
காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்

 

 

 

 

 

மொழிபெயர்ப்பு நேர்காணல்


திக்விஜய் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்


ராஜஸ்தானில் உள்ள அரசியல் நிலையை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்?


இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் தங்களது குஜராத் மாநில மாடல் அரசியலை உள்ளே கொண்டு வர முயல்கின்றனர். வாஜ்பாய், அத்வானி இருந்தபோது பாஜக இதுபோல விதிகளை மீறி செயல்படவில்லை. ஆனால் இன்று அனைத்து அடிப்படை அறங்களையும் மீறி எம்எல்ஏக்களை 25 கோடி வரை விலை பேசி வருகின்றனர்.


உ்ங்கள் கட்சியில் ஏற்படும் குழப்பங்களை பாஜக சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதே?


அனைத்து கட்சிகளிலும் இதுபோல உட்கட்சி பிரச்னைகளை உண்டு. காங்கிரசில் சேர்ந்துள்ள இருபது சதவீதம் பேர், அதிகாரத்தில் உள்ளவர்களைப் பார்த்து அவர்களை நோக்கி செல்கிறார்கள் இவர்களுக்கு கட்சி சார்ந்த கொள்கை, அதன் வழிமுறை எதிலும் பிடிப்பு இருப்பதில்லை.


ஜோதிரா சிந்தியா உங்களை தாக்கிப் பேசியுள்ளாரே?


நான் அவருக்கு எதிராக எப்போதும் பேசியது கிடையாது. அவரது தந்தையை காங்கிரஸ் கட்சிக்கு நான்தான் அழைத்து வந்தேன். ஜோதிராவுக்கு கட்சி கமிட்டியில் பல மூத்த தலைவர்களையும் தாண்டி இடம் கிடைக்க உதவினேன். அவர் தந்தை இறந்தபிறகு அவரது பெயரைத்தான் நான் முனமொழிந்தேன். அடுத்த தலைவராவார் என்று நினைக்கும்போது அவர் அவசரப்பட்டுவிட்டார். எதற்கு இந்த அவசரம் என்று எனக்கு புரியவில்லை.


இளம் தலைவர்கள் ஏன் மகிழ்ச்சியற்று காணப்படுகிறார்கள்?


மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் ஜோதிராவ் சிந்தியா, ச ச்சின் பைலட் இருவருமே முதல்வராக முயன்றார்கள். மத்திய பிரதேசத்தில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் கமல்நாத்தை ஆதரித்தனர். ராஜஸ்தானில் பலரும் அசோக் கெலாட்டை ஆதரித்தனர். இதனால் அவர்கள் மாநில முதல்வர்களாக அமர்ந்தனர். ஜோதிராவ் சிந்தியா, பைலட் ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி அல்லது அதற்கு இணையான பதவி தரப்பட்டது. ஆனால் இருவரும் அதனை ஏற்றாலும் மகிழ்ச்சியற்று காணப்பட்டனர். இன்று அவர்களுக்கு கிடைத்த பதவிகளை பிற கட்சி தொண்டர்கள் அடைய 15 ஆண்டுகள் தேவைப்படும்.


மோடிக்கு ராகுல்காந்தி சரியான மாற்று என்கிறீர்களா?


அவர் பிரதமர் ஆக, கேபினட் அமைச்சராக நிறைய முறை் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர் பதவி, அதிகாரத்தை விஷம் என்று நினைக்கிறார். ஏழை மக்களோடு தொடர்பு கொண்டு அவர்களின் மனநிலையை அறிய முற்பட்டு வருகிறார். அவரால் எளிதாக உயர் பதவிகளுக்கு வந்திருக்க முடியும் என்றாலும், காங்கிரஸ் கட்சியில் துணைத்தலைவராகவே பதவியேற்றார். கோவிட் -19 காலத்திலும் தனது பணிகளை எப்போதும்போல செய்து வருகிறார்.


தி வீக்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்