இடுகைகள்

மனநோய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனநோயாளிகளோடு ஒரு போர் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  மனநோயாளிகளோடு நேருக்கு நேர் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? உடல்நலனோடு மனநலனைப் பராமரிப்பது கடினமாக இருக்கிறது . நான் அமைதியாக இருந்தாலும் அலுவலகத்தில் உள்ள உளவியல் பிரச்னை கொண்டவர்கள் ஏதாவது பிரச்னையை செய்துகொண்டே இருக்கிறார்கள் . நமக்கு தொடர்புடையவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் . இதன் பொருட்டு சில சமயங்களில் நமக்கே பாதகமான முடிவுகளைக் கூட நாம் எடுக்கவேண்டியுள்ளது . அண்மையில் அலுவலகத்தில் சேர்ந்தவர் , கணிதப்பக்கத்தைக் கவனிக்கிறார் . அவர் , இதுபோல குறைபுத்தி கொண்டவர்களால் பாதிக்கப்பட்டார் . என்னோடு டீ குடிக்க வருவதால் அவரை கார்னர் செய்தனர் . எனவே , அலுவலக நண்பரை விட்டு தனியாக பிரிய முடிவெடுத்துள்ளேன் . ஆசையா , நிம்மதியா என்றால் நான் நிம்மதியைத் தான் தேர்ந்தெடுப்பேன் . நன்றி ! அன்பரசு 7.12.2021 மயிலாப்பூர் ------------------------------------------------------------------------------- ------------------------------------------------ என்னமோ ஏதோ ... அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? எங்கள் நாளிதழ் ஜனவரி தொடங்குவதாக கூறியிருக்கிறார்கள் . கட்

பனிரெண்டு ஆண்டுகளில் நாட்டையே அதிரடி சட்டங்களால் மாற்றியமைத்த ஆட்சியாளர் ! ஹிட்லர் - பா.ராகவன்

படம்
                ஹிட்லர் பா . ராகவன் கிழக்கு பதிப்பகம் ஹிட்லர் பனிரெண்டுகள் ஆண்ட ஆட்சியை , வளர்ச்சியை , அழிவை , மனநிலையை , பழக்க வழக்கங்களை வாசிக்க எளிமையான முறையில் சுவாரசியமாக சொல்லுகிற நூல்தான் இது . மருதன் எழுதிய ஹிட்லர் என்ற நூலும் , பா . ராகவனின் நூலும் வேறுபடுகிற இடம் ஆய்வுத்தன்மைதான் . மருதனின் நூல் ஹிட்லரின் பல்வேறு பரிணாமங்கள் , அவரின் சிந்திக்கும் திறன் , பேச்சு ஆகியவற்றை ஆய்வு நோக்கில் எது சரியாக இருக்க முடியும் என்ற கோணத்தில் பார்க்கிறது . பா . ராகவனின் இந்த நூல் அந்தளவு தொலைவாக செல்லவில்லை . ஜெர்மனியில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளை சந்தர்ப்பவாதி ஒருவர் சரியாக பயன்படுத்திக்கொண்டால் எப்படியிருக்கும் என்பதை ஹிட்லர் நூல் மூலம் காட்டியுள்ளார் . பலரும் இன அழிப்பு , யூதர்களின் துன்பம் என்பதை மட்டும் முக்கியப்படுத்தும்போது பொருளாதார வளர்ச்சி சார்ந்து நாடு என்ன நிலையில் இருந்தது என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார் . இது ஆச்சரியகரமான ஒன்று என கூறலாம் . ஹிட்லரின் செயல்திறனுக்கும் கனவுக்க்கும் உழைக்கும் திறனுக்கும் அவர் வேறு வழியில் சென்றிருந்