இடுகைகள்

புழு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நன்னாரி ஸ்விஃப்ட்டே

படம்
  என்ன ?எங்கு? எப்படி? நன்னாரியா ஸ்விஃப்டே  நன்னாரியா என்ற பேரினத்தைச் சேர்ந்த புதிய உயிரினம் கண்டறியப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு இந்த உயிரினத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யும்போது நன்னாரியா இன உயிரினங்களின் எண்ணிகை 23 ஆக இருந்தது. தற்போது இதன் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.   எங்கு? மரவட்டையான நன்னாரியா ஸ்விஃப்டே அமெரிக்காவின் தென்கிழக்கு டென்னிசியில் உள்ள அப்பளாச்சியன் மலைத்தொடரில் கண்டறியப்பட்டுள்ளது.  பெயர்க்காரணம் மரவட்டையான நன்னாரியா ஸ்விஃப்டேவை ஆய்வாளர் டெரக் ஹென்னன் கண்டறிந்தார். இவர் அமெரிக்க பாடகரான டெய்லர் ஸ்விஃப்டின் தீவிர ரசிகர். எனவே தான் கண்டறிந்த மரவட்டைக்கு ஸ்விஃப்டே என பெயர் சூட்டியிருக்கிறார். இதற்கு முன்னர் தனது மனைவியின் பெயரை மரவட்டை ஒன்றுக்கு சூட்டியுள்ளார். மனைவியுடன் நடைபயிற்சிக்கு செல்லும்போது, காணும் மரவட்டைகளை பார்க்க திடீரென நின்றுவிடுவது டெரக்கின் பழக்கம். அதை அவரின் மனைவி சகித்துக்கொண்டதால் மனைவியின் பெயரை மரவட்டைக்கு சூட்டி கௌரவப்படுத்தியிருக்கிறார்.  BBC wildlife june 2022 New specis discovery https://news.abplive.com/science/meet-nannaria-swiftae-a-milliped

குகைளை ஒளிர வைக்கும் புழுக்கள்!

படம்
புழுக்களால் ஒளிரும் குகை!  நியூசிலாந்தின் வடக்கு தீவுப்பகுதியில் வெயிட்டோமோ (Waitomo) என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள சுண்ணாம்புக்கல் குகைகளைப் பார்க்கும்போது, சாதாரணமாகவே தோன்றும். ஆனால் இவைதான், உலகிலுள்ள சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்கின்றன.  வெயிட்டோமோ குகைகளின் சிறப்பு அம்சம், அதன் சுவர்களும் மேற்புறங்களும்தான். இவை குளோவார்ம் (Glowworms) எனும் ஒளிரும் புழுக்களால் நீலநிறத்தில் ஒளிர்கின்றன. இக்காட்சியைப்  பார்க்கவே உலக நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குகைகளைப் பாதுகாக்க அதன் வெப்பநிலையும் அதிலுள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவும் அரசால் சோதிக்கப்பட்டு வருகிறது. வெயிட்டோமோ குகையின் மேற்புர கூரையிலிருந்து வளரும் பாறைகளுக்கு விழுதுப்பாறை (Stalactites) என்று பெயர். கீழ்ப்புறத்திலிருந்து செங்குத்தாக வளருபவைக்கு புற்றுப்பாறை (Stalagmites) என்று பெயர். மழைநீர் மற்றும் பாறைகளிலுள்ள கனிமங்களின் சேர்க்கையால், வினோதமான பாறை அமைப்புகள் உருவாகின்றன.  ஒளிரும் புழுக்கள் முழு வளர்ச்சி பெற்றால், ஃபங்கஸ் நாட் (Fungus gnat) இன வகை பூச்சியாக உருமாறுகிறது. இப்பூ

காதில் ராஜா சார் இசை கேட்கிறதா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி சிலசமயங்களில் இளையராஜா பாடல்கள் என் மனதைவிட்டு போகமாட்டேன்கிறது. அதையே பாடிக்கொண்டிருக்கிறேன். என்ன காரணம்? மருத்துவர்கள் வாயிலிருந்து வந்து விழும் சொல் என்றால் இதனை சப்வோகலைசேஷன் என்பார்கள். நாம் நமக்குள் பேசிக்கொள்வது, பாடலைப் பாடிக்கொள்வது போன்ற நிலை. பாடலைப் பாடிக்கொண்டே இருப்பது போன்று உங்களுக்குத் தோன்றினால், குறுக்கெழுத்துப்போட்டி, புதிர்கள் என ஏதேனும் ஒன்றில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். மூளைக்கொதிப்பு அடங்கிவிடும். இதிலும் உங்களுக்கு ராஜா சார் பாடல் கேட்பது தீரவில்லை என்றால் நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. நன்றி: பிபிசி