தூங்கும் கோணமே ஆளுமையை தீர்மானிக்கிறதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?
முதலைகள் நீரில் குதிரைபோல பாய்ந்து செல்லும்!
ஒப்பீட்டுக்காக இப்படி உயர்த்தி சொல்லுகிறார்கள். உண்மையில், குதிரைகள் நிலத்தில் பாய்ந்தோடுவதைப்போல முதலை நீரில் வேகமாக செல்லுமா என கேட்காதீர்கள். அது சாத்தியமில்லை. முதலை மணிக்கு நீரில் 11 கி.மீ. வேகத்தில் பாய்ந்து இரையைப் பிடிக்கும் என 2019இல் வெளியான நேச்சர் இதழ் கட்டுரை கூறுகிறது. முதலை நான்கு கால்களுடன் நீரைக் கிழித்து வேகமாக செல்வதைப் பார்ப்பது நன்றாகவே இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் குதிரையை நினைக்க கூடாது அவ்வளவுதான்!
பிறந்த குழந்தையின் உடலில் முக்கால் பங்கு நீர்தான்!
உண்மைதான். பிறந்த குழந்தையின் உடலில் 78 சதவீத நீர் இருக்கும் என அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தகவல் அளித்துள்ளது. வயது வந்தவர்களுக்கு உடலில் உள்ள நீரின் அளவு 55 முதல் 60 சதவீதம் இருக்கும்.
கண்ணின் கண்மணியை ஒருவர் கட்டுப்படுத்த முடியும்!
மிக அரிதாக இப்படி நடக்கலாம். பொதுவாக உடலில் நடக்கும் நிறைய செயல்பாடுகள், நாம் கட்டுப்படுத்தாமலேயே நடக்கும். இருட்டில் இருந்துவிட்டு திடீரென ஒளியைப் பார்த்தால் அதனை எதிர்கொள்ள முடியாமல் கண்களை சுருக்குவோம். அதாவது இமைகளை கீழே தாழ்த்தி கண்களுக்குள் வரும் ஒளியின் அளவைக் குறைத்துக் கொள்வோம். கண்மணியின் அளவை நாம் குறைத்துக்கொள்வதில்லை. 2021ஆம் ஆண்டு சைக்கோபிசியாலஜி இதழில் ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியானது. அதில், கட்டளைக்கு ஏற்ப பங்கேற்பாளர் தனது கண்மணியின் அளவை கூட்டி குறைத்து காட்டினார். உலகில் இன்றளவில் இப்படி செய்யும் திறன் பெற்றவர் அவர்தான்.
தூங்கும் கோணத்தை வைத்து ஒருவரின் ஆளுமை அமையும்!
இன்றைய தூக்க வல்லுநர்கள், ஒருவரின் தூங்கும் கோணத்தை வைத்து அவரின் ஆளுமை இப்படித்தான் என கணித்து கட்டுரைகளை எழுதுகிறார்கள். பேட்டி கொடுக்கிறார்கள். இதெல்லாம் கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும் என்ற மூட நம்பிக்கைதான். அறிவியல் ரீதியாக, தூங்குவதை வைத்து ஒருவரின் குணம், ஆளுமையை மதிப்பிட முடியாது.
துலிப் மலர், தங்கத்தை விட அதிக விலைமதிப்பானது!
உண்மை. ஆனால் இப்போதல்ல. ”1620ஆம் ஆண்டு துலிப் மலருக்கு ஏக கிராக்கி. அப்போது அம்மலர் 1,500 டாலர்களுக்கு(தற்போதைய மதிப்பில் 1லட்சத்து 12 ஆயிரத்து 028 ரூபாய்) விற்றது உண்மை” என ஆய்வாளர் மார்த்தா ஸ்மித் கூறினார். அன்று இந்த விலைக்கு சில பணக்காரர்கள் மட்டுமே துலிப் மலரை வாங்கினார்கள். அன்றைய பொருளாதாரத்திற்கு இந்த விலையில் மிகப்பெரிய வீட்டையே வாங்க முடியும்.
https://www.yahoo.com/lifestyle/50-weird-facts-everything-181406932.html
pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக