இடுகைகள்

கார்ப்பரேட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தடைகளை சமாளித்து வென்ற கார்ப்பரேட் நிறுவன பெண்கள்! - நந்தினி பிரமள், நுவ்ருதி ராய், ரிச்சா அரோரா, சமீனா ஹமீத்

படம்
                    நந்தினி பிரமள் எக்சிகியூட்டிவ் டைரக்டர் , பிரமள் நிறுவனம் கடந்த ஆண்டு மட்டு்ம் ஆறு பிராண்டுகள் மூலம் 418 கோடி ரூபாய் வருமானத்தை பிரமள் நிறுவனம் சாதித்துள்ளது . இதற்கு ந ந்தினியின் ஐடியாக்களே முக்கியமான காரணம் . இந்த நிறுவனத்தில் தற்போது பத்தாயிரம் பேர் பணியாற்றுகிறார்கள் . மருந்துகள் தயாரிப்பு விற்பனையில் பிரமள் நிறுவனம் சாதித்து வருகிறது . சாரிடான் , ஐபில் ஆகிய மருந்து பிராண்டுகள் இந்த நிறுவனத்துடையதுதான் . அபோட் , கார்லைட் எனும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக நந்தினி முக்கியமான காரணமாக இருந்திருக்கிறார் . பிரமள் நிறுவனததின் மனிதவளத்துறை மற்றும் ஐடி செயல்பாடுகளை நந்தினி கவனிக்கிறார் . இவரை அஜய் பிரமள் நிறுவனத்திற்கு அழைத்து வந்தார் . இவர் வந்தபிறகு நிறுவனம் பல்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்படுகிறது . தற்போது குழந்தைகளுக்கான பிராண்டு ஒன்றைத் தொடங்கியுள்ளனர் . அடுத்து மாஸ்க் , சானிடைசர் ஆகியவற்றையும் தயாரித்து விற்கும் முடிவை எடுத்துள்ளனர் . நுவ்ருதி ராய் இந்தியத் தலைவர் , இன்டெல் நுவருதியை பல்வேறு சவால்கள

விவசாய மசோதாக்களின் நன்மை என்ன தீமை என்ன? சுருக்கமான பார்வை

படம்
      cc     புதிய விவசாய மசோதா மக்களவையில் தாக்கலாகியிருக்கிறது. அதனை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்ஏடி கட்சியைச் சேர்ந்த நாடாளும்ன்ற உறுப்பினர் ஹர்சிம்ரத் கவுர்,  தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இவர் உணவு பதப்படுத்தல் துறையை நிர்வாகித்து வந்தார். சுசாந்த் சிங் விவகாரத்தில் பலரும் கவனிக்காத விஷயம், பஞ்சாபில் அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம்தான். இனி விவசாயிகள் தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். அரசு அங்கீகரித்த மண்டி மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலும் கூட விற்கலாம். இனி அதற்கு எந்த தடையுமில்லை. விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்கவும், போக்குவரத்துவசதிகளும் கிடைக்க வழிவகை உள்ளது. மின்னணு வர்த்தகத்தில் விவசாய உற்பத்திபொருட்களும் இனி இடம்பெறவிருக்கின்றன. இனி அனைத்து விவசாய நிலங்களையும் பெரிய நிறுவனங்கள் குத்தகைக்கு பேசி முடிக்கலாம். முன்னரே தீர்மானித்த விலைக்கு விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை வழங்கவேண்டிவரும். முக்கியமான அம்சம், பெரு நிறுவனங்கள் இனி விவசாயத்தை வணிகமாக மாற்றுவார்கள். இதன்

சிறந்த வணிகம் எது?

படம்
pixabay உலகம் முழுக்க நடைபெறும் வியாபாரம் பலதரப்பட்டது. முன்னர் பத்திரிகையாளர் சாய்நாத் தனது நூலில் எழுதியுள்ளது போல இடைத்தரகர்கள் விவசாயிகளின் வாழ்க்கையை சூறையாடினர். இதனால் பல விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருளுக்கான விலை கிடைக்காமல் தடுமாறினர். இதனைக் கண்ட அடுத்த தலைமுறையினர் விவசாயத்தை விட்டு வெளியேறினர். இதனை இன்று இணைய நிறுவனங்கள் மாற்றியுள்ளன. வணிக நடைமுறையில் ஃபேர் ட்ரேட் நடைமுறை முக்கியமானது. இதில் குறிப்பிட்ட விவசாய நிறுவனங்கள் விவசாயிகளுக்கு பொருட்களை அளித்து விவசாயத்திற்கு உதவுகின்றன. இதில் கிடைக்கும் லாபத்தை விவசாயியும், நிறுவனமும் பகிர்ந்துகொள்கின்றன. இதில் இடைத்தரகர்களின் பங்கு குறைவு. ஆனால் ஃபேர் ட்ரேட் எனும் வியாபாரத்திற்கான சான்றிதழ் பெற்றால் மட்டுமே இவ்வணிகத்தை செய்ய முடியும். இதற்கு மாற்று இல்லாமல் இல்லை. சந்தையில் அரசுக்கு கட்டணம் செலுத்திவிட்டு நேரடியாக பொருட்களை விற்கிறார்கள் அல்லவா? அதுதான். ஃபேர் ட்ரேட் நடைமுறை உலகளவில் வெற்றி பெறுவதற்கான காரணம், இதன் வலைப்பின்னல் அமைப்புதான். 1. விவசாயிகளுக்கு தேவையான விளைபொருட்கள், உரங்கள் என உதவிகள் அனைத்

சமூக பொறுப்பு சட்டம் செயல்படுகிறதா? - இந்திய அரசு கண்காணிக்கிறதா?

படம்
இந்திய அரசின் சமூகநலப்பொறுப்பு (CSR Act) சட்டம் (2013 ) அமலானபிறகு, இதுதொடர்பாக செயற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியா போன்ற பல்வேறு நிலப்பரப்பு மற்றும் கலாசாரம் சார்ந்த நாட்டில் அரசின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்று சேர்வது மிகச்சிரமம். இதனைச் சாத்தியப்படுத்த பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உருவாயின.  இவை அரசின் திட்டங்களை பல்வேறு அடிப்படை வசதிகளற்ற தொலைதூரக் கிராமங்களிலும் கொண்டு சென்று சேர்க்கும் பணியைச் செய்கின்றன. உலக நாடுகளில் தொழில்நிறுவனங்கள் தம் வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சமூகநலத் திட்டங்களுக்கு செலவிடவேண்டும் என்பது சட்டமாகவே உள்ளது. இந்திய அரசு சமூகப்பொறுப்பு திட்டத்தை, 2013 ஆம் ஆண்டு மேம்படுத்தி உருவாக்கியது. இதன் விளைவாக சூழல், கல்வி, வாழ்க்கைத்தரம், சம்பளப் பற்றாக்குறை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் உழைக்கும் தன்னார்வலர்கள் அதிக எண்ணிக்கையில் உருவாகியுள்ளனர். இம்முறையில் இந்தியாவில் கேட்ஸ் பவுண்டேஷன், டாடா டிரஸ்ட், அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றனர். 1980 -90 களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெருமளவில்