இடுகைகள்

புருவ தசைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாய்களுக்கு உருவாகியுள்ள பரிணாம வளர்ச்சி தசைகள்!

படம்
ஆல்பா படம் ஓநாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவைப் பேசியது. ஓநாய்கள்தான் மெல்ல மனிதர்களிடம் பழகி வீடு, பண்ணை என காவல் காத்து மெல்ல நாய் என மாறியது என்று கூறப்படுகிறது. இன்றுவரையிலும் கூட பிற விலங்குகளை விட நாய் மனிதர்களோடு அந்நியோனியமாக உள்ளது. காசுள்ளவர் வீட்டு நாய், ஆடி காரில் உட்காருகிறது. காசில்லாத ரிக்சாவில் தூங்குபவரின் காலடியிலும் ஆதரவாக நாய் இருக்கிறது. இந்த எடுத்துக்காட்டை ஏன் கூறுகிறேன் என்றால், நாய்க்கு தேவையானது மனிதர்களின் அன்பு ஒன்றே. அது உங்களை காசிற்காக மதிக்காது. நீங்கள் அதன் மீது கொண்ட நேசத்திற்காகவே உங்கள் மீது விழுந்து புரண்டு விளையாட அழைக்கிறது. தற்போது ஓநாய்களின் கண்களில் இல்லாத தசைகள் நாய்க்கு உருவாகியுள்ளதாக  Proceedings of the National Academy of Sciences  என்ற   அறிவியல் இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. பிற விலங்குகள் மனிதனை நேரடியாக கண்ணோடு கண் பார்க்காது. முடிந்தளவு அப்படி பார்ப்பதைத் தவிர்க்கும். நாய் மட்டுமே தனக்கான அங்கீகாரத்தைப் பெற இயல்பாக மனிதனின் கண்களைப் பார்க்கும். அப்படிப் பார்க்காதே அது சண்டைக்கு வா என்று சொல்லுவதைப் போல என்ற