இடுகைகள்

சுமோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எப்படி சாப்பிடுவது? - டயட் முறைகள்

படம்
pixabay எப்படி சாப்பிடுவது? காலை எட்டுமணி, மதியம் ஒரு மணி, இரவு எட்டுமணி என மூன்று வேளை உணவு சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாகி இருக்கும். ஆனால் இப்படி சாப்பிடவேண்டும் என்று அவசியமில்லை. இந்த சுழற்சியில் அனைவரது உடலும் இயங்குவதில்லை என்பது உங்களுக்கு நோய் வந்தபிறகுதான் தெரியவரும். இரவுப்பணிகளுக்கு செல்பவர்களுக்கு உடல் பருமன் நீரிழிவு பிரச்னைகள் ஏற்படும். என்ன காரணம் தெரியுமா? நாம் ஆதிகாலத்தில் இருந்தே சூரியனை மையமாக கொண்டு வாழ்ந்து பழகிவிட்டோம். இரவு என்பது சிங்கம், புலி போன்றவற்றின் வேட்டைக்காலம். மனிதர்கள் பகலில் வேட்டையாடி உண்டுவிட்டு குகையில் பதுங்கிவிடுவதே வழக்கம். இந்த பழக்கத்தில் இருப்பவர்களுக்கு ஐ.டி பணி, நாளிதழ் பணி என கிடைக்கும்போது அது முதலில் வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் நாளடைவில் உடலில் வளர்சிதை மாற்றம் மாற்றமடையத் தொடங்கும். இதனால் கன்னம் லேஸ் பாக்கெட் போல உப்பலாக தோன்றும். வயிற்றில் பீர் பெல்லி உருவாகும். ஆளே நவரச திலகம் பிரபு போல நடக்கத் தொடங்குவீர்கள். இதெல்லாம் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றின் தொடக்க நிலை ஆகும்.  க