இடுகைகள்

ஆசிரியர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வகுப்பறையில் சுயமாக கற்கும் மாணவர்கள்

படம்
  குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள்  ஜீன் பியாஜெட்  குழந்தையின் முதல் நிலை சென்சரி மோட்டார். இதன்படி, குழந்தைகள் தங்களின் புலன்களின் வழியே அனைத்தையும் தெரிந்துகொள்ள முயல்வார்கள். இதில் உடல் இயக்கம் முக்கியமாக இருக்கும். இந்த வயதில் சிறுவர்கள், தன்முனைப்பு கொண்டவர்களாக இருப்பார்ள். உலகை தங்களது பார்வைக்கோணத்தில் பார்ப்பார்கள். இந்த காலகட்டத்தில் நடக்கும் விஷயங்களை அப்படியே பிரதிபலிப்பார்கள். இந்த சூழல், எந்த உள்நோக்கமும் இல்லாமல் நடக்கும். பின்னாளில் தங்கள் செயல்களை அவர்கள் பொருட்களுடன் இணைத்து பொருத்திக்கொள்வார்கள்.  கண்ணுக்கு தெரியாத பொருட்களை தேடுவது போல தங்களது செயல்களை அமைத்துக்கொள்வதை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் குழந்தைகள் தங்களை உணர்ந்துகொள்ளும் நிலையில் இருப்பார்கள். அடையாளங்கள், மொழி, புகைப்படங்கள் ஆகியவற்றை உருவாக்கிக்கொண்டு இயங்குவார்கள். அடுத்த நிலை, ப்ரீ ஆபரேஷனல். இந்த நிலையில் குழந்தைகள் பொருட்களை தங்களது காரண காரியங்களுக்கு ஏற்பட பொருத்திப் பார்க்க தொடங்குவார்கள்.விளையாடும் பொருட்களை நிறம், உயரம் சார்ந்து அடுக்கிப் பார்ப்பார்கள். இரண்டிலிருந்து  நான்கு வயது

ஆசிரியர் வேலையா, வேண்டவே வேண்டாம் என பதறும் அமெரிக்க மாணவர்கள்!

படம்
  அமெரிக்காவில் ஆசிரியர் வேலையை கைவிடும் தலைமுறையினர்! அமெரிக்காவில் ஆசிரியர் தொழிலை கையில் எடுத்து பணியாற்றும் ஆட்கள் படிப்படியாக குறைந்து வருகிறார்கள். இதற்கு முக்கியமான காரணங்கள் என பள்ளியில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு, குறைந்த சம்பளம், அதிகவேலை ஆகியவற்றைக் காரணமாக கூறலாம். நமது ஊரின் டெலிகிராம், டெய்லிபுஷ்பம் ஆகிய நாளிதழ்களில் வரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உழைப்பு கதையெல்லாம் அமெரிக்காவில் கூட நடந்து வந்தவைதான். ஆனால், இப்போது அதுபோல எந்த மாணவரும் பேட்டி கொடுப்பாரா என தெரியவில்லை. ஒரு ஆசிரியரே பல்வேறு பாடங்களை எடுக்க வேண்டியதிருக்கிறது. இன்னொரு ஆசிரியரின் மாணவர்களையும் சேர்த்து பார்க்கவேண்டியதிருக்கிறது என பிரச்னைகள் நீள்கின்றன.   ஆசிரியர் வேலைக்கு குறைந்தபட்ச சம்பளம் என்பது மாகாணங்களைப் பொறுத்து மாறுபடுகிறது.அது இயல்பான ஒன்றுதான். ஆனால், மாறும் சம்பளம் விலைவாசிக்கு ஏற்றபடி இருக்கிறதா என்றால் இல்லை. ஆண்டுக்கு 48 ஆயிரம் டாலர்கள் என்பது மிக குறைவான சம்பளம். இதை வைத்து ஆசிரியர், அவரது மனைவி, குழந்தை என மூன்று பேர் கொண்ட குடும்பத்தை பசி, பட்டினியின்றி ஓட்டுவதே மிக கடினம்.சில ம

பத்திரிகை ஆசிரியரின் முதல் தகுதி என்ன தெரியுமா? - ஆ.வி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் சொன்ன அறிவுரை

படம்
  கோபத்தின் பிரயோஜனம் ஆசிரியரின் மறைவுக்கு இருபது நாட்களுக்கு முன்பு, அவரை சந்திக்க முடிந்தது. அவருடைய துணைவியார் சரோஜா மேடமும் அருகில் இருந்தார். நடுங்கும் கரங்களை காற்றில் அசைத்து பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டே வந்தார். பேச்சு சுற்றி வளைத்து கடைசியாக அவரைப் பற்றியே வந்து நின்றது. ‘’நெறைய தடவை நான் உங்ககிட்டயெல்லாம் கோபப்பட்டிருக்கேன் இல்லையா?’’ என்றார். ‘’ஐயோ கொஞ்சமான கோபமா சார் பட்டீங்க. நீங்க உரத்த குரலில் கண்டிக்கும்போதெல்லாம் நாங்க தடதடத்துப் போய் நின்றுக்கோம்’’ என்றேன். ‘’ஏண்டா, இவன்கிட்ட வேலை பார்க்கிறோம்னு வெறுத்துப் போயிருக்கும்.. இல்லையா’’ என்றார். சிரித்தபடியே மறுத்து தலையசைத்ததற்கு, ‘’நான் யாரிடம் கோபப்பட்டு வலிஞ்சு ஒரு விஷயத்தை சொல்றேனோ அவங்கள்லாம் நம்மோடயே இருந்து தொடர்ந்து நம்ம பேச்சக் கேட்டு திருத்திண்டு நல்லபடி முன்னுக்கு வருவாங்கன்னு நினைப்பேன். அவன்கிட்டதான் கோபப்படுவேன். கோபத்துக்கும் ஒரு பிரயோஜனம் இருக்கணும் இல்லியா.. இந்த ஆள் சரிவர மாட்டான். எவ்வளவு சொல்லியும் பயனில்லைனு நெனச்சுட்டா, அவங்கிட்ட எதுக்கு வீணா கோபப்படணும்? நீங்க செஞ்சது எனக்கு பிடிக்கலை ச

சிறை சென்று திரும்பினாலும் விடாத கொலை வேட்கை

படம்
  சார்லஸ் வில்லியம் சார்லஸிற்கு வயது 31. திருமணமானவர். பியானோ ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது பெற்றோர் விவகாரத்து பெற்றவர்கள். தனிமையில் வளர்ந்தவர்.   1966ஆம் ஆண்டு முதல் கொலையை   செய்தார். காவல்துறை சார்லஸின் வீட்டை சோதனை செய்து 25 வயதான சூசன் என்ற பெண்ணின் உடலைக் கண்டறிந்தது. அடித்து, கத்தியால் குத்தப்பட்டு இறந்து போயிருந்தார். செய்த கொலைக்கு தண்டனையாக பதினைந்து ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. சிறையில் முன்மாதிரி கைதியாக நடந்துகொண்டார். இதனால் சார்லஸிற்கு 1973ஆம் ஆ ண்டு பிணை வழங்கப்பட்டது. பிணை பெறுவதற்கான அவர் நிறைய நாடகங்களை நடத்தினார்.   ‘’பிணை பெறுவதற்கான எடுத்த சவால்’’ என்று கூட பகிரங்கமாக கூறினார். 1974ஆம் ஆண்டு, க்ரீன்விட்ச் கிராமத்தில் உள்ள கட்டிடத்தில் கரேன் என்ற வளர்ந்து வரும் நடிகை நிர்வாணமாக இறந்து கிடந்தார். யார் கொலையாளி என்று அதிகமாக சந்தேகப்படக்கூட இல்லை. ஏனெனில் அருகில்தான் சார்லஸ் வீடு இருந்தது. திரைப்படம் தொடர்பான இதழில் போலியாக விளம்பரம் கொடுத்து கரேனை அங்கு வரவைத்து டையால் கழுத்தை இறுக்கி கொன்றார். சார்லஸை விசாரணை செய்து குற்றத்தை ஒத்துக்கொள்ள வைப்பது

இருளர் குழந்தைகளை படிக்க வைக்க அரும்பாடுபடும் ஆசிரியர்!

படம்
  கிருஷ்ணகிரியிலிருந்து அறுபது கிலோமீட்டர்களைக் கடந்தால் கேளமங்களம் கிராமத்தை அடையலாம்.இங்கு, மலை மீது அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்பது பிள்ளைகள் படிக்கிறார்கள். இங்கு ஆசிரியராக இருந்தவர், அதிக தூரம் பயணித்து வந்து மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதை சித்திரவதையாக நினைத்து பணிமாறுதல் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். இதனால், ஓராசிரியர் பள்ளியாக செயல்பட்ட தொடக்கப்பள்ளியை அப்படியே விட்டுவிட முடியாது அல்லவா? அப்படித்தான் ஓசூரிலிருந்து டி ஜான்சன் என்ற ஆசிரியர் இங்கு மாறுதல் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஆசிரியராக பொறுப்பேற்றவர், இன்றுவரை அங்கிருந்து கிளம்புவதற்கான வழியைத் தேடாதது ஆச்சரியம். பள்ளியில் படிக்கும் இருளர் குழந்தைகளுக்கு கல்வியை சிறப்பாக சொல்லித் தரவே முயன்றார். ஜான்சன், ஓசூரைச் சேர்ந்தவர். அங்கிருந்து இரு நாட்களுக்கு சோறு கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகிறார். ஒருமுறை வந்துவிட்டால், பிறகு அந்த வாரம் முழுக்க ஊருக்கு செல்லமாட்டார். அங்கேயே தங்கி பாடம் கற்றுக்கொடுத்துவிட்டு வகுப்பறையில் தங்கிக் கொள்கிறார். பிறகு, வார விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று வருகிறார்.

