இடுகைகள்

குதிரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தூங்கும் கோணமே ஆளுமையை தீர்மானிக்கிறதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  முதலைகள் நீரில் குதிரைபோல பாய்ந்து செல்லும்! ஒப்பீட்டுக்காக இப்படி உயர்த்தி சொல்லுகிறார்கள். உண்மையில், குதிரைகள் நிலத்தில் பாய்ந்தோடுவதைப்போல முதலை நீரில் வேகமாக செல்லுமா என கேட்காதீர்கள். அது சாத்தியமில்லை. முதலை மணிக்கு நீரில் 11 கி.மீ. வேகத்தில் பாய்ந்து இரையைப் பிடிக்கும்  என 2019இல் வெளியான நேச்சர் இதழ் கட்டுரை கூறுகிறது. முதலை நான்கு கால்களுடன்  நீரைக் கிழித்து வேகமாக செல்வதைப் பார்ப்பது நன்றாகவே இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் குதிரையை நினைக்க கூடாது அவ்வளவுதான்!  பிறந்த குழந்தையின் உடலில் முக்கால் பங்கு நீர்தான்! உண்மைதான். பிறந்த குழந்தையின் உடலில் 78 சதவீத நீர் இருக்கும் என அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தகவல் அளித்துள்ளது. வயது வந்தவர்களுக்கு உடலில் உள்ள நீரின் அளவு  55 முதல் 60 சதவீதம் இருக்கும்.  கண்ணின் கண்மணியை ஒருவர் கட்டுப்படுத்த முடியும்!  மிக  அரிதாக இப்படி நடக்கலாம். பொதுவாக உடலில் நடக்கும் நிறைய செயல்பாடுகள், நாம் கட்டுப்படுத்தாமலேயே நடக்கும். இருட்டில் இருந்துவிட்டு திடீரென ஒளியைப் பார்த்தால் அதனை எதிர்கொள்ள முடியாமல் கண்களை சுருக்குவோம். அதாவது இமைகளை கீழே

நின்றுகொண்டே தூங்கும் விலங்குகள், கோலா கரடிகளின் கைரேகை! - உண்மையா? உடான்ஸா?

படம்
  உண்மையா? உடான்ஸா? விலங்குகள் நின்றுகொண்டே ஆழ்நிலை தூக்கத்திற்கு செல்கின்றன! உண்மையல்ல. குதிரை, பசு,வரிக்குதிரை, யானை ஆகிய விலங்குகள் நின்றுகொண்டே தூங்குவது நிஜம். இப்படி தூங்குவது மெல்லிய தூக்கம்தான். முழங்காலை நேராக்கி நின்றுகொண்டே தூங்குவது, திடீரென எதிரிகளால் ஆபத்து ஏற்படும்போது அதை எதிர்கொள்ளத்தான். படுத்துள்ள நிலையில்தான் பசு, குதிரை ஆகிய விலங்குகள் ஆழமான உறக்கத்தைப் பெறுகின்றன.   கோலா கரடிகளின் கைரேகை மனிதர்களைப் போன்றது! உண்மை.  1996ஆம் ஆண்டு தடவியல் வல்லுநர் மாசிஜ் ஹென்னபெர்க், கோலா கரடியின் கைரேகைகள் மனிதர்களைப் போலவே உள்ளது என்று இண்டிபென்டன்ட் நாளிதழில் கூறினார். 12 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பாலூட்டி இனங்களும்(Mammals), உடலில் பைகொண்ட பாலூட்டி இனங்களும் (Marsupials) பிரிந்துவிட்டன. இப்படி பிரிந்துவிட்ட இனங்களில் காணப்படும் ஒத்த பரிணாம வளர்ச்சி அம்சங்களுக்கு, ஒன்றிணைந்த பரிணாம வளர்ச்சி  (Convergent Evolution)என்று பெயர்.   https://www.sciencefocus.com/nature/how-many-animals-can-sleep-standing-up/ https://wildlifeinformer.com/animals-that-sleep-standing-up/ http

அம்மாவின் வாழ்க்கையைக் காக்க தன்னை கறைப்படுத்திக்கொள்ளும் மகன்! - தி பவர் ஆப் டாக் - ஜேன் கேம்பியன்

படம்
  தி பவர் ஆஃப் டாக் தி பவர் ஆப் டாக் ஜேன் கேம்பியன்  1925இல் நடைபெறும் கதை. நியூசிலாந்தின் மான்டனா நகரில் கதை நிகழ்வுகள் நடக்கின்றன. பில், ஜார்ஜ் என்ற இரு சகோதரர்களின் கதை. இருவருக்கும் தொழிலே மாடுகளை மேய்ப்பதுதான். இதற்கென குதிரைக்காரர்கள் இருக்கிறார்கள். இப்படி செல்லும் வாழ்க்கையில் ஜார்ஜ், உணவகம் நடத்தும் பெண் ஒருவரைக் காதலித்து மணம் செய்கிறார். இது பில்லுக்கு பிடிப்பதில்லை. முன்னமே உணவகப்பெண், அவரின் மகன் ஆகியோரை கடுமையாக கேலி செய்தவன் பில்.  இப்படியிருக்கும் நிலையில் பில்லின் வீட்டுக்கே உணவகப் பெண் வர, இருவருக்கும் இடையிலான உறவுச்சிக்கல்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் படம்.  பெனடிக் கும்பர்பச், படம் நெடுக வெறுப்பை உமிழும் மனிதராகவே வருகிறார்.இவர்தான் பில். தனது சகோதரர், உணவகப்பெண்ணை மணம் செய்துகொள்ளப்போவதை அறிந்து குதிரையை ஆக்ரோஷமாக அடிப்பார். படம் நெடுக்க வெறுப்பும், கோபமுமாக காட்சிகளில் வரும் வெயில் பார்வையாளர்களின் மனதில் வரும்படி நடித்திருக்கிறார்.  கிர்ஸ்டன் டன்ஸ்ட் தான் உணவகப் பெண். இவர் குடிபோதைக்கு அடிமையாகி தவித்துக்கொண்டிருப்பார். இந்த நேரத்தில் பில் செய்யும் கேலிகளால்

பெருந்தொற்று கால எழுத்தாளர்கள்! - குதிரை சவாரி, முன்னோர்களின் கதை, கலாசாரம் சார்ந்த கேள்வி, குறைந்த கழிவுகள்

படம்
  எழுத்தாளர் சஹர் மன்சூர் தரிபா லிண்டெம் எழுத்தாளர், நேம் பிளேஸ் அனிமல் திங் - ஜூபான் புக்ஸ் தரிபா, மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது மும்பையில் சுங்கத்துறையில் கூடுதல் கமிஷனராக பணியாற்றுகிறார். தனது முன்னோர்களைப் பற்றிய கதை மனதில் சுனை நீராக பெருக எழுத தொடங்கியிருக்கிறார். இந்த வேலை தொடர்ச்சியாக நடைபெறவில்லை. ஆனாலும் கிடைத்த நேரத்தில் நூலை எழுதிக்கொண்டே வந்திருக்கிறார். அப்படித்தால் இவரது புதிய நூல் பிரசுரமாகியிருக்கிறது. 34 வயதாகும் தரிபா, எனக்கு நூல் பிரசுரமாவது பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. புதிய எழுத்தாளர்களுக்கு இப்போது பிரசுரங்கள் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்கிறார்.  தரிபா லிண்டெம் இப்போது நம்மிடம் பேசும்போது கூட நான் தனியாக அமர்ந்து நூலை எழுதுவேன். அது நூலாக வெளியாகும் என்பதை யோசிக்கவே முடியவில்லை என்கிறார்.  யஷாஸ்வினி சந்திரா எழுத்தாளர், எ டேல்  ஆப் தி ஹார்சஸ் கலை வரலாற்று ஆய்வாளர், குதிரை சவாரிக்காரர் என்றுதான் சந்திராவைச் சொல்ல முடியும். இவர் தனது குதிரை தொடர்பான ஆர்வத்தை முன்வைத்து வரலாற்று பின்னணியில் நாவலை எழுதி பான் மெக்மில்லனில் வெளியிட்டிருக்கிறார். பெருந்தொற்று