உலகின் பெரிய வங்கிகள் - 2022

 











சீனாவின் தொழில்துறை மற்றும் வணிக வங்கி 

நாடு - சீனா

ரேங்க் -2

சொத்து - 5.5 ட்ரில்லியன் டாலர்கள்


ஐசிபிசி - உலகின் பெரிய வங்கிகளில் முக்கியமானது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் தனது முதல் இடத்தை இழந்துள்ளது. வங்கியை பல்வேறு முதலீடுகள் மூலம் கட்டுப்படுத்துவது சீன அரசுதான்.  சென்ட்ரல் ஹியூஜின் இன்வெஸ்ட்மென்ட் லிட். என்ற நிறுவனம், ஐசிபிசி வங்கியில் முதலீடு செய்துள்ளது. சீன நிதி அமைச்சகம், வங்கியில் 31 சதவீதம் பங்குகளைக் கொண்டுள்ளது. ஹியூஜின் நிறுவனம், 35 சதவீதம் பங்குகளைக் கொண்டுள்ளது. 


ஜேபி மோர்கன் சேஸ் 

நாடு - அமெரிக்கா

ரேங்க் -4 

சொத்து மதிப்பு - 4 ட்ரில்லியன் 

ரஷ்யா உக்ரைனால் பாதிக்கப்பட்ட வங்கி. 42 சதவீதம் வங்கி வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜேபி மோர்கன், ஒட்டுமொத்தமாக இரண்டு இடங்கள் பின்தங்கியுள்ளது. 8.3 பில்லியன் டாலர்கள் வரை வருமானத்தை அடைந்துள்ளது. 902 மில்லியன் டாலர்கள் வரை கடனை கொடுத்துள்ள வங்கி தான். இனிமேல் அமெரிக்காவில் பெரிய  பொதுத்துறை வங்கி என்ற பெயர் இதற்கு இருக்காது. 

சீனா கன்ஸ்ட்ரக்ஷன் வங்கி

நாடு - சீனா

ரேங்க் - 5

சொத்து மதிப்பு - 4.7 ட்ரில்லியன் டாலர்கள்


இதுவும் சீன அரசின் நிறுவனம்தான். ஹியூஜின் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் 57 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. நடப்பு ஆண்டின் காலாண்டில்  13 பில்லியன் டாலர்கள் வருமானம் கிடைத்திருக்கிறது. ஆண்டு வளர்ச்சி என்றால் 5.8 சதவீதம் என கொள்ளலாம். 

வீட்டுக்கு கடன் வழங்கும் பிரிவு 24.1 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது. கட்டுமானத்துறை வங்கி தான் சீனாவின் உற்பத்தி துறைகளுக்கு பெருமளவில் கடன்களை வழங்குகிறது. 

அக்ரிகல்சுரல் பேங்க் ஆஃப் சீனா

நாடு - சீனா

ரேங்க் - 8

சொத்து மதிப்பு 4.6 ட்ரில்லியன் டாலர்கள்

இதுவும் சீன அரசுக்கு கட்டுப்பட்ட நிறுவனம்தான். ஹியூஜின், மத்திய நிதி அமைச்சகம் என இரண்டும் பெருமளவு பங்குகளை வைத்திருக்கின்றன. சீனாவில் மூன்றாவது பெரிய வங்கி. வேளாண்மை சார்ந்த கடன்களை வழங்கி வருகிறது.  வருமானம் 6.7 சதவீதமாக உயர்ந்து 10.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. 


பேங்க் ஆஃப் அமெரிக்கா

நாடு - அமெரிக்கா

ரேங்க் - 9 

சொத்து மதிப்பு - 3.2 ட்ரில்லியன் டாலர்கள் 


அமெரிக்காவில் இரண்டாவது பெரிய வங்கி. உலகளவில் 9வது பெரிய வங்கி. சிறுவணிகர்களுக்கு கடன்களை வழங்குகிறது. முதலீட்டு வங்கி பிரிவில் 35 சதவீதம் வருமானம் குறைந்துள்ளது. வாடிக்கையாளர் பிரிவில் 21 சதவீதம் வருமானம் குறைந்துள்ளது. இவற்றை விட வங்கியின் பங்கு விலையும் கூட வெகுவாக குறைந்துவிட்டது. 













கருத்துகள்