நிலநடுக்கத்தை முன்னரே அறிந்து இழப்பைத் தடுக்க உதவும் கருவிகள், முறைகள்!

 









நிலநடுக்கத்தை அறிய உதவும் பல்வேறு முறைகள்! 


பூமியின் கீழுள்ள அடித்தட்டு பகுதி (Crust), மேற்புற மூடகம் (Mantle) ஆகியவற்றுக்கு இடையில்  புவித்தட்டுகள் அமைந்துள்ளன. இவை ஒன்றன் மீது மற்றொன்று நகரும்போது  நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிலநடுக்கம் தொடங்கும் பூமியின் புள்ளி, ஃபோகஸ் அல்லது ஹைப்போசென்டர்  (Hypo center)என்று அழைக்கப்படுகிறது. 

நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருளை எளிதாக நீட்ட முடியும். இதில் கூடுதலாக அழுத்தம் சேரும்போது, குறிப்பிட்ட வரம்புவரை நீளும். அதையும் தாண்டி அழுத்தம் கொடுத்தால் அப்பொருள் உடைந்துவிடும். பூமியும் அப்படித்தான் இயங்குகிறது. பூமியின் கீழ்ப்பகுதியில்  வெப்பம், அழுத்தம் உருவாகிறது. இப்படி உருவாகும் ஆற்றலை பூமி, நெகிழ்வுத்தன்மை கொண்ட அலையாக மாற்றுகிறது. இதனை நிலநடுக்க அலைகள் (Seismic waves) என்று புவியியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். 

நிலநடுக்க அலைகளை, நிலநடுக்க அளவீட்டு நிலையங்கள் கண்டறிகின்றன. அலைகளின் ஆற்றலை அறிய, சீஸ்மோகிராப் கருவிகள் உதவுகின்றன. இந்தியாவில், புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் தேசிய நிலநடுக்க அளவீட்டு மையம் (National Center for Seismology (NCS)) செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, நிலநடுக்கம் பற்றிய தகவல்களை சேகரிக்க நாடெங்கும் 150 அளவீட்டு நிலையங்களை உருவாக்கியுள்ளது.  நிலத்தின் கீழே திறன்கொண்ட சென்சார்கள் மூலம்  5 முதல் 10 நிமிடங்களுக்குள் நிலநடுக்கம் பற்றிய தகவலை இந்திய புவியியலாளர்கள் அறியலாம். நிலநடுக்க பாதிப்பை பொறுத்து இந்தியா 4 மண்டலங்களாக (Zone 2 -5) பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 2ஆவது மண்டலம் குறைந்த நிலநடுக்க பாதிப்பும், 5ஆவது மண்டலம் அதிக நிலநடுக்க பாதிப்பும் கொண்டது.  

 இதனை மக்கள் அறிய பூகேம்ப் (BhooKamp) என்ற தேசிய நிலநடுக்க அளவீட்டு மையத்தின் ஆப்பைப் பயன்படுத்தலாம்.  உலக நாடுகளில் ஜப்பான் நாட்டில் அதிகளவிலான சென்சார்களை நிறுவியுள்ளனர். இதனால் அங்கு சுனாமி, நிலநடுக்கம் என நேரும் இயற்கை பேரிடர்களை முன்னரே அறிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடிகிறது.

measuring quakes

hindu july 3, 2022

https://seismo.gov.in/


கருத்துகள்