2070இல் பூமித்தாய்க்கு மக்களை பலிகொடுக்கும் அரசு! - டான்ஸ் டு டெத் 2017
டான்ஸ் டு டெத் (2017 ரஷ்யன்)
இயக்கம் ஆண்ட்ரே வோல்ஜின்
இசை, ஒளிப்பதிவு லின்சென்ஸ்கி, வியாசெஸ்லாவ்
75 சதவீதம் அழிந்து போன நாடு. அங்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை பத்து பதினைந்து பேரை வலுக்கட்டாயமாக பிடித்து அந்நாட்டு தெய்வங்களுக்காக நடனமாடச் சொல்லி கொல்லுவார்கள். எத்ற்கு கொலை? பூமித்தாய் வாயைப் பிளந்து கோப்ப்பட்டு மற்ற ஆட்கள் கைலாசம் போய்விடுவார்கள். இதனை எப்படி போட்டியில் கலந்துகொண்டு நாயகன் கண்டுபிடிக்கிறான், அங்குள்ள அரினாவில் போட்டியில் கலந்துகொள்ளும் பெண்ணை உஷார் செய்ய முயல்கிறான். பின்னாளில் அதையும் சாதிக்கிறான். இறுதியில் அந்த இடத்திலிருந்து பெண்ணை எப்படி மீட்டுக்கொண்டு தப்பிக்கிறான் என்பதுதான் கதை.
அவர்கள் நாட்டைக் காப்பாற்ற மானாட மயிலாட போல டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்துவது தொடங்கி பல காட்சிகள் நமக்கு இப்படியும் நடக்குமா என சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. வெளியுலகைக் காட்டும் சிஜி காட்சிகள் நன்றாக வந்துள்ளன. பார்க்கும்போது டான்ஸ் ஆடுபவர்களுக்கு மட்டுமல்ல நமக்கே மரணம் வந்தால் தேவை என்று நினைக்கத் தோன்றுகிறது. படத்தின் திரைக்கதை அம்புட்டு வேகம். படத்தில் எந்த விஷயத்தையும் எதிர்பார்க்க முடியாது. அதுவாகவே ராண்டமான ஆர்டரில் நடக்கும்
படத்தில் இயல்பான விஷயமாக நாம் நடக்கும் என்று எதிர்பார்ப்பது படம் சீக்கிரமே முடிந்துவிடும் என்பதுதான். வேறொன்றும் இல்லை.
கோமாளிமேடை டீம் -
கருத்துகள்
கருத்துரையிடுக