செய்தியில் தகவல்களை சரிபார்ப்பது முக்கியம்

படம்
  பொதுவாக   நிறைய பிரபலங்கள் / அரசியல்வாதிகள் பேட்டி எடுக்கும் வரை அமைதியாக இருப்பார்கள்.   பிறகு, பத்திரிகையாளரை அழைத்து செய்தியை எழுதிய உடனே அல்லது அதை வெளியிடும் முன்னர் இறுதி வடிவத்தை ஒருமுறை அவர்களுக்கு அனுப்பித் தரும்படி கேட்பார்கள். பேசிய வார்த்தை, அர்த்தம் மாறியிருக்கிறதா என்று சரி பார்க்கத்தான் இந்த சோதனை. இந்த முறை இப்போது ஊடகங்களில் பழக்கமாகிவிட்டது. பத்திரிக்கைகள் செய்தி ஆதார மனிதர்களிடம் அச்சேறாத செய்தியை அனுப்பி, அவர்களின் திருத்தங்களைக் கேட்டு பிறகு அதைச் செய்து அச்சுக்கு அனுப்புகிறார்கள். அனைத்து கட்டுரைகளுக்கும், இதுபோல திருத்தங்கள் செய்து கட்டுரைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவது சரியானதல்ல. முடிந்தவரை பத்திரிகையாளர்கள் இம்முறையைத் தவிர்க்கவேண்டும். தவறுகள் ஏற்படாமல் இருக்க, பேசும்போது முறையாக அதை ரெக்கார்டரில் பதிவு செய்துகொண்டு அதை ஒருமுறைக்கு இருமுறை கேட்டுவிட்டு கட்டுரையை எழுதலாம்.இப்படி எழுதப் பழகினால் கட்டுரைகளில் திருத்தங்கள் குறையும். நாளடைவில்   தகவல் பிழைகள் இருக்காது.   செய்திகளை, பேட்டி எடுப்பவர்களிடம் காட்டிவிட்டு பிரசுரிப்பது என்றால் அதை செம்மை

மாணவர்களின் பசி தீர்த்து பாடம் கற்பிக்கும் ஆசிரியர்- மகாலட்சுமி

படம்
  இல்லம் தேடி கல்வி வகுப்பில் பசி தீர்க்கும் ஆசிரியை பிரபஞ்சன் எழுதிய அமரத்துவம் என்ற சிறுகதையில், திருவேங்கடம் என்ற பள்ளி ஆசிரியர் வருவார். திண்ணைப் பள்ளிக்கூடத்தை தொடங்கி மாணவர்களை சேர்க்க பெற்றோர்களின் வீட்டில் பிச்சை எடுப்பது போல நின்று பிள்ளைகளை பள்ளிக்கு வரச்சொல்லுவார். இந்த சம்பவத்தை அவர் எழுதும்போதே மனம் உருகிவிடுவது போல இருக்கும். அதுமட்டுமல்ல, தனது மகளின் உயிரையே விட்டுக்கொடுத்து பள்ளியை வளர்ப்பார். இதுவும் அதே போன்ற இயல்பில் அமைந்த செய்திதான்.  அங்கு ஆசிரியர் திருவேங்கடம் என்றால், இங்கு ஆசிரியர் மகாலட்சுமி. பதினொரு மாத கால பணியில் இவர் மாணவர்களைப் புரிந்துகொண்டு செயல்படும் விதம் வியப்பானது. பள்ளி வகுப்புகளே மாணவர்களின் ஒட்டுமொத்த மன ஆற்றலை உறிஞ்சிவிடும்போது நான்கு மணிக்கு மேல் குழந்தைகளுக்கு பாடங்களை கற்பிப்பது என்பது மிக கடினமானது. இல்லம் தேடி கல்வி எனும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளதை அனைவரும் அறிவோம். இதில் இணைந்த பலரும் தன்னார்வலர்கள்தான். வேலை கடுமை, சம்பளம் குறைவு பற்றி பேசும்போது கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள ஆசிரியர் செய்யும் பணி ஆச்சரியம் தருகிறது. உப்பிலிபா

இரு கைகள் இல்லாமல் காலில் தேர்வு எழுதி ஆங்கில முதுநிலைப்பட்டம் வென்ற பெண்!

