காதலுக்காக சாராய வியாபாரியுடன் மோதும் காதலன்! - வீடு தேடா - நிகில் சித்தார்த், பூஜா போஸ்
வீடு தேடா
நிகில் சித்தார்த், பூஜா போஸ்
இயக்குநர் சின்னி கிருஷ்ணா
இசை சக்ரி
திருப்பதியில் தனது அக்கா, மாமாவுடன் வாழ்ந்து வருகிறான் கத்தி சீனு. சீனுவைப் பொறுத்தவரை காதல் கடிதம் கொடுப்பதே முதல் பணி. பெண் ஒகே என்றால் மஜாப்பா மஜா என வாழ்ந்து வருகிறான். இந்த நேரத்தில் அவனுக்கு லவ்குமார் என்ற மனிதர் கிடைக்கிறார். அவரை ஏமாற்றி உடை, உணவு என அத்தனையும் ரெடி செய்துகொண்டு திருமணம் ஒன்றுக்கு செல்கிறார்கள்.
அங்குதான் சீனு, மேக்னா என்ற வெள்ளை அழகியைப் பார்க்கிறான். பார்த்தவுடனே பென் ஹியூமன் தமிழ் பாப் பாடல் வரியைப் போல ஃப்யூச்சர் ஆத்துக்காரி என மனதில் விதை விழுந்துவிடுகிறது. அப்புறம் என்ன அந்த பெண்ணை வளைக்க தன்னால் முடிந்த அத்தனையும் செய்கிறார். இத்தனைக்கும் அந்த பெண் குடிமைத்தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கிறார். காதல் கூடாது என்பதே ஒரே கொள்கை. எப்படியாவது அவளை கரெக்ட் செய்துவிட முயல்கிறான் சீனு. அந்த பெண்ணும் அவனின் கடி ஜோக்குகளுக்கு மயங்கி சிரித்து தனது சோகங்களை மறந்துவிடும் நேரத்தில் அவளது தோழிகள் அவள் சந்தோஷத்தைப் பொறுக்காமல் நீ காதலிக்கிறே இது பாவம் கிறிஸ்துவ பாதிரிகள் போல ஜெபிக்கிறார்கள். இதனால் மனம் விசாரப்பட்டு சோகமாகிப்போகிறாள் மேகனா. சீனுவைத் தவிர்க்கிறாள். ஆனாலும் விதி சும்மா விடுமா?
ஹைதராபாத்தில் லிக்கர் சங்கர் என்ற கள்ளச்சாராய வியாபாரி இருக்கிறான். அவனுக்கு ஒரே பயம். சிறையில் உள்ள குற்றவாளி ஒருவன் வெளியே வந்து தன்னைக் கொன்று விடுவானோ என்றுதான். அவர் யாருமில்லை மேகனாவின் டான் அப்பா தான். அவரும் முன்னர் சாராய வியாபாரம் செய்தவர்தான். ஆனால் அதனால் பாதிக்கப்பட்டு மக்கள் இறப்பதைப் பார்ப்பவர், அதை கைவிட முடிவு செய்கிறார். ஆனால் அவருடன் இருந்து தொழில் பழகும் லிக்கர் சங்கர், தனது முதலாளிக்கு தெரியாமல் தொழிலை நடத்தி பெரியளவு பணம் சேர்க்கிறார். கூடவே குடிநோயால் மரணங்களும் அதிகரிக்கிறது. இதனால் கோபம் கொள்ளும் சுமன், அ்வர்தான் மேகனாவின் அப்பா. அடப்பாவி என லிக்கர் சங்கரை நெஞ்சில் எட்டி உதைக்கும்போது காவல்துறை வந்து சுமனை கைது செய்கிறது. எதற்காக மாமூல் கொடுப்பதில்லை என்பதற்காகவே என நினைக்கிறீர்கள். லிக்கர் சங்கர் தொழிலை சுமனின் பேரில் நடத்தி மரணங்களுக்கு அவர்தான் காரணம் என்று சொன்னதால்... இதனால் சுமனின் மறைத்து வைக்கப்பட்ட மகளை தான் பணயக் கைதியாக பிடித்து வைத்துக்கொண்டால் மட்டுமே உயிர் தப்ப முடியும் என லிக்கர் சங்கர் நினைக்கிறார். அதை செய்யும்போது குறுக்கே வருபவன்தான் கத்தி சீனு.
அப்புறம் என்ன? லிக்கர் சங்கரை எதிர்த்து சண்டை போட்டு, சுமனின் கொலை வெறியை மகள் போக்கினாளா, கத்தி சீனு, மேக்னா ஒன்றாக குத்துப்பாட்டு போட்டு ஆடி வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே கதையின் கிளைமேக்ஸ்....
இந்த படத்தில் கூட லவ் குமாராக அலி நடித்து காமெடியில் பிரமாதப்படுத்தியுள்ளார். படத்தில் காதல் பற்றி கிருஷ்ண பகவான் பேசும் வசனத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால் எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது. எதைப்பற்றியும் யோசிக்காமல் பார்க்கும் காமெடி படம். படத்தில் பாதிக்கு மேல் எம்எஸ் நாராயணா வந்து காமெடி செய்கிறார். அப்பாய் ராஜூ என்ற பாத்திரத்தின் காமெடியும் மோசமில்லை.
வாய்விட்டு சிரிங்க...
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக