ஸ்கூபிடூ்வை நைச்சியமாக பலிகொடுக்கும் கொடூரத்திட்டம்! - ஸ்கூபி டூ -1
ஸ்கூபி டூ 2012
இயக்கம் ராஜாகாஸ்னெல்
ஒளிப்பதிவு டேவிட் எக்பை
இசை டேவிட் நியூமன்
2டி அனிமேஷனிலிருந்த ஸ்கூபிடூ இப்போது திரைப்படமாக முன்னேறியிருக்கிறது. ஃபிரெட், டெப்னி, வில்மா, ஷாஜி, ஸ்கூபிடூ என ஐந்துபேர் கொண்ட டீம்தான் உள்நாடு முதல் உலக நாடுகள் வரை பயணித்து பல்வேறு மூடநம்பிக்கைகளை புரட்டுகளை துரோகங்களை கண்டறிகிறார்கள்.
ஆனால் இறுதியில் ஃபிரெட் எல்லாவற்றையும் தான்தான் பிளான் செய்ததாக சொல்ல, வில்மா மனமுடைகிறாள். அனைவரும் உழைத்துத்தானே மர்மங்களை கண்டுபிடித்தோம். ஏன் இப்படி பேட்டி கொடுத்தாய் என சொல்ல, ஃபிரெட்டுக்கு கோபம் வர கூட்டணி உடைகிறத. இனி எந்த பிரச்னை வந்தாலும் வழக்கு வந்தாலும் தனியாக கண்டுபிடிப்போம் என முட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இறுதியில் ஒன்றாக நிற்க, ஸ்கூபிடூவும் ஷாஜியும் எப்போதும் போல ஒன்றாக இருக்கிறார்கள்.
எப்போதும்போல வகை வகையாக தின்பண்டங்களை வாங்கி சாஸ் ஊற்றி தின்னும்போது சார் உங்களுக்கு இன்விடேஷன் என்று குரல் கேட்கிறது. யார் என்று பார்த்தால், ஸ்பூக்கி தீவில் தீம்பார்க் கட்டியுள்ளதாக கூறி இவர்கள் இருவரையும் அழைத்திருக்கிறார்கள். ஆனால் ஏர்போர்ட்டில் மொத்த டீமுக்கும் அழைப்பிதழ் வந்துள்ளது தெரிகிறது. ஆனால் மூவரும் தனித்தனியாக வழக்கை ஆராய்வோம் என ஈகோவோடு சொல்கிறார்கள். அங்கு சென்றபிறகுதான் தெரிகிறது. அத்தீவில் உள்ளே வரும்போது நன்றாக வந்தவர்கள் எல்லாம் அங்கிருந்து கிளம்பும்போது, பேயறைந்துவிட்டாற்போல செல்வது. எனவே இந்த மர்மத்தை எப்படி கண்டுபிடித்தார்கள், கூட்டணி ஒன்றாக சேர்ந்ததா என்பதுதான் கதை.
படத்தின் ஹீரோ ஷாஜியும், ஸ்கூபிடூவும்தான். அவர்கள் செய்யும் காமெடிதான் ரசிக்கும்படி இருக்கிறது. வில்மா 2டியுல் சுண்டுவிரல் நகம் தெரியாதபடி இழுத்து மூடிய பாத்திரம், இதில் மார்பகங்கள் தெரியும்படி கொஞ்சநேரம் அலைய விட்டிருக்கிறார்கள். அப்புறம் தேநீர்சட்டையை இழுத்துப்போட்டு அனைத்தையும் மூடிவிட்டார்கள். எதற்கு என்று புரியவில்லை. ரோவன் அட்கின்சன் இதில் வில்லன். அவருக்கு படத்தில் பெரிய வேலை ஏதுமில்லை.
ஸ்கூபிடூ ரசிகர்கள் பார்க்கலாம். மற்றபடி சொல்ல வேறேதும் இல்லை.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக