இடுகைகள்

சூழலியல் - கங்கை! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கங்கையை அழிக்கும் அரசியல்!

படம்
கங்கை ஏன் அழுகிறாள்? – பாஜக அரசு இந்தியாவுக்கு வரும் பல்வேறு வெளிநாட்டு அதிபர்களுடன் கங்கைக்கு பயபக்தியாக ஆரத்தி எடுத்து ரூ.4 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை செயல்படுத்தினாலும் முன்பைவிட கங்கையின் மாசுபடும் அளவு அதிகரித்து வருவது முகத்திலறையும் நிஜம். குடிக்க, குளிக்க, வீட்டுப்பயன்பாடு என எதற்கும் லாயக்கில்லாத நீராக கங்கை மாறியுள்ளதற்கு என்ன காரணம்? இயற்கை கெட்டாலும் வணிக பெருக்கும் பேராசை லட்சியம்தான்.   அண்மையில் பேராசிரியரும் சுற்றுச்சூழலியலாளருமான   ஜி.டி.அகர்வால், கங்கையை சுத்தப்படுத்த அரசை வற்புறுத்தி 112 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தது அரசின் கண்முன்னே நடந்த அவலம். மக்களின் நலன்களைப் பற்றி கவலைப்படாத அரசு, குற்றுயிராக துடிக்கும் நதிக்காக மட்டும் என்ன செய்துவிடும்? ரூ.5 ஆயிரத்து 523 கோடி ஒதுக்கப்பட்ட கங்கைக்கான நிதியில் 2014-18 வரையில் ரூ.3 ஆயிரத்து 867 கோடிரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தொழிற்சாலை பெருக்கம் காரணமாக கங்கை நீரிலுள்ள ஆக்சிஜன் அளவு(DO) தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் விளைவாக, இதில் வாழும் மீன்கள், தாவரங்கள் அனைத்தும் அழிந்து வருகின்றன. ஒரு லிட்