கொள்ளையடித்த பணத்தை ஏமாற்றும் நண்பர்களை களையெடுக்கும் கொஞ்சம் நல்லவன்! - பார்க்கர்

 

 

 

 

https://coolpapaesreviews.files.wordpress.com/2013/05/parker_movie-wide.jpg
பழிக்குப்பழி வாங்கும் நல்ல கொள்கைகள் கொண்ட கொள்ளையன்


 

 

 

 

பார்க்கர்


இயக்கம் டெய்லர் ஹாக்போர்டு


மூலக்கதை ஃபிளாஷ்பயர் - டொனால்ட் வெஸ்ட்லா

 

 இசை, டேவிட் பக்லி


 ஒளிப்பதிவு மைக்கேல் முரோ


அம்யூஸ்மெண்ட் பார்க் லாபத்தில் கொழிக்கிறது. அதில் கிடைக்கும் வருமானத்தை கொள்ளையிட கொள்ளையர்கள் திட்டமிடுகிறார்கள். திட்டத்தை செயல்படுத்த பார்க்கர் உதவுகிறான். பார்க்கரின் மாமனார்தான் தனக்கு பதில் பார்க்கரை திட்டத்தில் ஈடுபடுத்துகிறார். அவரது நண்பர்கள்தன் கொள்ளையர்கள் டீம். அதில் இணைகிறான் பார்க்கர். வெற்றிகரமாக அம்யூஸ்மெண்ட் பார்க்கை கொள்ளையடித்து விடுகிறார்கள். ஆனால் பணத்தை திருடிவிட்டு வரும்போது, மீண்டும் ஒரு கொள்ளை என மாமனாரின் ந ண்பர்கள் பார்க்கரை வற்புறுத்துகின்றனர். அதற்கு பார்க்கர், நம் டீல் முடிந்தது. எனக்கு அடுத்த திருட்டு செய்ய இப்போது விருப்பமில்லை என்று சொல்ல நண்பர்களுக்குள் மோதல் வர, பார்க்கர் சுட்டு வீழ்த்தப்படுகிறான்.


அவன் ஏரி ஒன்றில் தூக்கி வீசப்படுகிறான். அவனை வயதான தம்பதியினர் காப்பாற்றுகின்றனர். மருத்துவமனையிலிருந்து தப்பும் பார்க்கர், தனது துரோகம் செய்த நண்பர்களைத் தேடிப்போய் இலட்சிமலை ஆத்தாவிற்கு பொலி போடுவதுதான் கதை.


பக்கா


கொள்ளையன்தான் ஆனால் கொள்கைகள் உள்ள கொள்ளையன் என்ற வேடத்திற்கு டெய்லர் தைத்த சர்ட் போல அம்சமாக பொருந்துகிறார் ஜேசன் ஸ்டாதம். அவருக்கு முன்பே திருமணம் ஆகியிருப்பதால், காதல் காட்சிகள் கிடையாது. அப்புறம் எதற்கு ஜெனிஃபர் லோஸஸ் என்கிறீர்களா? ஒரு காட்சியில் உள்ளாடை சகிமமாக காட்சி தருகிறார். கால்ஷீட் கொடுத்தது எதற்கு என நமக்கும், அவருக்கும் ஒரு சேர சந்தேகம் தீர்ந்துவிடுகிறது.


டொக்கு


பார்க்கர் உயிரோடு வந்தால் நிச்சயம் தன் பங்கு தொகை கேட்பான். நம் உயிரை வாங்குவான் என மங்குணி துரோகிகளுக்கு தெரியவே மாட்டேன்கிறது. பார்க்கரை அவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நெருடுகிறது.


ஜேசன் ஸ்டாதமின் சண்டைக்காட்சிகள் பிடிக்கும் என்றால் பார்க்கலாம். உணர்ச்சிகரமான காட்சிகளை கலந்து எடுத்திருக்கிறார்கள்.


பழிக்குப்பழின்னா பார்க்கர்தான்.


கோமாளிமேடை டீம்


கருத்துகள்