படம்
  நெருங்கிய உறவில் திருமணம் செய்வது மருத்துவ அறிவியல் அடிப்படையில் குழந்தைகள் ஊனமாக முக்கிய காரணம் என அறிந்திருப்பீர்கள். ஆனால் கிராமங்களில் இன்றும் சொத்து, உறவு என ஏதோ காரணம் காட்டி பெண்ணை அவளது தாய்மாமனுக்கு திருமணம் செய்வது நடந்து வருகிறது. ஆர்காடு கிராமம் முகையூர் கிராமத்தில் வாழ்ந்த வீரம்மாளின் மகள் மாயாவுக்கும் இப்படித்தான் அவளது மாமாவுடன் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை பிறந்தபோதுதான் திருமணத்தில் கோரமான விளைவு தெரிய வந்தது. பிறந்த குழந்தைக்கு இரண்டு கைகளும் இல்லை. குழந்தையைப் பார்க்க வந்த உறவினர்கள், குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என கூறியிருக்கிறார்கள். ஆனால் பேத்தியை வீரம்மாள் அப்படியெல்லாம் கைவிடவில்லை. நான் உயிரோடு இருக்கும்வரை பேத்தி என்னோடு இருக்கட்டும் என நினைத்து குழந்தையை துணியில் பொதிந்து தூக்கி வந்துவிட்டார். இப்படி குழந்தை ஊனமாக பிறப்பதற்கு காரணம், உறவுமுறை திருமணம் என உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் கூறியிருக்கிறார். இப்படித்தான் வளர்ந்த பெண் குழந்தை வித்யா ஶ்ரீ இன்று ஆங்கிலப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவராக, அரசு ஆசிரியையாக மு

கண்டம் தாண்டி காதலியைத் தேடி அடையும் இளைஞனை தடுக்கும் சொந்த ஊர் மக்கள்! பிரின்ஸ் - அனுதீப்

படம்
  பிரின்ஸ்  சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் இயக்கம் - அனுதீப் இசை தமன் தீபாவளிக்கு வந்த படம். போட்டியிட்ட சர்தார் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுவிட்டது. மிகப்பெரும் வெற்றியா என்று கேட்டால் அதையும் உறுதியாக கூற முடியாது. இந்த வகையில் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடேவைக் கூறுகிறார்கள்.  உலகநாதன் (சத்யராஜ்), அரசு வேலை செய்துவிட்டு பணி ஓய்வு பெற்றுவிட்டு வீட்டில் இருக்கிறார். ஊருக்கு பெரிய மனிதராக காட்டிக்கொள்ள நினைப்பவர், குடியரசு தினம், சுதந்திர தினம் என அனைத்து நிக்ழச்சிகளிலும் தேசியக்கொடியை ஏற்றும் மரியாதையைப் பெற்று வருகிறார். இதை இவருக்கு கொடுத்து தனக்கு தேவையான ஆதரவைப் பெற்றுக்கொள்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த நில உரிமையாளர் பூபதி. கண்ணில்படும் நிலங்களையெல்லாம் காசு கொடுத்து சில சமயம் கொடுக்காமல் வாங்கிக் கொண்டு இருக்கிறார். இதுதான் கதையா என்றால் கதையில் இதுவும் ஒரு பகுதி.  முக்கியமான கதை என்றால், ஊரில் உள்ள பள்ளியில்தான் நடைபெறுகிறது. அங்கு உலகநாதன் மகனான அன்பு சமூக அறிவியல் ஆசிரியராக வேலை செய்கிறார். அவருக்கு வேலையில் பெரிய ஈடுபாடு கிடையாது. பள்ளிக்கு போவதைவிட சினிமா தியேட்டருக்கு போவதில்

நான், எனது என்ற சொற்களே வாழ்பனுவத்தை அழிப்பன - ஜே கிருஷ்ணமூர்த்தி

  சரியான கல்வி ஜே கிருஷ்ணமூர்த்தி நான், எனது என்ற சொற்களை ஒருவர் பயன்படுத்தும்போது அவர் சுயத்துடன் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்கிறார். இந்த நிலையில் ஒருவரின் மனம் சுதந்திரமாக இயங்குதில்லை. அவர் பெறும் அனுபவங்களும் கூட வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ள உதவுவதில்லை. தான், எனது எனும் தீவிர தன்முனைப்பு   முரண்பாடுகள், வேதனை, குழப்பங்களை ஏற்படுத்துகிறது.   இவர்களுக்கு அனுபவங்களும் மேற்சொன்ன பாதிப்புகளிலிருந்து தப்பியவையாக இருக்காது. குழந்தைகள் தங்கள் சுயத்திடமிருந்து தன்முனைப்பிடமிருந்து தப்பி விலகி இருக்க கற்றுக்கொடுப்பது சற்று வேதனை நிரம்பியதாகவே இருக்கும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழந்தைகளின் உறவுமுறைகள், நடவடிக்கை என பலவற்றையும் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். பெற்றோர், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களது தெளிவான கருத்துகளின் வழியே குழந்தைகளுக்கு உதவினால் அவர்களுக்குள் அன்பும் நல்ல விஷயங்களும் உருவாகும். கல்வி என்பது எப்போதும் நிகழ்காலத்திற்கானது. கற்றல் என்பது சூழல் தாக்கங்கள், வேறுவிதமான தன்மைகளைக் கொண்டிருக்காது. ஒருவரின் முரண்பாடுகள், துன்பங்களை நீக்கி அவரை கல்வியே முழுமையா

தத்துவங்களின் படி கல்வி அமைந்தால் என்னவாகும்? - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  கல்வி தத்துவத்தின் படி அமையக்கூடாது! நெறிமுறைகள் குறிக்கோள்கள் ஆகியவற்றின் இயல்புகளை விட அவற்றை எவை என அடையாளம் காண்பது முக்கியம். கல்வியை கற்பிக்கும் ஆசிரியர் அவற்றை கற்பிக்கும் முறை என்பது அவர் கற்று அறிந்த விஷயங்களை விட முக்கியம். ஏனெனில் கல்வி கற்கும் முறையில்தான் ஒருவர் இன்னொருவரின் புத்திசாலித்தனத்தை மேம்படுத்த முடியும். ஊக்குவித்து வளர்க்க முடியும்.ம குறிப்பிட்ட விதிமுறைகள், நெறிகள், நுட்பங்கள் வழி கற்பிப்பது ஆசிரியருக்கு எளிதானதாக மாறுகிறது. இதன் வழியாக மாணவர்களுக்கு அவர் எளிதாக கற்பிக்கலாம். ஆனால் அமைப்பு முறை, கருத்துகளை வறட்சியுடன் கூறுவது ஆகியவை தவிர்க்கப்படுவது அவசியம். கல்வி என்பது குறிக்கோள்கள், லட்சியவாதிகளைக் கொண்டது அல்ல. கல்வி என்பதைக் கற்கும் பிள்ளைகளின் வழி பெற்றோர் அவர்களைப் புரிந்துகொள்வது நடக்கவேண்டும். விதிகளை, நெறிகளை, குறிக்கோள்களை பிள்ளைகள் மீது பெற்றோர் திணிக்கின்றனர். இதனால் பிள்ளைகள் சிறு வயதிலேயே மூடிய இயல்பு கொண்டவர்களாக இறுக்கமான மனம் கொண்டவர்களாக வளர்கிறார்கள். உலகின் சவால்களை எதிர்கொள்வதற்கு முன்னர், தங்கள் மனதில் எழும் முரண்பாடுகளை சமாளித்து வென

இரு வேறு காலகட்ட கதிர் பாத்திரங்கள் சமூகத்திற்காக உழைக்கும் செயல்பாடுகள் - கதிர் 2022 - தினேஷ் பழனிவேல்

படம்
                கதிர் தினேஷ் பழனிவேல் இரண்டு வேறு காலகட்டங்களில் நடைபெறும் கதை. இரண்டிலும் கதிர் என்ற நபர் எப்படி செயல்படுகிறார். அவரது வாழ்க்கை எப்படி சமூகத்திற்கானதாக மாறுகிறது என்பதையே இயக்குநர் சொல்ல நினைத்திருக்கிறார். யாருக்காக, எதற்கு வாழ்கிறோம் என்ற கேள்விக்கு பதில் காண்பது முக்கியம். இதுதான் தந்தியில் போடுவது போல கதையின் மையம். 1970களில் நடக்கும் கதை. கோவையைச் சுற்றியுள்ள கிராமம் ஒன்றில் உழைப்புக்கு நெல் அல்லாது கூலி தர சொல்லி கம்யூனிஸ்டுகள் கூற, அதை பின்பற்றும் விவசாயிகள் என்ன விளைவுகளை சந்தித்தார்கள் என்பது பின்கதையாக விரிகிறது. தொடக்கத்தில் காவல்துறையினர் மலைப்பகுதி அருகில் கைதிகளுடன் வர, திடீரென சொல்லி வைத்தது ஜீப் நின்றுபோக அங்கே துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்கிறது. ஜீப்பின் பின்புறத்தில் ரத்தம் கசிகிறது. இதுதான் தொடக்ககாட்சி. இதற்குப் பிறகு படம் நவீன காலத்தில் நகர்கிறது. பொறியியல் படித்துவிட்டு ஊருக்குள் பீர் அடித்துவிட்டு சுற்றுபவன் கதிரவன். அவனது அப்பா, ஊருக்குள் தொழிலதிபராக இருக்கிறார். மகனைப் பார்த்து கவலைப்படுகிறார். சாதி மாறி கல்யாணம் செய்தவர்களை பிடித்து அடிக்கையில்

