காதல் யுத்தமா, கடத்தல் யுத்தமா-கிருஷ்ணார்ஜூனா யுத்தம்
indiaglitz |
கிருஷ்ணார்ஜூனா யுத்தம்
மெரலபாக காந்தி
கார்த்திக் கட்டமனேனி
ஹிப்ஹாப் தமிழா
tollywood.net |
சித்தூர் கிருஷ்ணா, செக் நாட்டின் பிராக்கில் வசிக்கும் ராக்ஸ்டார் அர்ஜூன் இரண்டு நாடுகளில் வசிக்கும் இருவருக்கும் காதல் வருகிறது. அது கைகூடியதா என்பதுதான் 2.30 மணிநேரம் நாம் பார்க்கவேண்டிய இப்படத்தின் கதை.
படத்தில் நானி, ஹிப்ஹாப் தமிழா தவிர சொல்லிக்கொள்ளும்படி ஏதுமில்லை. காமெடி படத்தை காப்பாற்றியிருக்கும். ஆனால் அந்த நேரத்தில்தான் மெரலபாக காந்தி படத்தில் கதைன்னு ஒண்ணு வேணுமே ப்ரோ என நினைத்திருக்கிறார்.
indiaglitz |
பெண்களை கடத்தி துபாய் ஷேக்குகளுக்கு விற்கும் மஸ்தி வேலையை வில்லன் கூட்டம் செய்கிறது. அதில் மாட்டும் காதலிகளை எப்படி சித்தூர் கிருஷ்ணா, ராக்ஸ்டார் அர்ஜூன் காப்பாற்றி நமக்கு கல்யாணச்சோறு போடுகிறார்கள் என்பதுதான் க்ளைமேக்ஸ். காதல் நீளமானதில் கடத்தல் விஷயங்கள் எக்ஸ்ட்ராவாக தொங்குகின்றன.
எனர்ஜி குறையும்போதெல்லாம் கோவை ஆதி இசை மூலமாக பார்த்துக்கலாம் பாஸ் வாங்க என நம்பிக்கை கொடுக்கிறார். மற்றபடி சித்தூர் கிருஷ்ணா, ராக்ஸ்டார் அர்ஜூன் இரண்டு பேரின் லவ்வும் பவுன்ஸ் பிஸ்கெட் போல க்ரீம் போல ஒட்டவே இல்லை.
Greatandhra.com |
அனுபமா, ருஸ்கர் தில்லான் இருவரும் எப்போதும்போல லூசு பெண்கள்தான். ருஸ்கர் டாக்டருக்கு படித்த, பார்க்கும் விலங்குகளின் அறிவியல் பெயர்களை சொல்லித் திரியும் வெள்ளந்தி பொண்ணாக்கி விட்டார்கள். ஆனால் அவருக்கு ஊர் முழுக்க பெண்களை கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்கும் கிருஷ்ணா மீது அப்படி ஒரு லவ் வருகிறது.
எப்படின்னு கேட்டீங்கன்னா? ஹிப் ஹாப் தமிழாவை மூக்கால் பாட விட்டுருவோம் ஜாக்கிரதை. நானிக்காக நானி ரசிகர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய படம். இரண்டு கேரக்டர்கள் என்றால் மெனக்கெட்டு நடிக்க வேண்டாமா? தலையை கலைத்துவிட்டு சீவாது வந்தால் கிருஷ்ணா, பேண்ட் கட்டியிருந்தால் அர்ஜூன் என்றால் கைசூப்புகிற குழந்தை கூட சிரிக்குமே நானி!
- லோக்கல் ப்ரூஸ்லி