இடுகைகள்

ஆஷா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனநல பிரச்னையால் தவிக்கும் இந்தியா!

படம்
pinterest பொதுவாக உடல்நல பிரச்னைகளையே இந்தியர்கள் பெரிதாக எடுத்துகொள்வதில்லை. ஏதாவது ஒன்றிரண்டு மருந்துகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு வேலை பார்ப்பார்கள். ஆனால் இப்போது மன அழுத்தம் சார்ந்த தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதுபற்றிய கவனமும் தேவை என வல்லுநர்கள் எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். மகாராஷ்டிரத்தால் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 1300 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இறப்பதற்கான காரணம் எதுவாக இறந்தாலும் இப்படி அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோவது ஆபத்தான அறிகுறி. அங்குள்ள யவட்மால் மாவட்டத்தில் மட்டும் ஜூலை வரை 139 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலைகளைத் தடுக்க பிரேர்னா பிரகல்ப் எனும் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இங்குள்ள பதினான்கு மாவட்டத்தில் ஆஷா பணியாளர்கள் இதற்கான பணியாற்றி வருகின்றனர். முழுமையான உளவியலாளர்கள் இத்திட்டத்திற்கு இன்னும் நியமிக்கப்படவில்லை. அறுபதாயிரம் ஆஷா பணியாளர்கள் எப்படி தங்களின் பணிச்சுமையோடு இப்பணியை செய்வார்கள் என்று தெரியவில்லை. இதில் பாதியளவிலான பணியாட்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.