பெயர் அச்சிடுவதில் உருவான வெட்க கேடான அலுவலக அரசியல்! கடிதங்கள் - கதிரவன்

படம்
  26.2.2022 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  நான் இருவேளை வெளியிலும் ஒருவேளை அறையிலும் சமைத்து சாப்பிடுகிறேன். இதற்கு மட்டுமே நேரம் உள்ளது. இன்ஸ்டன்ட் உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். அத்தகைய உணவுப் பொருட்களில் எம்எஸ்ஜியை வெவ்வேறு பெயர்களில் சேர்க்கிறார்கள். வியாபாரம் என்றால் ஆறு பொய், நான்கு உண்மை சொல்வோம் என்பார்கள். இங்கு சொல்வது, அத்தனையும் பொய்யாக உள்ளது.  மதிய வேளையில் மெல்ல வெயில் அதிகரித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளாக வேலை செய்யும் கோ ஆர்டினேட்டர் பெயரை நாளிதழில் ஆசிரியர் போடவேயில்லை.  ஆசிரியர் மீது காட்ட முடியாத கோபத்தை அவருக்கு அடுத்த இடத்தில் பெயர் உள்ள என்மீது கொட்டுகிறார்  கோ ஆர்டினேட்டர். புறணி பேசுவது, சாடை பேசுவது, வன்மத்துடன் பழி போடுவது என சபை நாகரிகம் இன்றி வசை பாடி வருகிறார். ஆனால் இப்படி வன்மத்தாக்குதல் நடப்பதை சக உதவி ஆசிரியர்கள் அமைதியாக பார்த்தனர். நான் அவர்களின் நட்பு வட்டத்தில் இல்லை என்பதால் எனக்கு நேரும் பிரச்னைகளுக்கு கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். இப்படி வசை பாடுவது பட்டம் இதழுக்கு புதிதல்ல. இதற்கான

கண்டுபிடிப்புகள் வழியாக புவியியலைக் கற்க வேண்டும்! - ஜோனியா பாபெர்

படம்
  ஜோனியா பாபெர்  1862-1955) அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில், கிளார்க் கவுண்டியில் பிறந்த புவியியலாளர்.  மேல்நிலைப்பள்ளிப் படிப்பிற்காக, தொலைவில் உள்ள  எட்கர் கவுண்டியில் உள்ள பாரிஸ் எனுமிடத்திற்கு சென்றார்.  மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்த ஜோனியா, ஆசிரியர் பயிற்சியில் இணைந்தார்.   1886-88 காலகட்டத்தில்,  தனியார் பள்ளி முதல்வராகப் பணியாற்றினார். பிறகு,  குக் கவுண்டி நார்மல் ஸ்கூலில் (தற்போதைய சிகாகோ ஸ்டேட் பல்கலைக்கழகம்) , ஆசிரியராக கிடைத்த பணிவாய்ப்பை ஏற்றார். 1890 - 1899 காலகட்டத்தில் அங்கேயே  புவியியல் துறை தலைவராக உயர்ந்தார். ஜோனியா பாபெர், புவியியலின் பல்வேறு பிரிவுகளை (Meteorology, Mathematical Geography) மாணவர்களுக்குக் கற்றுத் தந்தார்.  மாணவர்கள் புவியியல் சார்ந்து புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறியவும், அதன் வழியாக பாடங்களைக் கற்க வேண்டும் என ஜோனியா விரும்பினார்.  1896இல் புவியியல் மாணவர்களுக்கான தனித்துவ மேசையை வடிவமைத்து காப்புரிமை பெற்றார். 1898ஆம் ஆண்டு ஜோனியா துணை நிறுவனராக இருந்து புவியியல் சங்கத்தைத் தொடங்கினார். 50 ஆண்டுகள் இதன் தலைவராகச் செயல்பட்டார்.  https://blogs

நாகப்பட்டினத்தை பசுமையாக்கும் ஆசிரியர்! - அருள்ஜோதியின் அரிய பணி

படம்
  நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் அருள் ஜோதி. இவர் கொலப்பாடு கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 2018ஆம் ஆண்டு இயற்கை பேரிடராக ஏற்பட்ட கஜா புயலால் ஏராளமான மரங்கள் அழிந்துபோயின. இதைப் பார்த்து கவலைப்பட்டவர், அதோடு நின்றுவிடாமல் இயற்கையான பரப்பை மீட்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.  தனது ஆசிரியர் நாகராஜ், தந்தை சண்முக சுந்தரம் ஆகியோரின் ஊக்கத்தால் நேஷனல் க்ரீன் கார்ப்ஸ் எனும் அரசின் சூழல் திட்டத்தைப் பயன்படுத்தி மரக்கன்றுகளை நட்டு வருகிறார். இதில் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தி பசுமை செயல்களை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  வீதிதோறும் பழமரம், வீதிதோறும்  நிழல்மரம் எனும் இரு திட்டங்களை அருள்ஜோதி உருவாக்கியுள்ளார். இந்த வகையில் வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது இருக்கும் நிலையை உருவாக மெனக்கெட்டுவருகிறார். இப்படி 200 வீடுகளில் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். தனிப்பட்டவர்களின் வீடுகளில் மரக்கன்றுகளை நடுவதும் பராமரிப்பதும் எளிது. ஆனால் பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு அதற்கு நீர்விட்டு பராமரித்து வருவது கடினமானது. இந்த சூழலையும் அருள்ஜோதி சமாளித்து வந்திருக்கிறார்.  மண்ணுக்கு சொந்த

பெருந்தொற்று காலத்தில் க்யூஆர் கோட் மூலம் கல்வி கற்பித்த ஆசிரியர்!

படம்
  புதிய கற்பித்தல் முயற்சி! மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சோவநகர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஹரிஸ்வாமி தாஸ்.  இவர், பள்ளியில் படிக்கும் 2,900 மாணவர்களையும், அவர்களது குடும்ப நிலையையும் அறிந்தவர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டபோது மாணவர்களுக்கு எப்படி கற்றுக்கொடுப்பது என யோசித்தார். சோவநகரில் ஏற்பட்ட மண் அரிப்பு, குடியிருப்புகள் மாற்றம் ஆகிய பிரச்னைகளையும் சமாளித்து மாணவர்களுக்கு கற்பித்து வந்தார்.  பள்ளிகள் மூடப்பட்டு பொதுமுடக்க காலகட்டம் நடைமுறையில் இருந்தது. தனது மாணவர்கள் சிலரின் வீடுகளுக்கு போனில் அழைத்தார் ஹரிஸ்வாமி தாஸ். ஏழை மாணவர்களில் 30 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தமுடியாத சூழல் இருந்தது. படிப்பதற்கான நூல்களும் கிடைக்கவில்லை என்று புகார் கூறினர். “என்சிஇஆர்டி நூல்களில் க்யூஆர் கோட் இருந்தது. ஆனால் மேற்குவங்க  மாநில அரசு பாடநூல்களில் இந்த வசதி கிடையாது. எனவே, அரசு வலைத்தளங்களிலிருந்து பாட நூல்களை தரவிறக்கி க்யூஆர் கோட் மூலம் அதனை அணுகும்படி வசதிகளை செய்தோம் ”  என்றார்.   தாஸின் மாணவர்கள் வீடுகளில், ஸ்மார்ட்போன்களை அவர்களது தந்தை அல்லது சகோதரர்கள்

தனது காதலி செய்த கொலையை கணித அறிவால் மறைக்கும் கணித ஆசிரியர்! - தி பர்ஃபெக்ட் நம்பர் - தென் கொரியா

படம்
பர்ஃபெக்ட் நம்பர் (2012) பர்ஃபெக்ட் நம்பர் தென்கொரியா ஜப்பான் எழுத்தாளர் எழுதிய தி டிவோஷன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ் என்ற நாவலைத் தழுவிய படம்.  ஒரு பெண் செய்த கொலையை அவளை விரும்பும் கணித ஆசிரியர் எப்படி மறைக்கிறார். அந்த முயற்சியில் தன்னை எப்படி எரித்துக்கொள்கிறார் என்பதே கதை.  சிறு வயதிலிருந்து கணிதம் தவிர வேறெதையும் கண்டுகொள்ளாதவர்தான் நாயகன். நட்பு, காதல் என எதுவுமே அவருக்கு அமையவில்லை. கணிதம் சார்ந்த சிக்கல் முடிச்சை அவிழ்க்கும் முயற்சியில் இருக்கிறார். நண்பன் மீது சந்தேகம் கொள்ளும் டிடெக்டிவ்  தினமும் எழுந்து பள்ளிக்கு வேலைக்கு செல்வது, அங்கு செல்லும் வழியில் உள்ள கடையில் மதிய உணவை வாங்குவது என வாழ்க்கை செல்கிறது. மதிய வாங்கும் இடத்தில் வேலை செய்யும் பெண்ணை மெல்ல நேசிக்கத் தொடங்குகிறார். அந்தப் பெண், திருமணமாகி விவகாரத்தானவர். அவர் தனது உறவினர் குழந்தையுடன், கணித ஆசிரியரின் அறைக்கு அருகில் தங்கியிருக்கிறார். ஹோட்டலில் வேலை செய்யும் பெண்ணுக்கு முன்கதை உள்ளது. அது சோகமான வருத்தக்கூடிய கதை. அதிலிருந்து தப்பிக்கவே அவர் சியோலுக்கு வந்து வேலை செய்துகொண்டிருக்கிறார்.  இந்த நிலையில் நாம் மறக்க

இருளர் குழந்தைகளுக்கு கல்விச்செல்வத்தை வழங்கும் ஆசிரியர் இளவரசன்! - அரியலூரில் புதிய முயற்சி

படம்
  இன்று தேர்வு எழுதுவதும் அதில் தேர்ச்சி பெறுவதும் கடந்து நினைத்த லட்சிய படிப்பை படிப்பதற்கான வேட்கை அதிகம் உள்ளது. இதற்கு தடையாக ஒன்றிய அரசு பல்வேறு அரசியல் விளையாட்டுகளை விளையாடி ஏராளமான நுழைவுத்தேர்வுகளை புரியாத மொழியில் வைத்து சவால்களை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் மாணவர்களை ஜெயிக்க வைக்க சிலர் தங்களையே தீக்குச்சியாக எரித்துக்கொண்டு உழைத்து வருகிறார்கள். அரியலூரின் ஓலையூர், பாப்பன் குளம் பகுதியில் 67 இருளர் குழந்தைகள் உள்ளனர். இவர்களைப் போன்றவர்கள் வறுமையை சமாளித்து பள்ளிப்படிப்பை தாண்டுவதே கடினம். அதிலும் வென்று கல்லூரியில் காலடி எடுத்து வைப்பதெல்லாம் மனோரமா இயர் புக்கில் வெளிவந்தாலும் ஆச்சரியமில்லை.  இவர்களுக்கு பயிற்றுவிக்க இளவரசன் முன்வந்து உதவி வருகிறார். தனியார் பள்ளி ஆசிரியரான இவர், மாலை நேரங்களில் இருளர் குழுந்தைகளுக்கு வகுப்புகளை எடுத்து வருகிறார். ஞாயிறு மட்டும் விடுமுறை. இப்பணியை கடந்த ஐந்து ஆண்டுகளாக செய்து வருகிறார்.  1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார் இளவரசன். இவரது கல்வி நிலையத்திற்கு பெயர் மகாத்மா காந்தி மாலைநேர படிப்பகம். இங்கு க

மாணவர்களுக்கு சொந்தக்காசில் சீருடை வாங்கித்தரும் அப்பா ஆசிரியர்! - மாணவர்களின் ஞானத்தந்தை

படம்
பள்ளிக்கு செல்ல பயப்படும் மாணவர்களே இங்கு அதிகம். அடிப்பார்கள், படிக்க சொல்லுவார்கள் என நிறைய காரணங்களை மாணவர்கள் சொல்லுவார்கள். ஆசிரியரை அப்பா என்று பாசமாக அழைக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரந்தன் அரசுப்பள்ளியில் உள்ள கணித ஆசிரியர்தான் அப்படி அழைக்கப்படுகிறார். சி அப்பாவு என்ற இயற்பெயரைக் கொண்டவர், மாணவர்களுக்கு பள்ளி தொடங்கும்போது பள்ளியில் விருந்து சாப்பாடு போடுவதோடு, ஒன்பது முதல் 12 வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி சீருடையை இலவசமாக தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுக்கிறார். கூடவே அரசு விழாக்களுக்கு மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது அவர்களுக்கு இனிப்புகளையும் தனது பணத்தில் வழங்குகிறார்.  இந்த ஆண்டு 300 மாணவர்களுக்கு பள்ளி சீருடைக்காக மட்டுமே ஒன்றரை லட்சத்திற்கும் மேல் செலவழித்துள்ளார். எதற்கு இப்படி செய்கிறார்? இவரது வாழ்க்கைதான் காரணம். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர், அப்பாவு. தனியாக இருந்து தனிமையை தேற்றிக்கொண்டு படித்து ஆசிரியராகியிருக்கிறார். பிறகுதான் பள்ளி மாணவர்கள் பலர் சரியான உடைகளின்றி பள்ளிக்கு வருவது தெரியவந்திருக்கிறது. ஒன்றாம் வகுப்ப

உறவின் நோக்கமே சுயநலம்தானா? - கடிதங்கள்

படம்
              கடிதங்கள் 3.1.2021 அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக உள்ளீர்களா ? சொந்த ஊருக்கு சென்றதில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன் . சென்னையில் இருக்கும் இந்த நேரத்தில் உங்களை நான் சந்திக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது . கல்வி வேலை வழிகாட்டியில் வேலை செய்த வெங்கடசாமியுடன் இப்போது பேசுவது இல்லை . தேவையைப் பொறுத்தே உறவுகள் என்பதை அவர் தீவிரமாக நம்புகிறார் . எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால் விலகிவிட்டேன் . அது உண்மையாக இருக்குமோ என்னமோ , எனக்கு ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளது . 2021 ஆம் ஆண்டில் இழப்புடன்தான் சம்பளக்கணக்கு தொடங்கியுள்ளது . பொதுமுடக்க காலம் என்பதால் இரண்டாயிரம் ரூபாயை வெட்டிவிட்டார்கள் . மீதியுள்ள பணத்தில்தான் ஊருக்கு பணம் அனுப்புவது , வாடகை , சாப்பாடு ஆகியவற்றை சமாளிக்க வேண்டும் . நீங்கள் வேலை செய்யும் பத்திரிகை நிறுவனத்தில் இப்போது பிடிக்கும் பிடிமானங்களைத் திருப்பித் தர வாய்ப்புள்ளது . ஆனால் எங்களுக்கு அப்படியான நிலைமை இருக்குமா என்று தெரியவில்லை . எங்கள் தலைவர் எங்களுக்கான பரிந்து பேசுவார் என