இடுகைகள்

டிரெண்ட்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2024 trends இதுதானுங்கோவ்....

படம்
                நாகரிகமோ, நாதாரித்தனமோ உலகம் அதையெல்லாம் கவனிப்பதில்லை. உங்கள் சட்டை பிராண்ட் ஏரோ, தலைக்கு எழுநூறு ரூபாய் கொண்ட இங்கிலாந்து தேங்காய் எண்ணெய் தேய்க்கிறீர்கள், கால்சட்டை இரண்டாயிரம் ரூபாயா, கையில் கட்டியுள்ள வாட்ச் ரோலக்ஸா, ஒமேகாவா, குடிப்பது பிஸ்லரியா, கண்ணில் ரேபான் குளிர் கண்ணாடி, ஓட்டுவது டெஸ்லா காரா என்றுதான் உற்று கவனிக்கிறது. இவற்றையெல்லாம் வைத்துதான் மனிதனை உலகம் அளவீடு செய்கிறது. இதுபோல சமகாலத்தில் உள்ள விஷயங்களைத்தான் பார்க்கப் போகிறோம்.... கடித்த ஆப்பிளின் நிர்வாணமே செக்சி தலைப்பைப் பார்த்து உடனே நீங்கள் நினைப்பதை ஜாவ் குரு வலைத்தளத்தில் தேடி கண்டடையலாம். அதைக் கூறவரவில்லை. ஐபோனை வைத்திருப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? உலகையே ஜெயித்தவர்களைப் போல நடந்துகொள்வார்கள். பின்னே ஒரு லட்சத்திற்கும் பக்கத்தில் காசு கொடுத்து ஆப்பிள் மார்க் போனை வாங்கியுள்ளார்களே? அதை பிறருக்கு காட்டவே அதற்கு கவர் போடாமல் சுற்றிக்கொண்டிருப்பார்கள். அதைத்தான் அந்த ஆப்பிள் கம்பெனியும் விரும்புகிறது. அதைத் தாண்டி 240 மாட்டு நல அரசு செய்யும் உளவு வேலைகளை...

2019 டிரெண்ட்ஸ் தொடருமா? பகுதி 2

படம்
நடப்பு ஆண்டில் தொடரும் விஷயங்கள் அடுத்த ஆண்டும் தொடருமா என்று உறுதி கூற முடியாது. 2019 ஆம் ஆண்டு மக்களை வசீகரித்து கவனித்த வைத்த அவர்கள் பின்பற்றிய பேசிய, ரசித்த விஷயங்கள் இவை. புது மெட்ரோ ரயில் மோகம் டிக்கெட் விற்கிறதோ இல்லையோ, மக்கள் ஏறுகிறார்களோ இல்லையோ, மேம்பாலங்களில் மெட்ரோ தன் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்தன. சாதாரண ஐந்து ரூபாய் டிரெயின்களை தடாலென நிறுத்தியதால், மெட்ரோ ரயிலில் மக்கள் பயணிக்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர். எனவே மெட்ரோ ரயில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சியில் வென்றுவிட்டது.  முதலில் இலவசமாகவும் பின்னர் காசு கொடுத்தும் செல்ல தமிழர்கள் பழகினர். சென்னை, கொச்சி, லக்னோ, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ கொடி பறந்தது. மனநலம் முக்கியம் இந்த ஆண்டு மனநலம் பற்றி பேசத்தொடங்கி திரியை பற்ற வைத்தது திருமதி தீபிகா படுகோன்தான். பின் அதனை மற்றவர்களும் பின்பற்றி, பிரஷர் ஜாஸ்திங்க என கமெண்டுகளை அள்ளித் தெளித்து அனுதாப வாக்குகளை அள்ளினர். பிட்காயின் பரிதாபம் ஆர்பிஐ, பிட்காயின் யூஸ் பண்றதைப் பார்த்தேன். பத்து ஆண்டுகள் சிறை தண்டனை என மிரட்டினாலும் அரசின்...