இடுகைகள்

நீக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலங்கள் கடந்த பின்பும் காயங்கள் ஆறவில்லை. வேதனை தீரவில்லை

படம்
  காலங்கள் கடந்த பின்பும் காயங்கள் ஆறவில்லை. வேதனை தீரவில்லை கடந்த சனிக்கிழமை இரவு எனது போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. ஆங்கிலச்செய்தியை தமிழ்படுத்தி கூறுகிறேன். "அன்பு, தயவு செய்து உதவுங்கள் ஃப்ரீதமிழ் த.சீனிவாசனின் தொடர்பு எண்ணைக் கொடுங்கள்" என செய்தியில் கூறப்பட்டு இருந்தது. ஆங்கிலச்செய்தி அனுப்பும் அளவுக்கு நண்பர்கள் யாருமில்லையே என்று பார்த்தேன். அனுப்பியவர் பெயர் ராமமூர்த்தி.  ஆம். அவரேதான். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கடித நூல் பற்றிய புகாரை கொடுத்த முன்னாள் நண்பர்தான். இந்த செய்தி வந்ததும் எனக்குத் தோன்றியது. நூல் புகாருக்கு பிறகு அவர் என்னுடன் தொலைபேசியில் பேசவே இல்லை. திடீரென சில மாதங்களுக்கு முன்னர்தான் அவரே தொடர்பு கொண்டு பேசினார். பிறகு பேசுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. திடீரென இப்படியொரு குறுஞ்செய்தி என்றதும் எனக்கு மனதில் தோன்றியது. வேண்டுமென்றே ஏதோ பிரச்னையில் நம்மை இழுக்கிறாரோ என்று....  உள்ளுணர்வு சொன்னது சரிதான்.  இரண்டு பக்க கடிதம் ஒன்றை பச்சை மசியில் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார் முன்னாள் நண்பர் திரு. ராமமூர்த்தி. அதாவது, விஷயம் என்னவென்றால

ட்விட்டரை பணிய வைக்க படாதபாடு படும் மத்திய அரசு!

படம்
                 சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியாவின் குடியரசுத் தலைவர் முகமது புகாரி, தனது கருத்தை வெளியிட மறுத்து நீக்கிய ட்விட்டருக்கு தடை விதித்தார். அரசின் தணிக்கை முறைக்கு ஆதரவான கூ செயலிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு புதிய தகவல்பாதுகாப்புக்கொள்கையை உருவாக்கி அதற்கு ஏற்பட சமூக வலைத்தள நிறுவனங்கள் கட்டுப்பட வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன. ட்விட்டர் மட்டும் முரண்டு பண்ண அதனை பின்விளைவுகளை எ ண்ணிப் பாருங்கள் என மத்திய அரசு மிரட்டி வருகிறது. பாஜக வைச் சேர்ந்த சம்பித் பத்ரா காங்கிரஸ் கட்சி கோவிட்டைப் பயன்படுத்தி டூல்கிட் பிரசாரங்களை, திட்டங்களை வகுக்கிறது என குற்றம் சாட்டினார். ட்விட்டரையும் கூட போகிற போக்கில் செய்திகளை மாற்றி வெளியிடுகிற ஊடகம் என்று திட்டினார். இதற்கு தகவல் தொடர்புத்துறை அமைச்சகமும் முட்டுக்கொடுத்தது. குருகிராமில் இருந்த ட்விட்டர் நிறுவனமும் மிரட்டப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை அதிகாரியாக ட்விட்டர் நியமிக்கவேண்டும் என்பதுதான் அரசின் சட்டம் சொல்லும் நியதி. மே 27இல் , அரசின் சட்டங்களைப் படித்த ட்விட்டர், அரசு, ஜனநாயக கொள்கைகளுக்கு எதிராக செயல