இடுகைகள்

தங்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது குடும்ப சொத்தை மீட்டு சிதறிய குடும்பத்தை ஒருங்கிணைக்கும் நாயகன்!

படம்
  சர்தா புல்லோடு  வெங்கடேஷ் , நக்மா, சங்கவி  தனது அம்மாவை வேசி என சொல்லி அப்பாவிடம் இருந்து பிரித்து அவரை குடிநோயாளியாக்கி, தங்கையை பணி மனுஷியாக்கும் அத்தையை பழிவாங்கும் நாயகனின் கதை.  மேலே சொன்ன விஷயங்களை சீரியலுக்கு பொருத்தமாக வைக்கலாம். ஆனால் படத்திற்கு கதையாக வைத்து எடுத்தால் எப்படியிருக்கும்? கண்றாவியாகவே இருக்கும். மாற்றமே இல்லை. அதேபோல்தான் இருக்கிறது. கொஞ்சம் ஆசுவாசமாக இருக்க சங்கவி, நக்மாவின் கிளுகிளு நடனம் உதவுகிறது.  தெலுங்குபடங்களில் நாயகியை ஸ்டாக்கிங் செய்து காதலிக்கும் வம்பு பண்ணும் நாயகன் கூடவே அவரது மாமியாரையும் பாலியல் சீண்டல்களை செய்து ஆண்மையை நிரூபிப்பது வழக்கம். இதை நகைச்சுவை என நினைத்து செய்கிறார்கள். ஆனால் சண்டாளமான காட்சியாக வந்துவிடுவது வாடிக்கை. இதிலும் மாமியார் மஞ்சுளாவுக்கு அப்படியான காட்சிகள் ஒன்றல்ல இரண்டை வைத்திருக்கிறார் இயக்குநர். தெலுங்கில் இரு நாயகிகளை இடுப்பில் வைத்து ஆடுவது, அத்தை, அத்தை பெண்கள் இருவர் என த்ரீசம், ஃபோர்சம் செய்வதெல்லாம் உண்டு. கண்களைக் கட்டும் காம வித்தைகள் அவை.  கோட்டா சீனிவாசராவ், சத்ய நாராயணா என இரு நடிகர்கள் நன்றாக நடித்திருக்கிற

தங்கச்சியின் கையால் உயிரைப் போக்கிக்கொள்ளும் அண்ணனின் அன்லிமிடட் பாசம்! வீரசிம்ம ரெட்டி-என்பிகே (2)

படம்
  வீரசிம்மா ரெட்டி வீர சிம்ம ரெட்டி இயக்கம் கோபிசந்த் மலினேனி இசை தமன் சாய் கண்டசாலா என்பிகே, ஸ்ருதி, ஹனிரோஸ், வரலட்சுமி   அண்ணன் தங்கை பாசத்தின் எக்ஸ்ட்ரீம் வெர்ஷன். இருவருக்கும் பாசத்தால் ஒருவருக்கொருவர் தம் உயிரைக் கூட விடுகிறார்கள். இதனால் ஓ ஹென்றி கதை போல யாருக்கும் சல்லி பைசா பிரயோஜனம் இல்லாமல் போகிறது.   இதனால் பாசமேனும் மனதில் பதிகிறதா என்றால் அதுவும் இல்லை என்பதுதான் வேடிக்கை. முதல் காட்சியில் ஊரின் பெரிய நிலத்தைக் காட்டுகிறார்கள். அங்கு கட்டிலில் அமர்ந்திருக்கிற ஒருவரிடம் கல்யாணப் பத்திரிக்கையை ஒருவர் கொண்டு வந்து கொடுக்கிறார். அதற்கு ஊரின் பெரிய தலையை வரச்சொல்ல சொல்லுகிறார். வந்தால் அங்கு வைத்தே அவரைக் கொல்வதாக சொல்லுகிறார். ஆனால் அதற்கு கட்டிலில் உட்கார்ந்திருக்கிறவர். அது முடியாது. சாத்தியமே இல்லை என்கிறார். இதனால் அவரைக் கொன்று, அவரது பயிர்களை தீ வைத்து எரித்து விடுகிறார். அவர்தான் வில்லன், பிரதாப் ரெட்டி. புலிசர்லா ஊரில் வாழும் வீர சிம்மா ரெட்டி, அந்த ஊரையே வாழ வைக்கிற ஆள். அதேசமயம் நல்லதோ கெட்டதோ இரண்டையும் அந்த ஊர் மக்களுக்கு அவரே செய்கிறார். அவர் ஏற்பாடு

அநீதி வில்லன்களை எதிர்க்கும் பொறுப்பான திருடன் - சிரஞ்சீவி, ராதா

படம்
  தொங்கா  சிரஞ்சீவி, ராதா மற்றும் பலர்  யூசுவலான பழிக்குப்பழி கதைதான். அதையே சீரியல் போல மாற்றி வள வளவென இழுத்து பிறகு சுபம் போட்டிருக்கிறார்கள்.  சிரஞ்சீவி கார்களைத் திருடுவது, பணத்தை கொள்ளையடிப்பவர்களிடமிருந்து கொள்ளையடிப்பது என செய்து பிழைக்கிறார். இன்னொரு விஷயம், அவர் தனது குடும்பத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார். திருடர் என்றாலும் அவர் ஒரு லட்சியவாதி. திருடும் பணத்தில் தனது மெக்கானிக் நண்பனுக்கும், தனக்கு கொஞ்சம் வைத்துக்கொண்டு மீதியை அனாதை இல்லங்களுக்கு கொடுத்துவிடுகிறார். எவ்வளவு நல்ல மனசு பாருங்க சாரே! ஊரில் இரண்டு பணக்கார ர்கள் இருக்கிறார்கள். அத்தனையும் கடத்தல், பிறரை ஏமாற்றுதல் செய்தே சம்பாதித்தது. அவர்களிடம் உள்ள சொத்துக்களை தன் பக்கம் இழுத்து அவர்களை கதறவிட நினைக்கிறார். ஏன் அப்படி செய்கிறார் என்றால் நிச்சயம் அதற்கான ஃபிளாஷ்பேக் சொல்லித்தானே ஆகவேண்டும். அதை முதலிலேயே சொல்லிவிடுவதால், கதையில் புதிய பாத்திரங்களைக் கொண்டு வந்து கதையை இழுக்கிறார்கள்.  வருமானவரித்துறை அதிகாரி விஸ்வநாதன், அடுத்து இன்ஸ்பெக்டர். விஸ்வநாதனை தூண்டிவிட்டுத்தான் ஊரின் இரு பணக்காரர்களையும் பீதி அடைய வைக்கி

எதிரியை மாறுகை மாறுகால் வாங்கிவிட்டு அமைதியை போதிக்கும் படம்! சமரசிம்ஹா ரெட்டி - பாலைய்யா, சிம்ரன், அஞ்சலா ஜாவேரி

படம்
  சமரசிம்ஹா ரெட்டி பாலகிருஷ்ணா, சிம்ரன், அஞ்சலா ஜாவேரி இயக்கம் - ஜி கோபால் கதை வி விஜயேந்திர பிரசாத் வசனம் பாருச்சி பிரதர்ஸ்  இசை மணிசர்மா  ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் மோட்டல் ஒன்றுக்கு அப்புலு வருகிறான். அவன் கையில் பணம் இல்லை என்பதால் சுயநலமான சுமித்ராவின் ஹோட்டலில் வேலைக்கு சேருகிறான். இந்த ஹோட்டலுக்கு போட்டியாக சிட்டம்மா என்ற பெண்மணி ஹோட்டல் வைத்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் தொழில்போட்டி உள்ளது.   அப்புலுவைப் பார்த்ததிலிருந்தே சிட்டம்மாவுக்கு இவன்தான் தனக்கு ஏற்றவன் என மனம் சொல்லுகிறது. ஹோட்டலில் மூன்று பெண்கள் வேலை செய்கிறார்கள். இவர்களை சுமித்ரா கடுமையாக திட்டி வேலை செய்யச் சொல்லுகிறார். இந்த பெண்களுக்கு அத்தைதான் ஹோட்டலை நடத்தும் பெண்மணி என அப்புலு தெரிந்துகொள்கிறான்.  மூன்று பெண் பிள்ளைகளில் முதல் பெண் திருமணத்திற்கு தயாராகி நிற்கிறாள். அடுத்தவள் படிக்கவேண்டும் என ஆசைப்பட்டு வேலைநேரம் போக படித்துக்கொண்டு இருக்கிறாள். கடைக்குட்டியான சிறுமி, அத்தையால் அடித்து உதைக்கப்பட்டு கால் முடமாகி கிடக்கிறாள். இவர்களுக்கு அப்புலு ஏன் உதவி செய்ய நினைக்கிறான் என்பதுதான் படத்தின் கிளைக்

