ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை விளையாட்டு மூலம் ஊக்குவிக்கும் உடற்பயிற்சி ஆசிரியர் - ஷானாஸ் பர்வீன்

 

 

This PT teacher is a mascot for Khelo Ladakh - Times of India

 

 

விளையாட்டு மூலம் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தும் விளையாட்டு ஆசிரியர்!


காவல்துறையில் பணியாற்றிய அப்பா மறைந்துவிட, குடும்பம் பொருளாதாரத்திற்கு தடுமாறியது. அந்த நிலையிலும் ஷானாஸ் பர்வீனின் விளையாட்டு ஆர்வத்திற்கு அவரின் அம்மா தடை விதிக்கவில்லை. இதனால் தான் இன்று ஷானாஸ் கால்பந்து, ரக்பி, ஐஸ் ஸ்டாக், பென்கேக் சிலாட் என பல்வேறு விளையாட்டு அமைப்புகளை நிறுவி அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

காஷ்மீர் இளைஞர், பெண்களை விளையாட்டு வழியாக ஊக்கப்படுத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர தனி மனிதராக பெரும்பாடு பட்டிருக்கிறார் ஷானாஸ். அரசு ஆதரவு இல்லாத நிலையில் அப்பாவின் ஓய்வூதியம் மட்டுமே அம்மா, தாய் இருவரின் வயிறு காயாமல் காப்பாற்றியது. எந்த நிலையிலும் தனது விளையாட்டு கனவை கருகவிட்டதில்லை. அதற்கு, அவரைப் புரிந்துகொண்ட தாய் கிடைத்தது முக்கியமானது. இதனால் விளையாட்டு பயிற்சிக்கு போய்விட்டு வீட்டுக்கு தாமதமாக வரும்போது, வீட்டுக்கு தாமதமாக வருகிறாள் பாருங்கள், பையன்களுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறாள், விளையாடி காயம்பட்டால் இவளுக்கு எப்படி திருமணமாகும் என பல்வேறு சாடைகள் பேசப்பட்ட சூழலில் சிறு நகரில் கனவை கைவிடாமல் இருப்பது கடினமானது என்பதை யாரும் ஒப்புக்கொள்வார்கள்.

இப்படிப்பட்ட எதிர்மறையான சூழலில்தான், ரக்பி போட்டிக்காக ரூ.5 ஆயிரம் ரூபாயை செலவழித்து தலைநகர் டெல்லியில் நடந்த போட்டியில் பங்கேற்றார். பிறகு, ஜம்மு காஷ்மீர் காவல்துறை நடத்திய ஓட்டப்பந்தயம் ஒன்றில் பங்கேற்று ஐந்தாவது இடம் பிடித்தார். அதில் கிடைத்த பரிசுத்தொகை ரூ.6 ஆயிரம் ரூபாய் அவருக்கு பெரும் நம்பிக்கை அளித்தது. பிறகு, 2009ஆம் ஆண்டு பங்கேற்ற பெண்கள் கால்பந்து, 2011ஆம் ஆண்டு ரக்பி போட்டியில் அணி பெற்றதில் ஷானாஸின் பங்கு முக்கியமானது.இதுபற்றிய செய்தி காஷ்மீர் பத்திரிகைகளில் வெளியாக அவரை அதுவரை எதிர்மறையாக பேசியவர்கள், வாயை மூடிக்கொண்டனர். இதனால் ஷானாஸிற்கு தேவையற்ற குறுக்கீடுகள் குறைந்தன. அவரின் கனவைப் புரிந்துகொண்ட அம்மா, அத்தனை எதிர்மறை சூழலிலும் பாறையாக இருந்தது நாம் கற்கவேண்டிய விஷயம்.

ஐஸ் ஸ்டாக் விளையாட்டு, பனிக்கட்டி சறுக்காட்டத்தை ஒத்தது. இதில் இரண்டு அணிகளிலும் தலா நான்கு பேர் இருப்பார்கள். வட்டவடிவமாக பனிக்கட்டி அல்லது கற்களை குறிப்பிட்ட தொலைவுக்கு நகர்த்தி சென்று இலக்கிற்குள் தள்ளவேண்டும். எதிரணியினர் இதை தடுப்பார்கள்.

பென்கேக் சிலாட் விளையாட்டு, தற்காப்புக்கலையாகும். கால்கள், கை, தோள்பட்டை ஆகியவற்றை பயன்படுத்தி எதிரியின் தாக்குதலை தடுக்க வேண்டும். இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் உருவான தற்காப்புக்கலை. இதற்கு உலகமெங்கும் பல்வேறு வடிவங்கள் உண்டு.

டைம்ஸ் ஆப் இந்தியா
சபி ஹூசைன் 

Image -TOI

கருத்துகள்