இடுகைகள்

அனுபமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெருந்தொற்று ரகசியம் பொதிந்த கிருஷ்ண ஆபரணத்தை மீட்க செல்லும் மருத்துவர்! கார்த்திகேயா 2 - சந்து மாண்டெட்டி

படம்
  கார்த்திகேயா 2 இயக்கம் சந்து மாண்டெட்டி இசை கால பைரவா ஒளிப்பதிவு கார்த்திக் கட்டமனேனி தனியார் மருத்துவமனையில் வேலை செய்பவன் கார்த்திக். கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகன். அவன் அந்த மருத்துவமனையில் புகும் பாம்புகளை உயிருடன் பிடித்து அகற்றுவதில் திறமையானவன். இப்படி இருக்கும்போது ஒருநாள் அவன் செய்யும் செயலால், அவனுக்கு வேலை பறிபோகிறது. பிறகு, அவன் அம்மா கூறியதன் பேரில் நேர்த்திக் கடனை நிறைவேற்ற துவாரகா செல்கிறான். அங்கு சென்று விஷ்ணுவுக்கான நேர்த்திக்கடனை செய்ய நினைக்கிறாள் கார்த்திக்கின் அம்மா. இன்னொருபுறம், விஷ்ணுவின் மறைத்து வைக்கப்பட்ட மூன்று ஆபரணங்களைத் தேடி எடுத்தால் அதிலுள்ள விஷயங்களை வைத்து பெருந்தொற்று பிரச்னையை சமாளிக்க முடியும் என அகழ்வராய்ச்சியாளர்  நம்புகிறார். இவரை பின்பற்றி விஷ்ணுவின் ஆபரணங்களைத் திருடி அதை வைத்து மருந்து தயாரித்து லாபம் பார்க்க ரகசிய மருத்துவக்குழு ஒன்று முயல்கிறது.  கார்த்திக் எப்படி தனது அனுபவங்களின் வழியாக நாத்திகனாக இருந்து ஆத்திகனாக மாறுகிறான் என்பதே காட்சி ரீதியான கதை. ஆனால் இறுதிக் காட்சியில் பேசும்போது, அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுதான். நம்பிக்கையால்

காதல் யுத்தமா, கடத்தல் யுத்தமா-கிருஷ்ணார்ஜூனா யுத்தம்

படம்
indiaglitz கிருஷ்ணார்ஜூனா யுத்தம் மெரலபாக காந்தி கார்த்திக் கட்டமனேனி ஹிப்ஹாப் தமிழா tollywood.net சித்தூர் கிருஷ்ணா, செக் நாட்டின் பிராக்கில் வசிக்கும் ராக்ஸ்டார் அர்ஜூன்  இரண்டு நாடுகளில் வசிக்கும்  இருவருக்கும் காதல் வருகிறது. அது கைகூடியதா என்பதுதான் 2.30 மணிநேரம் நாம் பார்க்கவேண்டிய இப்படத்தின் கதை. படத்தில் நானி, ஹிப்ஹாப் தமிழா தவிர சொல்லிக்கொள்ளும்படி ஏதுமில்லை. காமெடி படத்தை காப்பாற்றியிருக்கும். ஆனால் அந்த நேரத்தில்தான் மெரலபாக காந்தி படத்தில் கதைன்னு ஒண்ணு வேணுமே ப்ரோ என நினைத்திருக்கிறார். indiaglitz பெண்களை கடத்தி துபாய் ஷேக்குகளுக்கு விற்கும் மஸ்தி வேலையை வில்லன் கூட்டம் செய்கிறது. அதில் மாட்டும் காதலிகளை எப்படி சித்தூர் கிருஷ்ணா, ராக்ஸ்டார் அர்ஜூன் காப்பாற்றி நமக்கு கல்யாணச்சோறு போடுகிறார்கள் என்பதுதான் க்ளைமேக்ஸ். காதல் நீளமானதில் கடத்தல் விஷயங்கள் எக்ஸ்ட்ராவாக தொங்குகின்றன. எனர்ஜி குறையும்போதெல்லாம்  கோவை ஆதி இசை மூலமாக பார்த்துக்கலாம் பாஸ் வாங்க என நம்பிக்கை கொடுக்கிறார். மற்றபடி சித்தூர் கிருஷ்ணா, ராக்ஸ்டார் அர்ஜூன் இரண்டு பேரி