உண்மைகளை வெளிப்படையாக பேசும் பிரபாகரனின் நேர்காணல் நூல்! - தமிழீழம் என் தாகம்
தமிழீழம் என் தாகம் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பேட்டி தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியீடு இந்தியாவில் வெளியாகும் சண்டே என்ற பத்திரிகைக்காக பத்திரிகையாளர் அனிதா பிரதாப் எடுத்த நேர்காணல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இருபது பக்கங்களைக் கொண்ட நூல். பிரபாகரன் அவர்களே கேள்விகளுக்கு பதில் கூறியதால் நூல் முக்கியத்துவம் பெறுகிறது. மற்றபடி பத்திரிகையாளர் அனிதா பிரதாப் கேட்ட கேள்விகள் அனைத்துமே அரசு, ராணுவத்திற்கு விடுதலைப்புலிகள் அமைப்பு பற்றிய தகவல்களைக் கொடுப்பது போலவே உள்ளது. கேள்விகள் தெளிவாகவும் இல்லை. நேர்மையாகவும் இல்லை. கெரில்லா போர் முறையைப் பற்றி கேள்வி கேட்டுவிட்டு இயக்கத்தின் கொள்கை என்னவென்று ஒரு கேள்வி. விடுதலை அல்லது புரட்சி இயக்கங்கள் பெரும்பாலும் இடதுசாரி கொள்கையை மையமாக கொண்டவை. இதைக்கூடவா பத்திரிகையாளர் அறியாமல் இருப்பார்? இல்லை அதை வேண்டுமென்றே கேட்கிறாரா என்று தெரியவில்லை. இன்னொரு இடத்தில் இயக்கத்திற்கு நிதி, ஆயுதம் கொடுத்து உதவும் அமைப்புகளைக் கூறச்சொல்கிறார். அதற்கு பிரபாகரன் பதில் கூற விரும்பவில்லை என்று கூறி கடக்கிறார். விடுதலை இயக்...