பெருநகர வெப்பநிலையை கார்களில் சென்சார் வைத்து கணிக்கலாம்!

 



















வெப்ப அலையை கார்களில் பயணம் செய்து கணித்தவர்! 


நாட்டின் பெருநகரங்களில் ஏற்படும் பல்வேறு அளவுகளிலான வெப்ப அலை வேறுபாட்டை கணக்கிட சூழல் ஆராய்ச்சியாளர்கள் முயன்றுவருகின்றனர். 1927ஆம் ஆண்டு, ஆராய்ச்சியாளர் வில்ஹெம் ஸ்மித் (Wilhelm schmidt), வெப்பம் பற்றிய சோதனையொன்றை செய்தார். இதன்படி தன் காரில் பாதர தெர்மாமீட்டரைப் பொறுத்திக்கொண்டு வியன்னா நாட்டிற்குள் மூன்று மணி நேரம் சுற்றினார். இதில், அவர் நகரங்களின் வெப்பநிலை பற்றிய தகவல்களைப் பெற்றார். இதன்மூலம், அதிக வெப்பம் கொண்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டன. 

பல்லாண்டுகளாக சூழல் ஆராய்ச்சியாளர்கள் வெப்ப அலை பற்றி செய்த ஆய்வு, புல்லட்டின் அமெரிக்கன் மெட்டரோலாஜிகல் சொசைட்டி இதழில் வெளியாகியுள்ளது. வில்ஹெமின் ஆய்வுமுறையை மேம்படுத்தி கார்களில் சென்சார் பொறுத்தி இணையத்தில் இணைத்தனர். இதன்மூலம், வெப்பம் பற்றிய தகவல்களை உடனுக்குடன் பதிவு செய்தனர்.  நகர மக்களே , இந்த ஆய்வில் பங்கேற்று தகவல்களை தரமுடியும் என்பது இதன் சிறப்பம்சம். நகரங்களில்  குறிப்பிட்ட இடங்கள் மட்டும் வெப்பத்தீவு போல காணப்படுவதை ஆராய்ந்தாலே, மக்களின் வாழ்வை அதற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். 

பிரான்சின்  துலூஸ் பல்கலைக்கழக வானிலை ஆராய்ச்சியாளர்  ஈவா மார்க்கியூஸ், துலூஸ் நகரில் வெப்பச் சோதனைகளை பதிவு செய்தார். இவரின் ஆய்வுக்குழு, காரில் சோதனை செய்யப்படுவதால் காற்று, வெப்பநிலை அளவுகளை மாற்றுகிறதா என்பதையும் மதிப்பிட்டனர். இம்முறையில்  2016 - 2018 வரையிலான காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு நகரங்களில் வெப்ப அலை சோதனைகளை ஆய்வாளர்கள் செய்தனர். மனிதர்களின் செயல்பாடு, காற்று ஆகிய அம்சங்களையும் கருத்தில் கொண்டு ஆய்வுத்தகவல்களை சேகரித்தனர்.  ”நாங்கள் தயாரித்துள்ள வெப்ப அலை வரைபடத்தைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் நகரங்களை சூழலுக்கேற்ப கட்டுமானம் செய்து  கட்டலாம்” என்றார் ஈவா மார்க்கியூஸ்.



heat map

scientifc american july 2022

https://www.scientificamerican.com/article/how-connected-cars-can-map-urban-heat-islands/

image -  allure

கருத்துகள்