இடுகைகள்

விலைமாது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தி சினிமாக்களில் விலைமாதுக்களின் நிலை!

படம்
  பாலியல் தொழிலாளிகளையும் மதிக்கவேண்டும். அவர்கள் செய்வதும் தொழில்தான். விலைமாதுக்களையும் கௌரவமாக நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கௌரவம் நிஜமாக கிடைக்குமோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் திரைப்படங்களில் விலைமாதுக்களை காட்டிய சினிமாக்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். இது இந்தி சினிமாக்கள் மட்டுமே.  பேகம் ஜான்  பீரியட் படம்தான். முகேஷ் பட் தயாரிக்க 2017இல் வெளியான படம். சுதந்திரத்திற்கு பிறகான விலைமாதுக்களின் நிலையைப் பேசிய படம் இது. வித்யாபாலன் தான் விலைமாதுக்களின் தலைவி. வங்காளப் படமான ராஜ்கஹினி என்ற படத்தின் இந்தி ரீமேக் இது.  மண்டி  1983ஆம் ஆண்டு ஷியாம் பெனகல் உருவாக்கிய படம்தான் மண்டி. படத்தில் ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா படேல், நஸ்ரூதின் ஷா ஆகியோர் நடித்திருந்தனர். இதன் மூலம் உருது சிறுகதை. ஆனந்தி என்ற சிறுகதையை எழுதியவர் குலாம் அப்பாஸ். விபச்சாரத்தை நடத்துபவராக தலைவியா ஷபனா ஆஸ்மி நடித்திருந்தார். இவரது கட்டுப்பாட்டில் உள்ளவருக்கு உருவாகும்  இன்னொரு உறவால் ஏற்படும் பாதிப்புகள்தான் கதை. காமம், உடல்ரீதியான மகிழ்ச்சி ஆகியவற்றைப் பற்றிய பேசிய வகையில் முக்கியமான படம். 1984ஆம் ஆண்டு மண்டி ப

காமாத்திபுராவில் பெண்கள் தபால்நிலையம்! - சாதித்த ஸ்வாதி பாண்டே

படம்
  காமாத்திபுரா பெண்கள் அஞ்சல் நிலையம், மும்பை இன்று போஸ்ட் ஆபீஸ் ஊழியர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? கால வெள்ளத்தில் தடுமாறிக்கொண்டிருக்கிற ஆட்கள் போலத்தானே? உணவு, மளிகை எல்லாம் இருபது நிமிஷத்திலிருந்து பத்து நிமிஷத்திற்கு மாறிக்கொண்டிருக்கிற நிலையில் காக்கி டிரஸ் போட்டுக்கொண்டு சைக்கிளில் ஊரை சுற்றி வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஒருவகையில் இவர்கள் தான் நிதானமாக வாழுங்கள் என குறியீடாக தங்கள் உடை, வாழ்க்கை மூலம் உணர்த்துகிறார்களோ என்னமோ? மும்பையில் பிரபலமான ஏரியா காமத்திபுரா. இங்கு பாலியல் தொழில்  நடைபெறுகிறது என்பதை சொல்லும் கடைசி ஆள் நாமாகத்தான் இருக்க முடியும். அகில உலக பிரபலமான ஆதி தொழில் இடம் இதுதான். இங்கு, பிரிவினை காலத்தில் வங்கதேசத்திலிருந்து வந்த அகதிகளின் குடும்பங்கள் பிழைப்பிற்கு என்ன செய்வதென தெரியாமல் விபச்சாரத்தில் இறங்கினர். இப்படித்தான் இங்கு இன்றுவரை விபச்சாரத்தொழில் நடைபெற்று வருகிறது. தொடக்கம் வங்கதேச அகதிகள் என்றால் உள்நாட்டிலும் பெண்களை கடத்தி இந்தியர்களும் தங்கள் பங்கிற்கு தொழிலை வளர்ச்சி பெற செய்ய உதவியுள்ளனர். வரலாற்றில் இதெல்லாம் முக்கியம்தானே?

வேட்டையாடுவது எப்படி? சைக்கோ டைரி

படம்
  இறப்பதே விதி! ஒருவரை ரத்தம் வெள்ளமாக பீய்ச்சியடிக்கும்படி வேட்டையாடிவிட்டு அதனை நியாயப்படுத்த முடியுமா? சீரியல் கொலைகார ர்கள்  அதனை செய்வார்கள். நான் விலைமாதுக்களை கொன்றேன். அவர்கள் தெருக்களில் குப்பைகளாக கிடந்தார்கள். என்னால் முடிந்தளவுக்கு அவர்களை சுத்தப்படுத்தினேன் என்று சீரியல் கொலைகார ர் பீட்டர் சட்கிளிப் கூறினார்.  பெண்களை கடுமையாக வெறுப்பவர்கள் அவர்களை வெளிப்படையாக போலீசாரின் விசாரணையில் தேவடியாக்கள் என்று திட்டுவது உண்மை. இதற்கு மதரீதியான ஒட்டுதல் முக்கியமான காரணமாக இருக்கலாம்.  விலைமாதுக்களை கொல்லும் எண்ணம், அவர்களை எப்படி விதவிதமாக கொன்றார்கள் என்பதைப் பற்றியும் சீரியல் கொலைகாரர்கள் மகிழ்ச்சியே தெரிவித்துள்ளனர்.  சிங்கத்தின் வேட்டை சீரியல் கொலைகார ர்கள் பெரும்பாலும் சுகவாசிகள். அவர்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்கேதான் பெரும்பாலான குற்றத்தை செய்வார்கள். அயனாவரத்தில் உள்ளவர், கே.கே. நகர் சென்று குற்றத்தை செய்துவிட்டு வரமாட்டார். அது அவரின் இயல்பான சூழலை கெடுத்துவிடும். கே.கே. நகரிலுள்ளவர்களும் இவன் நம்ம ஏரியாவைச் சேர்ந்தவன் கிடையாதே என சந்தேகம் வந்துவிடும். மயிலாப்பூரில் 12 எக்ஸ

எல்லாம் சாத்தான் செயல்! - சாத்தான் காதில் சொன்னதால் கொலை செய்தேன்!

படம்
          devian art       எல்லாம் சாத்தான் செயல் கொலைகளை நிதானமாக செய்துவிட்டு வம்பு , வழக்குகள் என்று வரும்போது எனது காதில் சாத்தானின் குரல் கேட்டது . அதனால்தான் குற்றங்களை செய்தேன் என புதுமையாக வழக்கு வழக்கு விசாரணையில் குற்றவாளிகள் பேசுவது மத்திய காலத்தில் தொடங்கியது . இதனை முதலில் தொடங்கியவர் டேவிட் பெர்க்கோவிட்ஸ்தான் . எனக்குள் நான் பிறந்த காலம்தொட்டே சாத்தான் உள்ளது என்று வாக்குமூலம் கொடுத்தார் . அடுத்து ஹெர்பர்ட் என்பவர் , நிலநடுக்கம் ஏற்படுத்துபவர்கள் என்று அச்சப்பட்டு எட்டுபேரை அடுத்தடுத்து கொன்றார் . அவர்களுக்குள் சாத்தான் நுழைந்துவிட்டான் எனவே , அவர்கள் செய்யவிரும்பாத விஷயங்களை கூட செய்தார்கள் என்று கூறினார் . அமெரிக்காவில் இந்த விவகாரம் 1950 களில் தொடங்கியது . எல்லாம் சாத்தான் செயல் என்று சொல்லி வழக்கு உளவியல் பக்கம் திருப்பி பலரும் தப்பிக்க முயல்கின்றனர் . ஆனால் அது எல்லா நேரத்திலும் எடுபடாது . இப்படித்தான் எலிபாசி என்ற கொலைகாரர் , பதினைந்து சிறுவர்களை வேலை தருகிறேன் என்று கூட்டிச்சென்று கோடாரியால் வெட்டிச்சாய்த்தார் . காவல்துறையில் மாட்டியபிற