இடுகைகள்

வடிவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜெயன்ட் காஸ்வே - அரக்கர்களின் மோதலால் உருவான பாறைவடிவம்

படம்
  தி ஜெயன்ட் காஸ்வே இடம் – வடக்கு அயர்லாந்து கலாசார தொன்மை இடமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு 1986 சற்று வெயில் இருக்கும் நாளாக சென்றால் நன்றாக சுற்றிப் பார்க்கலாம். கற்களில் ஈரம் இருந்தால் கால் பிடிமானமின்றி வழுக்கும். இதைப்பற்றி முன்னமே எழுதியிருக்கிறோம். ஆனாலும் என்ன ரைமிங்காக, டைமிங்காக இப்போதும் எழுதலாம். கலாசார தொன்மை என்ற கோணத்தில் எழுதப்படும் கட்டுரை இது. அயர்லாந்தில் இருக்கும்போது முடிந்தால் ஜெயன்ட் காஸ்வே சென்று பாருங்கள். சூரிய உதயம் அட்லான்டிக் கடலில் வரும்போது, அருங்கோண கற்களில் சூரிய ஒளி மெல்ல படியும் காட்சி அற்புதமானது. பழுத்த இலை மரத்திலிருந்து காற்றின் வழியே இறங்கி நிலம் தொடுவது போன்ற காட்சி. கடல் அலைகள் வந்து கற்களில் மீது மோதும் ஒலியும் நீங்கள் கேட்க முடிந்தால் கவனம் அங்கு குவிந்தால் அதை நீங்கள் நினைவில் ஏதோ ஓரிடத்தில் பின்னாளிலும் வைத்திருக்கலாம்.   இரு அரக்கர்களுக்கு நடைபெற்ற போர் காரணமாக காஸ்வே உருவானதாக கூறுகிறார்கள். இதை உருவாக்கியவர் ஃபின் மெக்கூல். அயர்லாந்தை கடந்து செல்ல கற்பாலத்தை உருவாக்க நினைத்துள்ளார். ஆனால் அது சாத்தியமாகவில்லை. பிறகு தன்னை எதிரி பெனான

எளிதாக கிடைக்கும் பிளாஸ்டிக்!

படம்
                பிளாஸ்டிக் . இன்று சூழலியலாளர்கள் கனவிலும் கூட எதிர்த்து வரும் பொருள் . ஆனால் பிளாஸ்டிக் , புழக்கத்திற்கு வந்தபிறகுதான் மக்களுக்குத் தேவையான தினசரி பொருட்களின் விலை குறைந்தது . இன்று எந்த பொருளையும் எளிதாக எடை குறைந்த மலிவான விலையில் பிளாஸ்டிக்கால் உருவாக்க முடியும் . கச்சா எண்ணெய் , எரிவாயு ஆகியவற்றிலிருந்து பிளாஸ்டிக் பெறப்படுகிறது . கார்பன் கொண்டுள்ள மூலக்கூறுகளை பாலிமர் என்று கூறலாம் . பெரும்பாலான தொழிற்சாலை தயாரிப்பு பிளாஸ்டிக்குகளில் மோனோமர்கள் பயன்படுகின்றன . பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வது என்பது அதனை அதிக வெப்பநிலையில் உருக்கி வேறு ஒரு பொருளாக மாற்றுவதுதான் . தெர்மோபிளாஸ்டிக்குக்குகளை எளிதில் உருக்கினாலும் தெர்மோசெட் வகை பிளாஸ்டிக்குகளை இப்படி மாற்றி வேறு பொருட்களாக மாற்றுவது கடினம் . கச்சா எண்ணெய வளம் என்பது தீர்ந்துபோக கூடியது என்பதால் , கரும்பு , சோளத்திலிருந்து பயோபிளாஸ்டிக் தயாரிக்கும ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன . இதன் விளைவாக பிளாஸ்டிக்கை 3 டி பிரிண்டில் முறையில் உறுப்புகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்த முடியும் . இதிலுள்ள வக

ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த திரவ வடிவிலான கண்ணாடி! - புதிய நீள்வட்ட வடிவிலான மூலக்கூறுகள் கொண்ட பொருள்

படம்
                ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த திரவ வடிவிலான கண்ணாடி ! ஜெர்மனி , நெதர்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் கான்ஃபோகல் மைக்ரோஸ்கோப்பி எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திரவ வடிவிலான கண்ணாடியை கண்டறிந்திருக்கிறார்கள் . கண்ணாடி என்பது உறுதியாக இருந்தாலும் அதன் அமைப்பு பற்றி விஞ்ஞானிகள் அறியவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன . நீள்வட்ட கூழ்மமான இதிலுள்ள துகள்கள் அலைந்தபடி உள்ளன . குளிர்சாதனப்பெட்டியில் உள்ள ப்ரீசரில் உறைதல் எப்படி நடக்கிறது என கவனித்திருக்கிறீர்களா ? பிளாஸ்டிக் தட்டில் உறைதல் என்பது குறிப்பிட்ட வரிசைப்படி நடைபெறும் . நடுவிலிருந்து ஐஸ்ட்ரே உறையத்தொடங்கும் . ஆனால் கண்ணாடி கிரிஸ்டல் வடிவில் அமைந்தது அல்ல . இதன் காரணமாக கண்ணாடி திரவ வடிவிலிருந்து திட வடிவிற்கு மாறும்போது செயல்பாடுகள் வரிசைப்படியாக நடைபெறுவதில்லை . எனவே , கண்ணாடி பற்றி அறிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் . ஜெர்மனியைச் சேர்ந்த கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதற்கான வேதிக்கலவையை உருவாக்கி சோதித்து திரவ வடிவிலான கண்ணாடியை அடையாளம்

பாதாளச்சாக்கடைகளின் மூடி வட்டமாக இருப்பது ஏன்? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
                  கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசிப்பது ஆபத்தானதா ? கார்பன் உள்ள பொருட்களை எரித்தால் உருவாகும் வாயுவின் பெயர்தான் கார்பன் மோனாக்சைடு . மோசமான வாயுக்கள் சுவாசிக்க தடுமாற்றம் தரும் வாசம் வரும் . கார்பன்மோனாக்சைடை ஒருவர் சுவாசிக்கும்போது அதனை அறிய முடியாது . காரணம் , இதற்கு நிறம் . வாசனை கிடையாது . இந்த வாயுவால் நிறைய மக்கள் அமெரிக்காவில் இறந்துள்ளனர் . அமெரிக்காவில் இந்த வாயுவை தற்செயலாக சுவாசித்து நிறைய மக்கள் இறப்பை எதிர்கொண்டுள்ளனர் . அமெரிக்காவில் இப்படி ஆண்டுதோறும் 170 பேர் இறந்துள்ளனர் . சிலர் இதனை தற்கொலைக்கும் பயன்படுத்துகின்றனர் . இன்று தயாரிக்கப்படும் கார்கள் பலவும் 70 சதவீதம் கார்பன் மோனாக்சைடை குறைத்து வெளியிடுகின்றன . மரங்களை வெட்டி எரிப்பது , எரிவாயுவில் இயங்கும் ஜெனரேட்டர்கள் ஆகியவை கார்பன் மோனாக்சைடுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன . ஒருவர் இந்த வாயுவை சுவாசிக்கும்போது அவருக்கு சுவாசிப்பது கடுமையாகும் . ரத்தவோட்டத்தில் ஆக்சிஜனை விட எளிதாக இந்த வாயு கலப்பதால் , உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறையாகும் . இதன் விளைவாக , குமட்டல் , தலைவலி ஏற்