மாற்றுத்திறனாளி தங்கையைக் காப்பாற்றத் துடிக்கும் பாச அண்ணன்! வீரபத்ரா 2006 - பாலகிருஷ்ணா, சதா, தனுஸ்ரீ தத்தா

படம்
  வீரபத்ரா 2006 தெலுங்கு பாலகிருஷ்ணா இயக்குநர் - ஏ.எஸ். ரவிகுமார் சௌத்ரி வசனம் மருதுரி ராஜா  இசை - மணி சர்மா  முரளி கிருஷ்ணா, தனது சொந்த ஊரிலிருந்து ஹைதராபாத்திற்கு வருகிறார். தனது சகோதரியை நல்ல கல்லூரி தேடி படிக்க வைப்பதுதான் நோக்கம். அவரது சகோதரி யார் என முரளி கிருஷ்ணா  வாழும் காலனி மக்களே தேடும்போதுதான் அவரது பின்புல வரலாறு தெரிய வருகிறது. அவருக்கும் சிறையில் கொலைக்குற்ற தண்டனை அனுபவிக்கும் பெத்திராஜூக்கும் பெரும் பகை உள்ளது. அவரது ஆட்கள் முரளி கிருஷ்ணாவைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். இதுதான் கதை.  பாலகிருஷ்ணா படம் முழுக்க யாரையோ ஒருவரைக் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறார். காலனி மக்களைப் பாய்ந்து பாய்ந்து காப்பாற்றுவதே போதுமானது. படம் நெடுக அவர் முழு முயற்சியாக மனிதர்களைக் காப்பாற்றுகிறார். ஆனால் படத்தைக் கைவிட்டுவிடுகிறார். இயக்குநரும் படப்பிடிப்பின்போது அப்படியே டீக் குடிக்க போய் பிரியாணி சாப்பிட சென்றுவிடுகிறார்கள் என்றுதான் நினைக்கவேண்டும். பிரகாஷ்ராஜ், ஷாயாஜி ஷிண்டே ஆகிய நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் நடிக்கவேண்டாம் என கடுமையாக ஆணையிட்டுவிட்டார்கள் போல. அவர்களும் நிறைய காட்சிகள

புகையிலையாய் சுருங்கும் பெற்றோர்! - கடிதங்கள்

படம்
          புகையிலை இலையாய் சுருங்குகிற வாழ்க்கை! அன்புத்தோழர் சபாபதிக்கு , வணக்கம் . கையில் எலும்பில் ஏற்பட்ட காயம் குணமாகி இருக்கும் என்று நினைக்கிறேன் . எனக்கு அலுவலகத்தில் இருந்து ஓலை வந்துவிட்டது . நான் 8.2..21 அன்று அலுவலகத்தில் இருக்க வேண்டும் . இனிமேல் பரபர வாழ்க்கை தொடங்கிவிடும் . வீட்டில் நான் இத்தனை நாட்கள் இருக்க வாய்ப்பு கிடைத்ததே ஆண்டவனின் அருள்தான் காரணம் . அப்பாவுக்கு 68 வயது ஆகிவிட்டது . சர்க்கரை , ரத்த அழுத்தம் , கண்பார்வை மங்கல் என தடுமாறுகிறார் . ஆனால் என்னால் வேலை காரணமாக வீட்டில் இருக்க முடியவில்லை . இருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான் . ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை . நம்மை பெற்றவர்கள் , வளர்த்தவர்கள் கண் முன்னே காய்ந்து சுருங்கி புகையிலை போல மாறுவது மனதைப் பிழிவது போலவே உள்ளது . வீட்டில் இருந்த நாட்களில் அம்மாவுக்கு சமைக்க தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தேன் . அம்மாவுடன் நிறைய பேசினேன் என்று நினைக்கிறேன் . அவள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதால் நான் பேசியது அவளது காதில் விழுந்திருக்குமா என்றே தெரியவில்லை . திருமண விஷயங்களுக்கு கூட கா

குடும்ப பாசமா, உலகை காப்பதா என முடிவு செய்யும் கிராமவாசி இளைஞனின் சாகச பயணம்! மார்ஷியல் யுனிவர்ஸ்

படம்
                  மார்ஷியல் யுனிவர்ஸ் சீன தொலைக்காட்சி தொடர் 42 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர் சீனாவில் சிறு கிராமத்தில் வாழும் கோணங்கித்தனமான குடும்ப பாசம் கொண்ட லின் டாங் எப்படி அசுரர்களைக்க கட்டுப்படுத்தி அடக்கும் தாயத்து குருமாராக மாறினார் , உலகை காப்பாற்றினார் என்பதே கதை . இந்த தொடரின் முக்கியமான பலம் , லின் டாங் என்ற நாயகனின் கோணங்கித்தனமான சேட்டைகளும் , அபாரமான நடிப்பும் , சண்டையும்தான் . இதுதான் தொடரை சலிப்பு தராமல் பார்க்க வைக்கிறது . சில எபிசோடுகளில் போதுண்டா பரந்தாமா என விரக்தி வரவும் வைக்கிறது . லீ வம்சம் நடத்தும் கிளாடியேட்டர் ரக மைதானக் காட்சியில் தொடர் தொடங்குகிறது . அம்மன் பட வில்லன் போன்ற ஒருவரை சன்னமான சைசில் உள்ள லின் டாங் எப்படி தாக்கி வீழ்த்துகிறான் என்பதே காட்சியாக விரிகிறது . அவனுக்கு ஆதரவு தந்து உதவுபவள் அவனது தங்கை குவிங் டாங் . நோயுற்ற தந்தையின் மருத்துவச்செலவிற்காகெ லின் டாங் தனது உயரையே பந்தய மைதானத்தில் பணயம் வைக்கிறான் . இத்தனைக்கும் குங் பூ கலையை முறையாக பயிற்சி செய்யாதவன் . அவன் தான் எந்த வம்சம் என்று கூறாமல் போட்

வட்டி கட்டி தன் சொந்த நிலத்தை மீட்க திருட்டை தொழிலாக கொள்ளும் நல்லவன் மாதவன்! - தொங்கோடு - ரவிதேஜா

படம்
              தொங்கோடு சிறுவயதில் தனது தோழிக்காக காத்தாடியை திருடும் சிறுவன் , வளர்ந்தபிறகு எப்படியாகிறான் என்பதுதான் கதை .    கிராமத்தில் நடைபெறும் கதையில் மாதவன் தனது தோழிக்காக முதலில் திருட்டில் ஈடுபட்டு வீட்டுக்கு வரும்போது வீடு வட்டிக்கடைக்கார ரால் சூறையாடப்பட்டுள்ளது . அந்த வட்டிக்கார ர் வேறு யாருமல்ல . அவனது பெண்தோழியின் அப்பாதான் . இந்த சோகத்தில் மாதவனின் தந்தை இறந்துவிடுகிறார் . தங்கையுடன் வீடில்லாமல் இருக்கும் மாதவன் மெல்ல கிராமத்தில் சோற்றுக்காக திருடத் தொடங்குகிறான் . அதுவே அவனது தொழிலாக மாற முன்னாள் திருடர் சிறப்பாக பயிற்சி கொடுக்கிறார் . ஆனாலும் மாதவனிடம் இருக்கு்ம் நேர்மை , தான் கட்டவேண்டிய வட்டியை சரியாகத்தான் வட்டிக்காரருக்கு கட்டுகிறார் . அவரது தந்தை வட்டிக்காரரால் இறந்துபோனாலும் கூட அவர் மேல் துவேஷம் கொள்வதில்லை .    ஆதரவற்ற சிறுவர்களை முடிந்தவரை படிக்க வைக்க பணம் கொடுத்து உதவுகிறான் . இதனால் ஊரிலுள்ளவர்கள் மாதவனை பெரிதாக நினைத்து பயப்படுவதில்லை . பணக்காரர்கள் மட்டுமே பயப்படுகிறார்கள் . இந்த நேரத்தில் நகரத்தில் படித்து வந்த பெண்தோழி வளர்ந்