மின்னலால் ஏற்படும் ஆபத்து! - காடுகளிலுள்ள தொன்மை மரங்கள் வேகமாக அழிந்து வரும் ஆபத்து!

 

Flash, Lightning Weft, Impact, Weather, Storm, Gloomy
cc

 

 

 

மின்னலால் ஏற்படும் ஆபத்து!

உலக நாடுகளில் மின்னல் தாக்குதலால் ஏராளமான தொன்மை மரங்கள் அழிந்து வருகின்றன.

காடுகளிலுள்ள மரங்கள் மக்களின் பரவலால் அழிக்கப்படுவதை அறிந்திருப்பீர்கள். அதைப்போலவே பல்லாயிரம் மரங்கள் இயற்கையாகத் தோன்றும் மின்னலால் அழிந்துவரும் செய்தி உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்காவின் கென்டக்கி நகரைச் சேர்ந்த சூழலியலாளர் ஸ்டீவ் யானோவியாக் இதுபற்றி ஆராய்ச்சி செய்து உண்மையைக் கண்டுபிடித்துள்ளார்.

ஆண்டுதோறும் நடைபெறும் ஏராளமான மின்னல் தாக்குதல்களால் உலகமெங்கும் உள்ள பருவக்காடுகளிலுள்ள தொன்மையான மரங்கள் அழிந்து வருகின்றன. அமெரிக்காவின் லூயிஸ்வில்லே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்டீவுடன் இணைந்து, உலகமெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மின்னல் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து வருகின்றனர். காட்டுத்தீ, பசுமை இல்ல வாயு, மரங்களின் அழிவு என நிறைய பாதிப்புகள் இதனால் உண்டாகிறது.

மின்னல் எப்படி உருவாகிறது? வெப்பமான பரப்பிலிருந்து ஈரப்பதம் நிரம்பிய காற்று உருவாகிறது. இக்காற்று குளிர்ந்து தூசி, உப்பு, புகை ஆகியவற்றை உள்ளடக்கி மேகங்களாகின்றன. இவற்றில் ஏற்படும் எலக்ட்ரான் இழப்பு, மின்னல் இடியைத் தோற்றுவிக்கிறது. மின்னல் தாக்குதலால் உலகம் முழுக்க ஆண்டுக்கு 24 ஆயிரம் பேர் பலியாகி வருகின்றனர். 2016ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நான்கு நாட்களில் 64 பேர் மின்னலுக்கு பலியான அவலமும் நடந்தேறியது. சில மைக்ரோ செகண்டுகளில் காற்றில் பாயும் மின்னல், அதனை 30,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு சூடாக்குகிறது. இதன் விளைவாக காற்றிலுள்ள ஆக்சிஜன், நைட்ரஜன் மூலக்கூறுகள் வேதிவினைக்கு உட்பட்டு நைட்ரஸ் ஆக்சைடு உருவாகிறது. இது சூழலுக்கு கேடுவிளைவிக்கும் வேதிப்பொருளாகும். மின்னல் தாக்குதலால் 50 கோடிக்கும் அதிகமான மரங்கள் தாக்கப்பட்டு வருகின்றன. நூறு கோடிக்கும் அதிகமான மரங்கள் முழுமையாக அழிக்கப்படுகின்றன. செயற்கைக்கோள் மூலம் மின்னல் தாக்குதல்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கலாம். இத்தகவல்களைக் கொண்டு, மரங்களையும, மக்களையும் பாதுகாப்பதற்கான பணியை உலக நாடுகள் செய்ய முன்வந்தால் பாதிப்புகள் குறையக்கூடும்.

தகவல்: நியூ சயின்டிஸ்ட்

மின்னல், காடுகள் அழிவு, காட்டுத்தீ, இயற்கை

கருத்துகள்