காதில் ராஜா சார் இசை கேட்கிறதா?
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
சிலசமயங்களில் இளையராஜா பாடல்கள் என் மனதைவிட்டு போகமாட்டேன்கிறது. அதையே பாடிக்கொண்டிருக்கிறேன். என்ன காரணம்?
மருத்துவர்கள் வாயிலிருந்து வந்து விழும் சொல் என்றால் இதனை சப்வோகலைசேஷன் என்பார்கள். நாம் நமக்குள் பேசிக்கொள்வது, பாடலைப் பாடிக்கொள்வது போன்ற நிலை.
பாடலைப் பாடிக்கொண்டே இருப்பது போன்று உங்களுக்குத் தோன்றினால், குறுக்கெழுத்துப்போட்டி, புதிர்கள் என ஏதேனும் ஒன்றில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். மூளைக்கொதிப்பு அடங்கிவிடும். இதிலும் உங்களுக்கு ராஜா சார் பாடல் கேட்பது தீரவில்லை என்றால் நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
நன்றி: பிபிசி