இடுகைகள்

பண்பாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஷாவோலின் கோவில் பண்பாட்டை இந்தியாவில் பரப்ப ஆர்வமாக உள்ளோம்!- ஷி யோங்ஷின், ஷாவோலின் கோவில்

படம்
                  ஷி யோங்ஷின் ஷாவோலின் கோவில் சீனா இந்தியாவில் உள்ள தற்காப்புக்கலையின் மற்றொரு பிரதிதான் சீனாவில் தற்போது கற்றுத்தரும் குங்க்பூ என நினைக்கிறீர்களா ? நான் இந்த கோட்பாட்டை நம்பவில்லை . ஷாவோலின் குங்க்பூ என்பது போதிதர்மாவை தனியாக உள்ளடக்கியது அல்ல . சீனாவில் தற்காப்புக்கலைக்கென தனி பாரம்பரியம் உள்ளது . இது இந்தியாவில் பயிலப்படும் தற்காப்புக்கலைகளிலிருந்து மாறுபட்டது . எங்கள் குங்க்பூ பல்வேறு ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி பெற்று மாறுபட்டு வருகிறது .    பல்வேறு நாட்டு தலைவர்களும் ஷாவோலின் கோவிலை பார்வையிட்டுள்ளனர் . இந்திய பிரதமர் மோடி இதனை பார்வையிடவேண்டும் என விரும்புகிறீரகளா ? நாங்கள் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி போதிதர்மா பற்றியும் , அங்குள்ள புத்த நடைமுறைகளை அறியவும் விரும்புகிறோம் . உங்கள் பிரதமர் ஆற்றல் வாய்ந்தவராக உள்ளார் . அவர் புத்தம் பற்றியு்ம் அறிவு கொண்டவராக உள்ளார் . அவர் எங்கள் கோவிலுக்கு வருகை தருவதோடு இந்தியாவிலும் எங்கள் வளர்ச்சிக்கு உதவுவார் என நினைக்கிறேன் .    கோவிலில் மாணவர்களுக்கு என்ன சொல்லித் தருகிறீர்கள் ?

தமிழர்கள் தம்மை கண்டறிய ஓர் நூல்! - கீழடி - வரலாற்று பொக்கிஷம்!

படம்
கீழடி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மதுரை மற்றும் சிவகங்கை அருகிலுள்ள எல்லைப்பகுதியான கீழடியில் கிடைத்துள்ள பொருட்கள் பற்றிய விரிவான நூல் இது. தொல்லியல் துறை கமிஷனரான உதயசந்திரன் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் ஊக்கத்துடன் ஆராய்ந்து, பல்வேறு தொன்மைப் பண்பாட்டு எச்சங்களைக் கண்டறிந்துள்ளனர். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ் பிராமி எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன என்பதை நூல் முழுக்க அடிக்கடி சொல்கிறார்கள். இதற்குப் பின்னணியில் அதை மறுப்போரின் குரல்கள் அழுத்தமாக இருக்கலாம். அன்றைக்கு வாழ்ந்த மக்களின் கட்டடங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அணிகலன்கள்,  பானைத் துண்டுகள் என பலவற்றையும் பிரமாதமாக புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். டிரோன் விமானங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று நண்பர் கூறினார். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்தான் தமிழர்கள் கல்வி அறிவு பெற்றார்கள் என்பதை தகர்ப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதை முக்கியமாக கொண்டால் வரலாற்று நூலை நாம் திருத்தி எழுத வேண்டும். அதை நோக்கி நகர்வதற்கு கீழடி ஆய்வு முக்கியமானது. மத்திய அரசின் தலையீட்டால் ஆய்வை மத்திய தொல்லியல்