கனடாவில் சூழல் விருது பெற்ற இரண்டு சூழலியலாளர்கள்!

 






ஏமி லின் ஹெய்ன்






விருது பெற்ற சூழலியலாளர்கள்!


மேரி அசெல்ஸ்டின்

ஸ்கொம்பெர்க், கனடா

35 ஆண்டுகளாக கிராம மக்களின் இனக்குழு சார்ந்து செயல்பட்டுவருகிறார். டஃப்ரின் மார்ஸ் அமைப்பைத் தோற்றுவித்த உறுப்பினர்கள் ஒருவர். இயற்கைச்சூழலைக் காப்பதற்கான பல்வேறு பிரசாரங்கள், செயல்பாடுகளை செய்து வருகிறார். இவருக்கு, ஸ்கோம்பெர்க் கிராமத்திலுள்ள பள்ளிக்குழந்தைகள் வைத்த செல்லப்பெயர், தவளை அத்தை. யார்க் பல்கலைக்கழகத்தில் புவியியல் படிப்பில் முதுகலைப்பட்டம் பெற்றவர் மேரி அசெல்ஸ்டின். நடப்பு ஆண்டில் மேரி  செய்த பல்வேறு சூழல் பணிகளை பாராட்டி,  கனடா காட்டுயிர் கூட்டமைப்பு (CWF) சூழல் பணிகளுக்காக ரோலண்ட் மிச்னர் கன்சர்வேஷன் விருது (Roland Michner Conservation Award) வழங்கியுள்ளது. 

”இயற்கை மீதான நேசம் பற்றிய சிந்தனைகளை நான் பிறருக்கு பகிர்ந்து வருகிறேன். இயற்கை  வழங்கிய  ஆச்சரியமான அனுபவங்களே அதைப் பாதுகாக்கும் ஊக்கத்தை பிறருக்கு தரத்தூண்டியது ”

ஏமி லின் ஹெய்ன்

கல்காரி, கனடா

தாவரங்களை ஓவியங்களாக வரையும் ஓவியக்கலைஞர். வரைவதற்கான இங்கையும் இயற்கையான பொருட்களிலிருந்து  தயாரித்து பயன்படுத்துகிறார். எ பின்ட் சைஸ்டு இம்பேக்ட் (A Pint sized impact) என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறார். எ ஃபாரெவர் ஹோம்  (A Forever home) என்ற குழந்தைகள் நூலின் ஓவியர்  ஏமி லின் ஹெய்ன். கலைவடிவங்கள் மூலமாக இயற்கை பாதுகாப்பு பணிகளை செய்ததற்காக ஏமி லின்னுக்கு ராபர்ட் பேட்மேன் விருது (Robert bateman award) வழங்கப்பட்டுள்ளது. 

”ஒருவர் தன் வீட்டின் பின்புறம் வளர்க்கும் தோட்டம் மூலமே, தேனீக்கள் எண்ணிக்கை  அதிகரிக்கும். இதைப்போல, சிறிய செயல்கள் மூலம் பெரிய மாற்றங்களை உருவாக்கமுடியும் என நம்புகிறேன். ”


https://maryasselstine.ca/about/

https://www.facebook.com/MaryAsselstine/photos/365768060623323

http://www.amylynnhein.com/project-past-drawings-sculptures.html

https://apintsizedimpact.com/about/

https://cwf-fcf.org/en/explore/awards/robert-bateman-award.html

http://www.dufferinmarsh.ca/


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்