இடுகைகள்

வாதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேரம் தவறாமல் சாப்பிடுவது, லக்கி சீட்டில் உட்காருவது என பழக்கத்தை மாற்றிக்கொள்ளாத மனிதர்களின் உளவியல்!

படம்
  எங்கள் அலுவலகத்தில் ஹசார் என்ற ஓவியர் பணியாற்றி வந்தார். அவருக்கு வேலையில் பெரிதாக ஈடுபாடு ஏதும் கிடையாது. காலையில் பத்து மணிக்கு வருபவர், வந்தவுடனே சோற்றுக்கு யார் என்ன கொண்டு வந்தார்கள் என ஹர ஹர மகாதேவகி குரலில் விசாரிக்கத் தொடங்குவார். தான் எங்கே உட்காருவது, தனக்கு வேண்டும் விஷயங்கள் மீது தீவிர ஆர்வம் உண்டு. அதை யாரும் தடுக்க கூடாது என்று நினைப்பார். தான் வேலைக்கு வரும்போது அலுவலகத்தில் மின்விளக்கு எரிய வேண்டும் என்பதே அவரது சென்டிமெண்ட். ஆனால் அலுவலகமோ நீங்கள் வேலை செய்யும்போது மின் விளக்கை பயன்படுத்துங்கள். சீட்டில் இல்லாதபோது விளக்கை அணைத்து விடுங்கள் என மிரட்டல் விடுத்திருந்தது. அதை நான்  கடைபிடித்தபடியே இருந்தேன். ஒருமுறை காலையில் அப்படி வேலை செய்துகொண்டிருந்தபோது,தனது இருக்கைக்கு விளக்கு போடவில்லை என சண்டைக்கு வந்துவிட்டார் ஹஸார். அவருக்கு இருந்த சென்டிமென்ட் பற்றி எனக்கேதும் தெரியவில்லை.  அலுவலக விதியை விளக்கியபோதும், அதை அவர் துளியும் ஏற்கவில்லை. இவர் மட்டுமல்ல இதுபோல நிறைய முட்டாள்தனமான கொள்கைகளை நம்புகிற பைத்தியங்கள் உலகம் முழுக்க உண்டு. உலகம் தட்டையானது, குறிப்பிட்ட நேர

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் எக்ஸோ அப்ஸ்!

படம்
  விபத்து அல்லது புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்போது, மருத்துவ சிகிச்சைகள் உதவுகின்றன. நேரடி விளைவாக உயிர் மிஞ்சினாலும் கூட உடலின் இயக்கங்கள் ஒரு கட்டத்தில் தேக்கமாகி விடுகின்றன. இதனால் வீல்சேரில் வாழ்க்கை நடைபெறும் நிலையாகிறது. நிரந்தரமாக இப்படி ஒருவர் சிகிச்சை பெற்று வருவது என்பது பிறருக்கும் பாரம் என ஏதாவதொரு சூழலில் நினைக்கத்தோன்றும். இதற்கு தொழில்நுட்பம் உதவுகிறது.  சியோல் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எக்ஸோ ஆப்ஸ் என்ற கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கருவியைப் பயன்படுத்தினால், வாதம் வந்து செயலிழந்து போனவர்களைக் கூட பேச, பாட, வைக்க முடியும். வயிற்றுப்பகுதியில் ஒருவர் அழுத்தம் கொடுத்தால் போதும். அதனை வைத்து மூச்சுவிடுவது, பாடுவது, இருமுவது ஆகியவற்றை ஒருவர் எளிதாக செய்ய முடியும்.  தென்கொரியாவில் 2012ஆம் ஆண்டு கிம் ஹியூக் குன் என்ற பாடகர் கார் விபத்தில் பாதிக்கப்பட்டார். இதன் விளைவாக அவருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்து போனது. கிராஸ் என்ற பேண்ட் குழுவில் பாடகராக இருந்தவருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்து போனதால் பாட முடியவில்லை. இவருக்கு உதவுவதற்காகத்தான் முதலில் எக்ஸோ ஆப்ஸ் முயற்சி

மரபணுக்கள் ஏற்படுத்தும் பரம்பரை நோய்களை உணவு, உடற்பயிற்சி மூலம் தடுக்கலாம்!

படம்
                மரபணுவை வெ்ல்ல முடியுமா ? ஒருவரால் அவரது குடும்பம் காரணமாக ஏற்படும் நோய்களிலிருந்து தப்பிக்க முடியாது . ஆனால் அதற்கேற்ப உணவுப்பழக்கம் , உடற்பயிற்சி அமைவது அவசியம் . ஒருவரது குடும்பம் சார்ந்து மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு , புகைப்பிடிப்பது , அதிக கொழுப்பு , உடல் பருமன் , நீரிழிவு நோய் , அதிக ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படலாம் . சிலர் பிறக்கும்போது ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருக்கும் , ரத்த தட்டுகளில் அழற்சி உருவாகியிருக்கும் . இவர்களுக்கு இதயத்தசை சார்ந்த நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது . முறையான உடற்பயிற்சி , உணவுமுறை ஆகியவற்றை ஒருவர் கையாளும்போது மரபணு ரீதியான பிரச்னைகளை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் . பழங்கள் , காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதோடு கொழுப்பு குறைவான உணவுகளையும் பானங்களையும் சாப்பிடலாம் . இதில் உப்பும் , சர்க்கரையும் கவனிக்க வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பு . உடற்பயிற்சி பொதுவாக முக்கியத்துவமானது . இதயத்தை வலுவாக்கும் என்று சொல்லும்படியான பயிற்சிகள் ஏதும் இல்லை . எனவே இதயத்தின் ஆர்டரியில் உள்ள கொலாட்டரலில் ரத்தவோட்டத்தை அதிக